நம்மீது அன்பு வைத்திருப்பவர்கள் எத்தனை பேர் என்று நமக்கு நன்றாக தெரியும். நம்மிடம் நேரடியாக அறிமுகம் இல்லாத நபர்கள் கூட அன்பு பாராட்டினால் அது எப்படியோ ஒருநாள் தெரிந்துவிடும். ஆனால் நம்மை வெறுப்பவர்கள் நம்மை பார்த்தாலே எரிச்சல் அடைபவர்கள் நமது வளர்ச்சியை கண்டு பொறாமை அடைபவர்கள் யார் யாரென்று நமக்கு துல்லியமாக தெரியுமா? அதை சரியாக கணக்கிட நமக்கு இயலுமா? நிச்சயம் இயலாது காரணம் நம்மிடம் தேன் சொட்ட சொட்ட பேசுபவர்கள் கூட உள்ளுக்குள் விஷத்தை மறைத்து வைத்திருக்கலாம் அது நமக்கு தெரியாது அதனால் தான் கவியரசு கண்ணதாசன் பாயும் புலியின் கொடுமையை இறைவன் பார்வையில் வைத்தானே இந்த பாழும் மனிதனின் கொடுமையை இறைவன் போர்வையில் மறைத்தானே இதய போர்வையில் மறைத்தானே என்று அழகாக பாடுகிறார்.
இங்கிதமாக பேசி இம்சை செய்பவர்கள் தனி மனிதர்களுக்கு பரவாயில்லை எப்படியோ சிற்சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடலாம். ஆனால் இதே நிலைமை ஒரு தேசத்திற்கு ஏற்பட்டால் அது மிகப்பெரிய கடினமான விளைவுகளை தருமென்று வரலாறு நமக்கு தெளிவாக கூறுகிறது.
நமது இந்தியாவிற்கு பகைநாடுகள் எதுவென்று கேட்டால் கண்ணை மூடி கொண்டு குழந்தைகள் கூட பாகிஸ்தான் என சொல்லிவிடுவார்கள் பாகிஸ்தானை பற்றி அந்த அளவிற்கு நமது அரசுகளும் ஊடகங்களும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வைத்திருக்கிறார்கள் தீவிரவாதி பயங்கரவாதி என்று கூறியவுடனே அவன் பாகிஸ்தானியா என்று கேட்கும் அளவிற்கு பாகிஸ்தான் என்ற இந்திய எதிரி பிரபலமாக இருக்கிறான். பாகிஸ்தான் நமது பங்காளி தான் நேற்றுவரை இந்தியாவின் ஒரு அங்கமாக இருந்த நிலப்பகுதி தான் இன்று பாகிஸ்தான் என்ற தனிநாடாக உருவாகி இருக்கிறது
நமது பார்வையில் பாகிஸ்தான் மிகவும் கெட்ட நாடு ஆனால் ஒரு பாகிஸ்தானி பார்வையில் இந்தியா எப்படிப்பட்ட நாடு? பலமுறை அதன் இராணுவம் நம்மிடம் தோற்று இருக்கிறது. அவமானகரமான தோல்விகள் பலவற்றை அடைந்திருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக இந்தியா பாகிஸ்தானை இரத்தம் சொட்ட சொட்ட இரண்டு துண்டாக வெட்டி கூறு போட்டிருக்கிறது. இதனால் சாதாரண பாகிஸ்தான் பிரஜைகள் கூட இந்தியா மீது பகமை பாராட்டுவது இயல்பு ஒருவகையில் அது நியாயமும் கூட
சீனாவை எடுத்து கொள்ளுவோம் அவன் தான் நமக்கு மிக முக்கிய எதிரி அவனுக்கும் நமக்கும் சண்டை துவங்கி பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டது சீன மன்னர்களாக இருக்கட்டும் அதன்பிறகு வந்த நிலசுவாந்தார்கள் ஆட்சியாளர்களாக இருக்கட்டும் இப்போது இருக்கும் பொதுவுடைமைகாரர்களாக இருக்கட்டும் அனைவருமே இந்தியாவை பொது எதிரியாக கருதுகிறார்கள். இந்திய எதிர்ப்பு என்பது சீனர்களின் இரத்தத்தில் கலந்ததாகும். சீனாவும் பாகிஸ்தானும் நமது அண்டைநாடுகள் அவர்கள் மீது நாமோ நம் மீது அவர்களோ எதிர்ப்பு பாராட்டுவது ஒன்றும் அதிசயம் இல்லை. ஆனால் எந்த வகையிலும் சம்மந்தமே இல்லாத சில நாடுகள் இந்தியாவை எதிரியாக கருதுவது ஆச்சரியமாக இருக்கிறது.
