எனக்கே ஆச்சரியம்
பிறப்பு என்று எதைச் சொல்வது?
தாயிடம் இருந்து
பிரசவிக்கப் படுகிறோமே
அது பிறப்பா?
தகப்பன் என்னை வளர்க்கிறாரே
அது பிறப்பா?
ஆசிரியன் ஞானத்தை உபதேசிக்கிறானே
அது பிறப்பா?
எதுதான் எனது நிஜப்பிறப்பு ?
ஜீவனாய் இருப்பதுதான்
பிறப்பென்றால்
நத்தையும் நாயும் பிறக்கிறதே !
பிள்ளைகள் பெறுவதுதான் பிறப்பென்றால் -
பன்றியும் பாம்பும் பெறுகிறதே
வழைந்து நெழிவது
பிறவி சிறப்பென்றால்
புழுவாய் நான் கிடக்கலாமே?
முன்னுறு நாட்கள்
கருவில் இருந்து
பிறந்து விழுவது
என் பிறப்பல்ல !
பன்னரும் நூல்கலைகள்
கற்றுணர்ந்து
இருந்து மகிழ்வதும் பிறப்பல்ல
கொடி படை மாளிகை
கொலுவேறி
கொண்டாடி மகிழ்வதும்
எனது பிறப்பல்ல
உனது இனிய குழலிசையில்
கூடிகளிப்பதே பிறப்பாகும்
உனது திருவடி நிழலினிலே
தலைசாய்த்து இருப்பதே பிறப்பாகும்
உனது கீதை வழி நடந்து
வாழ்வாங்கு வாழ்வதே
உண்மைப் பிறப்பாகும்
அதுவே எனது
பிறந்த தினமாகும்