ஆசை என்னும் பாத்தி கட்டி
காதல் என்னும் நாற்று நட்டு
கண்ணுறக்கம் இல்லாமல்
காத்திருந்தேன் -எதிர்
பார்த்திருந்தேன்
கண்ணா நீ வரவில்லை
யமுனை நதி ஓரத்திலே
யாருமில்லா நேரத்திலே
உன் வேணு கானம்
கேட்கும் என்று காத்திருந்தேன்
காற்று வீசும் பொழுதிலும்
உடல் வேர்த்திருந்தேன்
கன்னத்திலே கன்னம் வைத்து
கனியிதழில் முத்தம் வைத்த
கன்னி என்னை
கரைத்திடுவாய் என்றிருந்தேன்
கண்ணா உன்றன் கைபட நான்
தவம் கிடந்தேன்
கற்பூரம் கரைந்ததைப் போல
என் காலங்களும் கோலங்களும்
கரைந்தன
கனவுகளும் நினைவுகளும்
மறைந்தன
இன்னும் நீ வருவாய் என்று
எதிர்பார்த்து எதிர்பார்த்து
என் ஊனும் உயிரும்
உருகி உருகி நின்றன
ஆண்டாளும் மீராவும்
உன்னை அடையவில்லையா?
பாமாவும் ராதாவும்
உன்னை தீண்டவில்லையா.?
அடிமை என்றன் காதலை நீ
அறியவில்லையா?
மாண்டாலும் மறுபடியும்
பிறந்து வருவேன் - உன்
மடிமீது தலை சாய்க்க
பறந்து வருவேன்
குருஜி