நாம் அனைவருமே அரசியல் பேசுகிறோம் உள்ளூர் அரசியல் வெளியூர் அரசியல் வெளிநாட்டு அரசியல் என்று எத்தனையோ வகையான அரசியலை நமது சொந்த விருப்பு வெறுப்பு அடிப்படையில் பேசுவோம். ஆனால் என்றாவது ஒருநாள் நம்மை அறியாமலே கூட துருக்கியை பற்றி ஒருநாளாவது பேசி இருப்போமா? அந்த நாட்டு அரசியல் நிலவரம் என்னவென்று நம்மில் எத்தனை பேர் கவனம் செலுத்தி இருப்போம் நிச்சயம் அப்படி பட்டவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால் அந்த துருக்கி நமது கவனத்திற்கே வராத துருக்கி நம்மை பகை நாடாக கருதுகிறது.
ஓட்டோமான் பேரரசு இருந்த போதும் சரி அங்கே இராணுவ புரட்சி ஏற்பட்டு நாத்திக சர்வதிகார அரசாங்கம் உருவான போதும் சரி இன்று ஆட்சி செய்யும் இஸ்லாமிய அரசாங்கமாக இருந்தாலும் சரி துருக்கியின் அரசியல் நிகழ்வுகள் இந்தியாவை நேரடியாக பாதித்தது என்று கூற இயலாது. அதை போல நம்மால் அவர்களுக்கு தொல்லை ஏற்பட்டது என்றும் கருத இயலாது. ஆயினும் துருக்கி நம்மை வெறுப்பதற்கு என்ன காரணம்? ஆரம்பத்தில் சர்வதிகார அரசு துருக்கியில் இருந்த போது அது சோவியத் யூனியனின் செல்ல பிள்ளையாக இருந்தது. ஆசியாவின் நிலப்பகுதியிலும் ஐரோப்பிய நிலப்பகுதியிலும் எல்லைகளை கொண்டிருந்த துருக்கியின் நட்பு ஐரோப்பிய அரசியலில் மூக்கை நுழைப்பதற்கு ரஷ்யாவிற்கு நல்ல வாய்ப்பாக இருந்தது. ஆனாலும் ரஷ்யா இந்தியவிடத்தில் வைத்திருந்த முழுமையான ஆதரவை துருக்கி மீது வைக்கவில்லை. காரணம் துருக்கி பொதுவுடைமை பேசினாலும் அதன் இரத்தத்தில் இஸ்லாமிய அடிப்படை வாதம். ஓடுவதை ரஷ்யா உணர்ந்தே இருந்தது. இந்த அடிப்படை காரணத்தை புரிந்து கொண்ட துருக்கி இந்தியா தனது மறைமுக எதிரி இந்தியாவின் வளர்ச்சி நம்மை பாதிக்குமென்று கருதியது. அதன் அடிப்படையிலேயே அந்த நாட்டு மக்கள் மத்தியில் இந்திய எதிர்ப்பை அது வளர்த்தது. மேலும் பாகிஸ்தானோடு நமக்குள்ள சண்டையை அதில் நமது வெற்றியை துருக்கிய அரசாங்கத்தால் ஏற்றுகொள்ள முடியவில்லை எனவே இன்றுவரை அது நம்மை விரோதியாகவே பார்க்கிறது.
அடிப்படையில் துருக்கி ஒரு இஸ்லாமிய நாடு அதனால் அவர்கள் நம்மை வெறுக்கிறார்கள் என்று கருதினாலும் கூட கனடா நாட்டு மக்கள் இந்தியாவை விரோதியாகவே காண்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அது தான் உண்மை இந்தியா இலங்கை தவிர தமிழர்கள் மிக அதிகமாக வாழுகிற நாடு கனடா. கனடா நாட்டு அரசாங்கமே பொங்கல் விடுமுறையை அறிவித்திருக்கிறது அது மட்டுமல்ல அந்நாட்டில் பேருந்து போக்குவரத்திற்கு தமிழ் மொழியை பயன்படுத்துகிறார்கள். அந்நாட்டு அதிபர் கூட தனது குடும்பத்தோடு தமிழர் பண்பாட்டு ஆடைகளான வேஷ்டி, சட்டை, சேலை அணிந்து காட்சி கொடுத்தார்கள் அப்படிப்பட்ட கனடா நாடா இந்தியாவை எரிச்சலாக பார்க்கிறது என்று நமக்கு தோன்றும்.
