Store
  Store
  Store
  Store
  Store
  Store

முட்டையில கோழி குஞ்சு - கவிதை



முட்டையில கோழி குஞ்சு
முற்றத்தில முருங்கை பூவு
குட்டையில நீந்தும் மீனு
குருவி கொத்தும் கொய்யாபழம்
அத்தனையும் உன் மொகமாய்
ஆனதைய்யா - என்
ஆசையென்னும் ஊஞ்சலும் ஆடுதையா

கூரைமேலே முல்லைக் கொடி
கூந்தலிலே ரோசாப்பூ
ஊருக்குள்ள கொண்டாட்டம்
உள்மனசில் போராட்டம்
கண்ணிரண்டும் உன் வரவை
தேடுதைய்யா- என்
காதுக்குள்ளே உன் சிரிப்பு
கேட்குதைய்யா

உச்சி வெயில் நேரத்திலே
உடம்பு வேர்க்கும் சமயத்திலே
பச்சை வயல் வரப்பினிலே
பம்பரம் சுத்தையிலே
இச்சை கொண்ட குயிலுகுஞ்சு
பறக்குதைய்யா- உன்
இசை கேட்ட எம்மனசு
உருகுதைய்யா

சத்தியமா சொல்லுகிறேன்
சரித்திரத்தில் எழுதிவையி
புத்தியுள்ள உன் ஆத்தா தான்
புதுப்பொண்ணு எனக்கு
ஆரத்தி எடுக்கப்போரா
ஆரத் தழுவப்போரா
மயிலக்காளை உனக்கே தான்
மாலையிட்டு வாழப்போரேன்

குருஜி

Contact Form

Name

Email *

Message *