Store
  Store
  Store
  Store
  Store
  Store

நன்றி இல்லாத சீனா ...!


   உலகிலேயே தலைசிறந்த நடிகர் சிவாஜி கணேசன் என்று நமக்கு எல்லோருக்கும் நன்றாக தெரியும் ஆனால் அவரை போலவே நடிகர்கள் சிலர் உலகில் இருக்கிறார்கள் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ? நான் சீனர்களின் நடிப்பை பற்றி தான் பேச வருகிறேன் சிவாஜிகணேசன் நடிப்பு கலைப்பணி என்றால் சீனர்களின் நடிப்பு கொலைப்பணி என்று கூறலாம் அவ்வளவு தான் வித்தியாசம் 


ஆரம்ப காலத்தில் சீனாவில் பொதுவுடைமை புரட்சி நடந்த போது அந்த நாட்டை சர்வதேச அளவில் யாரும் அங்கீகரிக்க வில்லை ஐக்கிய நாட்டு மன்றத்தில் அவர்களை உறுப்பினர்களாக சேர்த்து கொள்ளவும் யாரும் தயாராக இல்லை பழைய சீனாவின் ஆட்சியாளர்கள் வசம் இருந்த தைவானையே நிஜமான சீனா என்று ஐநா மன்றம் கருதியது 


எல்லோராலும் ஒதுக்கப்பட்டு மூலையில் கிடந்த சீனாவை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டுமென்று அயராது பாடுபட்டவர் இந்திய பிரதமர் ஜவர்கலால் நேரு அவர் சீனாவுக்கு நாடுகள் கொடுக்கவேண்டிய ஒப்புதலுக்காக மட்டுமல்ல ஐநா மன்றத்தில் அங்கத்தினராக சீனாவை சேர்த்து கொள்ளவும் பாடுபட்டார் இது மட்டுமா ஆசிய கண்டத்தில் மக்கள் தொகையில் பரப்பளவிலும் பெரிய நாடு சீனா எனவே அதற்கு ஐநா பாதுகாப்பு மன்றத்தில் நிரந்த உறுப்பினர் என்ற அந்தஸ்தையும் வாங்கி கொடுக்க முன்னின்றார். 


நேரு அவர்களின் உலக வரலாறு என்ற புத்தகத்தை படித்தவர்களுக்கு தெரியும் அவர் சீனாவின் மேல் எத்தனை அன்பும் மரியாதையும் வைத்திருந்தார் என்று அதன் விளைவாகத்தான் இந்தோ சீனா பாய் பாய் அதாவது இந்தியாவும் சீனாவும் சகோதரர்கள் என்று உரக்க கோஷமிட்டார் 


ஒருமுறை நேருவின் சகோதரி விஜலட்சுமி பண்டிட் சீனாவுக்கு சென்று மாசேதுங்கை சந்தித்த போது மகாத்மா காந்தியை சந்தித்ததாகவே உணர்வு வருவதாக நெகிழ்ந்து கூறினார் 


இப்போது இந்தியாவில் மாமல்லபுரத்திற்கு வருகை தந்த சீன அதிபர் நமது நாட்டு பிரதமரோடு எத்தனை தோழமையோடும் மரியாதையோடும் நடந்து கொண்டு தன் நாட்டிற்கு சென்றவுடன் இந்திய எல்லையை தனது படைகளால் எப்படி ஆக்ரமிக்க முயன்றரோ அதே போன்றே நேரு காலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த சீன பிரதம மந்திரி சூ யன் லாய் இந்திய உபசரிப்பை அனுபவித்து விட்டு அதன் ஈரம் காய்வதற்கு முன்பாகவே நம் மீது போர் பிரகடனம் செய்தார் நன்றி மறப்பது என்பது சீன அரசியல் தலைவர்களின் கலாச்சாரமாகும். 


நாம் வெகுகாலமாகவே பாகிஸ்தானை நமது எதிரிநாடு என்று கருதி வருகிறோம் நமக்கும் லாகூருக்கும் எத்தனையோ போர்கள் இதுவரை நடந்துள்ளன ஆனால் அத்தனை போர்களும் பாகிஸ்தானை பகடைகாயாக வைத்து சீனா நடத்தியது என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். சீனாவிற்கு அது புரட்சியில் வென்ற நாளிலிருந்தே ஒரு கனவு இருக்கிறது உலக முழுவதும் தனது ஆளுமையின் கீழ் வரவேண்டும் தான் ஒருவனே தன்னிகரற்ற தலைவனாக வலம் பெற வேண்டும் என்பது தான் அந்த அபாய கனவு. 