ஒருவருடைய வளர்ச்சி நேரான பாதிப்பை நமக்கு தரவில்லை என்றாலும் மனதளவில் அடையாளம் சொல்ல முடியாத வெறுப்பு நமக்கு வரும். அது ஏன் என்றே நமக்கு தெரியாது. அதே போன்றது தான் கனடா நம்மீது கொள்கிற வெறுப்பாகும். அந்த நாடு உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்டதாகும். ஆனால் அதன் மக்கள் தொகை மிக குறைவு. பொருளாதார பலத்திலும் சரி இராணுவ பலத்திலும் சரி அவர்கள் முற்றிலுமாக அமெரிக்காவையே சார்ந்து இருக்கிறார்கள். பொருளாதார ரீதியில் கனேடிய மக்கள் நல்ல நிலையில் இருந்தாலும். இந்தியர்களில் அறிவு திறனோடு ஒப்பிடுகிகையில் அவர்கள் தங்களை குறைந்தவர்களாகவே கருதுகிறார்கள். பிறகு எப்படி தமிழுக்கும் தமிழர்களுக்கும் முக்கியத்துவம் தருகிறார்கள். என்று நீங்கள் யோசிக்கலாம். நன்றாக கவனிக்க வேண்டும் அவர்கள் ஸ்ரீலங்கா தமிழர்களை அரவணைக்கிறார்களே தவிர இந்திய தமிழர்களை அல்ல மேலும் அவர்கள் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடும் யூதர்களை ஒருகாலத்தளில் எப்படி வட்டி வாங்குபவர்கள் என்று கூறி விரோதித்தார்களோ அதே போலவே இந்தியர்களையும் கருதுகிறார்கள்.
பல கனேடியர்கள் இந்தியா என்றாலே பிச்சைகாரர்கள் மந்திரவாதிகள் என்றும் அங்குள்ள பெண்கள் படிக்காதவர்கள் வீட்டுக்குள்ளையே அடங்கி கிடப்பவர்கள் குழந்தைகளை கொல்பவர்கள் என்றும் நாகரீகமற்ற மதத்திற்கு சொந்தகாரர்கள் என்றும் ஜாதி வேற்றுமையில் கடைப்பிடித்து சொந்த மனிதர்களையே அடிமைகளாக நடத்துபவர்கள் என்றும் கருதுகிறார்கள். இது பழங்கால ஐரோப்பியர்கள் இந்தியாவை பற்றி கொண்ட கருத்தாகும் அதனுடைய எச்சம் இன்றும் கனடாவில் இருக்கிறது. இதனால் தான் சர்வதேச ரீதியில் இந்தியாவின் பங்களிப்பை அவர்கள் விரும்புவது இல்லை.
நம் நாட்டில் கிரிக்கெட் ரசிகர்கள் மிக அதிகம் ஆனால் உலக அளவில் கிரிகெட்டை விட கால்பந்தாட்டதிற்கே அதிகமான இரசிகர்கள் உண்டு நம் நாட்டில் ஏனோ கால்பந்தாட்டத்தை முக்கியமான விளையாட்டாக கருதுவது இல்லை நிறையப்பேர் இரசிப்பதும் இல்லை. சிறிய அளவில் இருந்தாலும் கூட இந்திய கால்பந்தாட்ட இரசிகர்கள் உலக அளவில் பிரேசில் நாட்டு கால்பந்தாட்ட வீரர்களை இரசிப்பவர்களாகவே இருக்கிறார்கள் அவர்களில் கால்பந்தை தவிர மற்றபடி அவர்களை பற்றி வேறு எந்த விஷயமும் நமக்கு தெரியாது. ஆனால் நம்மை பற்றி அவர்களுக்கு மிக அதிகமாகவே தெரியும். அதனால் தான் அவர்களும் நம்மை விரோதியாக கருதுகிறார்கள்.
பிரேசில் நம்மை விரோதிப்பது சமீபகாலத்தில் தான் அதற்கு காரணம் நமது கணிபொறி அறிவு உலகளவில் முதல் தரத்தில் இருக்கும் நமது பொறியாளர்களின் கணிப்பொறி ஞானத்தை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான அங்கிகாரத்தை இந்தியர்கள் தட்டி பரிப்பதகவே கருதுகிறார்கள். இந்தியர்களின் வளர்ச்சியும் இந்தியாவின் வளர்ச்சியும் பிரேசில் நாட்டை வளமை அடையாமல் செய்துவிடுவோம் என்று அஞ்சுகிறார்கள் அந்த அச்சம் தான் வெறுப்புக்கு காரணமாக இருக்கிறது.
