Store
  Store
  Store
  Store
  Store
  Store

பழையதை கையில் எடு புதியதை பரணில் போடு 




ழைய வாழ்க்கைமுறை என்பதை பத்தாம் பசலித்தனம் என்று நம்மில் பலர் ஒதுக்கி விடுகிறோம். காலம் எவ்வளவோ முன்னேறி விட்டது எந்த நேரத்தில் பழையகால நடைமுறைகளை கடைபிடிப்பது முடிகிற காரியமா? என்று அதற்கு விளக்கம் வேறு கொடுக்கப்பட்டுகிறது இது சரியான வழிமுறை தானா? என்று இந்த நேரத்தில் சிந்தித்து பார்க்க கடமை ஏற்பட்டுள்ளது இதை பற்றி இப்போது சிந்தனை செய்யவில்லை என்றால் வேறு எப்போது செய்தாலும் அது பொருத்தமாக இருக்காது. 


நமது பெரியவர்கள் யாரையும் தொட்டு பேச கூடாது நெருங்கி பேச கூடாது என்று கூறுவார்கள் இப்படி கூறப்பட்டது தீண்டாமை சிந்தனையின் ஒரு பகுதி என்பதை நான் மறுக்கவில்லை ஆனால் இதில் தீண்டாமை பற்றி மட்டும் இல்லை அடிப்படையான சுகாதாரமும் இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். அந்நிய மனிதன் யார் வந்தாலும் அவர்களை உடனடியாக வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டார்கள் கூடியமானவரை வாசலிலேயே பேசிவிட்டு அனுப்பிவிடுவார்கள் இது உபசரிப்பு முறைக்கு எதிரானது அல்ல வந்திருப்பவர் எந்த நிலையில் இருக்கிறார் அவரிடம் அசுத்தமான தொற்றக்கூடிய நுண்ணுயிர்கள் எதாவது இருக்க கூடும் அது நமது வீட்டிலுள்ள குழந்தைகளை பெரியவர்களை பாதிக்கலாம் அதன் அடிப்படையிலேயே வாசலில் விபரம் கேட்கும் நடைமுறை இருந்து வந்தது 


முன்பெல்லாம் வீட்டு வாசலில் சிறிய தண்ணீர் தொட்டி வைத்து அதில் சொம்பையும் வைத்திருப்பார்கள் வெளியில் சென்று வருபவர்கள் கால் கைகளை கழுவி விட்டு தான் உள்ளே வரவேண்டும் என்ற விதி கண்டிப்பாக பின்பற்ற பட்டது அதே போன்று சவரம் செய்து விட்டோ முடி திருத்தி விட்டோ நேரடியாக யாரும் வீட்டிற்குள் நுழைய கூடாது. நுழைந்தால் கிரக லட்சுமி வெளியேறி விடுவாள் என்று சொல்லபட்டாலும் கூட அதற்கு அடிப்படை காரணம் சுகதாரமே ஆகும். 


இறப்பு வீட்டிற்கு சென்று வருபவர்கள் குளிக்காமல் யாரும் வரமாட்டார்கள் அதே போல அப்போது அவர்கள் அணிந்திருக்கும் ஆடையை சலவை செய்யாமல் யாரும் தொடக்கூட மாட்டார்கள் ஆனால் இன்று நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது நாகரீகம் அவசரம் என்ற பெயர்களில் நமது மரபு முறைகளை சிறிது சிறிதாக தொலைத்து கொண்டு வருகிறோம். 


கிராமத்தில் வீட்டில் யாருக்காவது அம்மை நோய் வந்தால் யாரும் அந்த வீட்டிற்கு இரண்டு வாரம் செல்ல மாட்டார்கள் வீட்டில் இருப்பவர்கள் கூட எல்லோரும் நோயாளியை அணுகாமல் யாராவது ஒருவர் மட்டும் நோயாளிக்கான சேவைகளை செய்வார்கள் வெளியூரிலிருந்து வருபவர்கள் இந்த வீட்டில் அம்மை நோயாளி இருக்கிறார் என்று அறிந்து ஒதுங்கி கொள்ள வீட்டு வாசலில் வேப்பிலையை சொருகி வைப்பார்கள் நோயாளி படுக்கையிலும் மஞ்சள் நீர் தெளித்து வேப்பிலையை விரித்து வைத்திருப்பார்கள் இந்த சுகாதார முறையெல்லாம் நமது மக்கள் கல்லூரிக்கு சென்று படித்து வந்தது அல்ல காலகாலமாக நடைமுறையில் இருந்து வந்ததை அப்படியே கேள்வி கேட்காமல் நடைமுறைபடுத்தி வாழ்ந்தார்கள் 


