சமீபகாலங்களில் என்னை சந்திக்க வருபவர்கள் மூன்று கேள்விகளை என்னிடம் கேட்கிறார்கள் இந்த கொரனா வைரஸ் தொல்லை எப்போது தீரும் நாட்டிலுள்ள மிக கொடுமையான பொருளாதார பிரச்சனை எப்போது முடிவுக்கு வரும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் யுத்தம் வருமா? என்பது தான் அந்த மூன்று கேள்விகளாகும்
இதுவரையில் எந்த நோயுமே கொடுக்காத மரண பயத்தை கொரனா வைரஸ் உலக மக்கள் அனைவருக்குமே கொடுத்து வருகிறது இது மனிதர்களால் உருவாக்கப்பட்டதா? இயற்கையாக வந்ததா? என்ற கேள்விகள் ஒருபுறம் இருந்தாலும் ஒட்டுமொத்த மனித குலத்தையுமே இப்படி ஒரு தாக்கும் கொடுமை படுத்துவதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? குறிப்பாக இறை சக்தியின் மஹா கோபம் கிரகங்களின் மிக கொடுமையான பலாபலன்கள் இதற்கு காரணமா? என்பது தான் இந்த கேள்விகளின் அடிப்படை என்று நான் கருதுகிறேன்.
கிரகங்களை அடிப்படையாக கொண்டு வருங்காலத்தை கணித்து பார்க்கும் போது கிடைக்கிற பலன்கள் பொதுவாக சரியானதாகவே இருக்கும் ஆனால் அந்த பலன்கள் மனிதர்களுக்கு மட்டுமே மிகப்பொருத்தமானதாக பல நேரங்களில் அமையும் உலகத்தினுடைய வருங்கால நிகழ்வுகளை அறிந்து கொள்ள வேண்டுமானால் கிரகங்களை மட்டும் கணக்கிட்டால் போதுமானது அல்ல நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களில் நிலைபாட்டையும் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படி கருத்தில் கொண்டு கணிக்கப்படும் கணக்குகள் சரியான முடிவுகளை தருமென்று விஸ்வாமித்ர மகரிஷி எழுதிய கெளசிக நாடி என்ற ஜோதிட நூலும் புலிப்பாணி சித்தர் எழுதிய நூலும் தெளிவாக சொல்லுகின்றன.
இதன் அடிப்படையில் ராகுகிரகமானது திருவாதிரை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்த மே மாதத்தோடு விஷ கிருமிகளின் தாக்கம் மனிதர்கள் மத்தியில் குறைந்து போயிருக்க வேண்டும். ஆனால் அக்னி மற்றும் வாய்வு பூதங்களின் போக்கு விஷ கிருமிகளில் தாக்கத்தை குறைப்பதாக இல்லை இதை இன்னும் தெளிவாக சொல்லுவது என்றால் ஜூலை மாதம் இறுதி வரையில் அதிகரிப்பதற்கனா வாய்ப்பு இருக்கிறதே தவிர குறையும் சூழ்நிலை இல்லை ஜூலை மாதத்திற்கு மேல் காற்றின் போக்கு மாறுபடுவதால் நுண்ணுயிரின் தாக்கம் குறைய ஆரம்பிக்கும்
உலகத்தில் செய்யப்படுகிற எந்த பூட்டிற்கும் சாவி இல்லாமல் இருப்பது இல்லை எந்த இருட்டும் இருட்டாகவே தொடர்வது இல்லை அதே போல கொடுமையான இந்த வைரசுக்கும் முடிவு என்பது உண்மை படிப்படியாக குறைய ஆரம்பித்து டிசம்பர் மாதத்தில் முற்றிலுமாக உலகத்தை விட்டே இது சென்றுவிடும்.