உலக சரித்திரத்தை படித்தவர்களுக்கு கடந்த ஐநூறு ஆண்டுகளாக உலகத்தை ஆட்டிவைத்தது பிரான்சும் பிரிட்டனும் என்று நன்றாக தெரியும். மிக அழகிய தோற்ற முடைய பாரிஸ் நகரம் என்பது இந்தியர்களில் கனவு பொக்கிஷம் ஒருகாலத்தில் மேல்தட்டு உல்லாச பிரியர்கள் பாரிஸ் நகரத்து மதுவிடுதிகளில் ஒயின் குடிப்பதை தேவலோகத்து அமுது குடிப்பதற்கு இணையாக கருதினார்கள். இன்று கூட நமது பல சினிமா நாயகர்கள் பிரான்ஸ் சென்று தான் டுயட் பாடுவதை பார்த்து வருகிறோம்.
நமது பாண்டிச்சேரியில் வாழுகிற பல மக்கள் இன்று கூட தங்களை பிரெஞ்சு காரர்கள் என்று பெருமையாக கூறுகிறார்கள் அங்கே இருந்து வருகிற மாதாந்திர ஓய்வு ஊதியத்தை கணிசமாக பெற்று பாண்டிச்சேரி மதுகடலில் அல்ல அல்ல அலைகடலில் உல்லாசமாக பொழுதை கழிக்கிறார்கள் அப்படி நம்மில் ஒரு பகுதி மக்களுக்கு இன்பம் தருகிற பிரெஞ்ச் அரசாங்கம் இந்தியாவை விரோதமாக கருதுகிறது என்றால் அதை எப்படி நாம் எடுத்து கொள்ளுவது.
ஒருகாலத்தில் பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இந்தியா காலனி நாடாக இருந்தது நமது நாட்டில் செல்வவளத்தை இரண்டு பேருமே போட்டி போட்டு கொண்டு சுரண்டினார்கள் திருடினார்கள். அவர்களுக்குள் ஏற்பட்ட கொள்ளை அடிக்கும் போட்டியில் பிரான்ஸ் தோற்றதால் நம் நாட்டின் சில பகுதிகளை மட்டுமே அவர்களால் தக்க வைக்க முடிந்தது பிரிட்டிஷ் இந்தியாவை விட்டு போன பிறகு கூட பிரான்ஸ் இந்திய நிலபகுதியில் விட்டு தருவதில் மனம் ஒப்பாமல் இருந்தது. மக்களின் போராட்டமும் தலைவர்களின் தியாகமும் சர்வதேச நெருக்கடியும் அவர்களை இந்தியாவை விட்டு வெளியேற செய்தது. இப்படி வெளியேறியதை அவர்கள் இன்றுவரை மறக்கவில்லை தங்கள் நாட்டிற்கு இந்தியா செய்த அவமரியாதையாகவே நமது சுதந்திர போராட்டங்களை கருதினார்கள் அதை அப்படியே அவர்கள் மக்கள் மத்தியில் பிரச்சாரமும் செய்தார்கள். இதனால் தான் பாரிஸ் நகர வீதிகளில் பாரதத்திற்கு விரோதமான காற்றடிக்கிறது. பிரான்ஸ் மக்களில் அறுபது சதவிகிதம் பேர்கள் இந்தியாவை வெறுக்கிறார்கள் என்றால் அதை நம்ப முடியாது ஆனால் அது தான் உண்மை.
இந்த நாடுகளின் பெயர்கள் நமக்கு தெரிந்தது இன்னும் தெரியாமல் எத்தனையோ நாடுகள் மறைமுகமாக நம்மை பகைத்த வண்ணம் உள்ளது. உண்மையை சொன்னால் இந்தியா இன்று கொதிக்கும் எண்ணெய் கொப்பரை மேல் உற்கார்ந்து இருக்கிறது என்று சொல்ல வேண்டும். அணைக்க வருகின்ற எந்த கைகளில் ஆயுதம் இருக்குமோ நமக்கு தெரியாது அதற்காக எல்லோரையும் சந்தேகிக்கவும் இயலாது இந்திய மக்களும் இந்திய அரசாங்கமும் இத்தகைய விஷயத்தில் மிக முக்கியமாக கவனம் செலுத்த தவற கூடாது. அப்படி தவறினால் சிறிய சறுக்குதல் கூட பெரிய மாளிகையை சரித்திவிடும் என்பதை கவனத்தில் வைக்க வேண்டும்.