சின்னஞ்சிறிய திபெத் நாட்டை தட்டி கேட்க யாருமே இல்லை என்று எடுத்து விழுங்கி ஏப்பம் விட்டதற்கு மிக முக்கிய காரணம் சீனாவின் வல்லரசு கனவே ஆகும். மலைமேல் இருக்கின்ற திபெத்தை வளைத்து விட்டால் சுலபமாக இந்திய பெருங்கண்டத்தை தாக்கி தன்னோடு இணைத்து கொள்ளலாம். மற்ற சிறிய நாடுகளையும் வரைபடங்களிலிருந்து மறைத்து விடலாம். என்று திட்டமிட்டே செயல்பட்டு வருகிறது. 


நமது இந்தியாவில் பண்பாட்டோடும் கலாச்சாரத்தோடும் மத வழிபாட்டோடும் பின்னி பிணைந்தது நேபாள நாடாகும் நேபாளத்திற்கும் நமக்கும் உள்ள உறவு பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது இன்னும் சொல்ல போனால் இரண்டும் ஒரே நாடாகும். இன்று கூட நேபாளிகள் இந்தியாவில் தொழில் செய்வதும் இந்திய பிரஜைகள் நேபாள நாட்டில் நிலம் வாங்கி விவசாயம் செய்வதும் நடந்து வருகிறது. இதுமட்டுமல்ல பெண்ணெடுத்து பெண் கொடுப்பதும் நமக்குள் சகஜமான நிகழ்வாகும். 


அப்படிப்பட்ட நமது சகோதரரான நேபாள நாட்டை அங்குள்ள சில அரசியல் வாதிகள் துணைகொண்டு இன்று நமக்கு எதிரிநாடாக மாற்றியதோடு மட்டுமல்லாது அதை நமக்கு எதிராக முண்டா தட்டும் அளவிற்கு உசுப்பி விட்டிருக்கிறார்கள். 


நம்மை பார்த்தால் அஞ்சி பதுங்குகிற இலங்கைக்கு பெளத்தனுக்கு பெளத்தன் துணை என்று பாசாங்கு காட்டி அளவுக்கு அதிகமான பணத்தை கொடுத்து இந்தியாவின் பகைநாடு என்ற வகையில் இலங்கையை மாற்றி இருக்கிறார்கள் பாகிஸ்தானை பற்றி கேட்கவே வேண்டாம் அது மகுடி ஊதும் யாருக்காக வேண்டுமானாலும் ஆடுகின்ற நாகமாகும். அந்த நாகம் இன்று சீனாவின் கழுத்தில் அமர்ந்து கொண்டு நம்மை பார்த்து நலமா என்று கேட்கிறது என்றால் அதற்கு காரணம் சீனாவே ஆகும். 


சோறு கொடுப்பவனுக்கு கால் செருப்பாக கூட கிடப்பது நமது மரபாகும். ஆனால் உண்ண கொடுத்தவன் உயிரை பறிப்பது சீனாவின் இயல்பாகும். இன்று சீன பொருட்களை புறக்கணியுங்கள் என்று கூறுகின்ற இந்திய அரசு தான் சீன வாணிபத்திற்கு கதவை திறந்து விட்டது என்பதை நாம் மறக்க முடியாது ஆனால் வியாபாரம் நடத்த இடம் கொடுத்தவனின் வீட்டு கூரையிலே நெருப்பு வைக்கும் காரியத்தை சீனா செய்கிறது. 


இந்திய மக்களாகிய நாம் அதை உணர்ந்து சீனா சம்மந்தப்பட்ட எல்லா வற்றையும் புறக்கணிக்க வேண்டும் சிலர் கேட்கலாம் சீன பொருட்களை இறக்குமதி செய்வதை ஒட்டுமொத்தமாக நிறுத்திவிட வேண்டியது தானே என்று ஆனால் சர்வதேச அளவில் உள்ள வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டபிறகு எந்த நாட்டின் வணிகத்தையும் அவ்வளவு விரைவில் தடைசெய்துவிட முடியாது. இது உலகநாடுகள் அனைத்திற்கும் உள்ள பொது விதியாகும். இதை கவனத்தில் கொள்ளாமல் பேசுவது சுத்தமான அரசியலாகும் 


நமது இந்திய பொருட்கள் சீனாவிற்கு ஒருசதவிகிதம் அளவிற்கே ஏற்றுமதி செய்ய படுகிறது ஆனால் சீனாவிலிருந்து பதினாறு சதவிகிதம் சரக்குகளை நாம் இறக்குமதி செய்கிறோம் அதில் தேவையற்ற ஆடம்பரமான பொருட்கள் தான் மிக அதிகம் சாதாரண மக்களாகிய நாம் சீனாவின் ஆடம்பர பொருட்களை புறக்கணித்து விட்டால் சீன வியாபாரிகள் இந்தியாவிற்கு பெருமளவில் தங்களது பொருட்களை அனுப்ப மாட்டார்கள் உலக அரங்கிலும் யாருடைய கேள்விகளுக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லாமல் நமது பொருளாதரத்தை நாம் பாதுகாத்து கொள்ளலாம். சீனாவுக்கும் பதிலடி கொடுக்கலாம்.

குருஜி





Contact Form

Name

Email *

Message *