அதற்குள் இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியுமா? என்று ஒரு கேள்வி பிறக்கும் ஒரு உண்மையை சொல்வதாக இருந்தால் இந்த நோய்க்கு இப்போது கூட மனித குலத்திடம் மருந்து இருக்கிறது ஆனால் அது பயன்பாட்டிற்கு வராதவாறு சில அசுர சக்திகள் தடை செய்கின்றன நான் அசுர சக்திகள் என்று குறிப்பிடுவது கண்ணுக்கு தெரியாத அமானுஷ்ய சக்திகள் அல்ல கண்ணுக்கு தெரிகின்ற மனித சக்திகளே ஆகும். தங்களது சுய லாபத்திற்காக பல்லாயிரம் உயிர்கள் பலியானாலும் கூட அவர்கள் மெளனம் சாதிக்கிறார்கள் இது தான் உண்மை
இறைவன் என்பவன் கருணையானவன் என்றால் அசுரர்களில் கொடுமைகளை பார்த்து கொண்டிருக்கலாமா? என்று நமக்கு தோன்றும் காரணம் இல்லாத காரியங்கள் இல்லை இயற்கையில் ஒருபுறத்தில் அழிவு என்று ஒன்று நிகழ்ந்தால் மறுபுறத்தில் ஆக்கம் என்ற ஒன்று கண்டிப்பாக இருக்கும். இது இயற்கை விதி ஆனால் அதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டுமே தவிர அவசரபட்டால் அதற்கான விடை கிடைக்காது.
சரி இந்த வைரஸ் தொல்லையிலிருந்து ஓரளவாவது தப்பித்து கொள்ள வழி இருக்கிறதா? என்று தேடி பார்த்தால் அதர்வண வேதத்தில் ஒரு வழி சொல்ல பட்டியிருக்கிறது ஆனால் அது குறிப்பாக இந்த வைரசுக்கு என்று இல்லை எல்லாவிதமான தீய நுண்ணியிர்களை அழிப்பதற்கான வழிகளாகும்
சில கோவில்களில் மிளகாய் வற்றல் போட்டு சண்டி ஹோமம் செய்வார்களே அதே போன்று மிக சிறிதாக எளிமையாக நமது வீடுகளியே நாம் செய்யலாம் ஆல், அரசு, மா, வேம்பு, ஆகிய மரங்களில் உள்ள குச்சிகளை வேப்பெண்ணை ஊற்றி தீ வளர்த்து அதில் மிளகாய் வற்றல்களை ஆகுதிகளாக போட வேண்டும் அப்படி போடும் போது
ஓம் கிலீம் மஹா காளியே நம
என்ற மந்திரத்தை நூற்றி எட்டு முறை உச்சரித்த வண்ணம் போட்டீர்கள் என்றால் உங்கள் வீட்டிலுள்ள தீய நுண்ணுயிர்கள் மடிந்து போகும். இதை வாரத்தில் வெள்ளிகிழமை தோறும் ராகுகால நேரத்தில் ஆண்பெண் யாராக இருந்தாலும் சுலபமாக வீட்டிலேயே செய்யலாம். இது நோய்கள் நம்மை அண்டாமல் தடுக்க நமது முன்னோர்கள் சொன்ன அருமையான வழியாகும்.
இரண்டாவது கேள்வி மக்களின் பொருளாதார கஷ்டம் அல்லது நெருக்கடி எப்போது முடிவுக்கு வரும் என்பதாகும். பொதுவாகவே நம்மில் பலர் வறுமைக்கு பழக்க பட்டவர்கள் எனவே துன்பத்தை கண்டு அஞ்சுகின்ற மனநிலை நமக்கு கிடையாது. எதிர்த்து போராடும் துணிச்சல் இறைவன் நமக்கு நிறையவே கொடுத்திருக்கிறான் இருந்தாலும் இந்த தற்கால நெருக்கடி இன்னும் ஒருமாதத்தில் மாற துவங்கிவிடும் யாருக்கும் கவலை வேண்டாம்.
மூன்றாவது மிக முக்கியமான கேள்வி சீனாவோடு சண்டை வருமா? என்பதாகும் நமது தேசத்தின் கிரகநிலையின் அடிப்படையில் பார்த்தால் சண்டை வருவதற்காண சூழ்நிலை மிக குறைவாகவே இருக்கிறது. இரண்டு நாட்டு தலைவர்களும் புலிவாலை பிடித்தது போல தவிக்கிறார்கள் அவர்களது தவிப்பு ராஜதந்திர பேச்சு வார்த்தைகளின் மூலமே முடிவுக்கு வந்துவிடுமென்று நம்புகிறேன். எல்லாமல்ல இறைவனான நாராயணன் உலகத்திற்கு அன்பையும் அமைதியையும் ஆரோக்கியத்தையும் எப்போதும் தருவான்.

குருஜி