கொள்ளை நோய்களான காலரா, ப்ளேக் போன்றவைகள் தாக்கும் காலத்தில் கூட மரணத்தின் எண்ணிக்கையை குறைப்பதற்கு மற்ற நாடுகளை விட அதிகமான பழக்க வழக்கங்கள் நம் மக்களிடம் இயல்பாக இருந்து வந்தது. குடிக்கும் நீரில் தான் நோய் தொற்றுகள் இருக்கிறது என்பதை அறிவியல் பூர்வமாக அறிவதற்கு முன்பாகவே தண்ணீரின் வேப்பிலை, துளசி, அருகம்புல் போன்ற மூலிகைகளை போட்டு இயற்கையான சூரிய வெளிச்சத்தில் சூடாகுமாறு வைத்து பயன்படுத்தினார்கள். தானியங்கள் பழவகைகள் மற்றும் பல உணவு வகைகள் இவற்றில் மிக சிறந்த கிருமி கொல்லியான தர்ப்பை புல்லை போட்டு வைத்தார்கள் இதனால் அவர்களது ஆரோக்கியமும் நன்றாக இருந்தது ஆயுளும் நீண்டு இருந்தது. 


அந்நியர்களிடம் உணவு வாங்கி உண்ண கூடாது தேவையில்லாமல் உணவு விடுதிகளை நாடக்கூடாது என்று அவர்கள் கூறியதன் பின்னணியில் மிகப்பெரிய காரணங்கள் மறைந்திருந்தன வழக்கமாக நாம் நமது வீடுகளில் சமைப்பதற்கும் மற்றவர் வீடுகளில் சமைப்பதற்கும் பெரிய வேறுபாடு உண்டு உதாரணமாக சிலர் சாதத்தில் உப்பு போட்டு வடிப்பார்கள் சிலர் அப்படி செய்ய மாட்டார்கள். இதை மாற்றி உண்ணும் போது வயிற்று கோளாறுகள் இயல்பாகவே ஏற்பட்டு விடும். சமைக்கப்படும் உணவில் சமைப்பவனின் இயல்பும் மறைந்திருக்கும் இது நமது மனநிலையில் தடுமாற செய்யும். 


ஒருவரை ஒருவர் கட்டி அணைப்பதும் முத்தமிடுவதும் உரசி கொண்டு நடப்பதும் நமது பண்பாட்டிற்கு முற்றிலும் விரோதமான காரியங்களாகும் நாம் பெற்ற பிள்ளைகளாக இருந்தாலும் ஒரு வயதிற்கு மேல் அவர்களை தொட்டு பேச கூடாது என்பார்கள் இவைகள் எல்லாம் ஆயிரம் அர்த்தங்களோடு வகுக்கப்பட்ட நெறிமுறைகளாகும் 


இவற்றை இன்று காற்றில் பறக்கவிட்டுவிட்டு தேவையில்லாத சீர்திருத்தங்களை பேசி அவதிப்பட்டு கொண்டிருக்கிறோம். ஆனால் மீண்டும் அத்தகைய பழைய நடைமுறைகளை புனரமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் 


முதலில் தினசரி வீட்டு வாசலில் பெருக்கி சாணமிட்டு கோலம் இடுங்கள் அடுக்குமாடி வீடுகளில் இருக்கிறோம் இங்கே எப்படி சாணம் தெளிப்பது என்று கேட்கிறீகளா? உங்கள் குடியிருப்புக்குள் நுழைவதற்கு முக்கிய கதவு பாதை இருக்கும் அல்லவா அங்கே சாணம் தெளியுங்கள் சாணத்திற்கு நகரத்திற்குள் எங்கே போவது என்று கேட்காமல் மாற்று வழியாக மஞ்சள் நீரை தெளியுங்கள் தினசரி காலை மாலை இருவேளையும் வாசல் கதவு ஜன்னல் கதவு போன்றவைகளை காற்று வரும்படி திறந்து வையுங்கள் ஏசி வெளியே கசிந்து விடுமென்று பூட்டி வைக்காதீர்கள் பிறகு உங்கள் ஆரோக்கிய பெட்டியையும் பூட்ட வேண்டிய நிலைமை வரும். வாரத்தில் இருமுறையாவது வீடு முழுவதும் சாம்பிராணி புகை போடுங்கள் தினசரி வீட்டில் விளக்கெண்ணை வைத்தோ நெய் விட்டோ தீபம் ஏற்றுங்கள் 


குறிப்பாக பெண்களுக்கு சொல்ல வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. அழகுக்கலை நாகரீகம் என்ற பெயரில் அசிங்கமாக தலையை விரித்து போட்டுகொண்டு இருக்காதீர்கள் சாவு வீட்டில் தான் நம் ஊரில் பெண்கள் தலைவிரி கோலமாக இருப்பார்கள் நீங்கள் கூந்தலை விரித்து போடுவதனால் உதிர்ந்த கேசங்கள் உணவுகளில் விழுவதற்கும் குழந்தைகளின் வயிற்றிகுள் செல்வதவற்கும் வாய்ப்பு உண்டு 


இவைகளெல்லாம் சின்ன சின்ன விஷயங்கள் தான் இவைகளை கடைபிடித்தாலே சுகாதாரம் என்பது உங்கள் வீட்டு குழந்தையாகிவிடும்.


குருஜி





Contact Form

Name

Email *

Message *