அசுர வனத்துக் காதல் - 6
மகனின் அறிவுத் திறமை விஷவர்மனுக்கு நன்றாக தெரியும் தான் அறிந்ததை ஆம் என்று சொல்வதற்கும் அறியாததை தெரியாது என்று ஒத்துக் கொள்வதற்கும் துணிச்சல் விராட கேதுவிடம் நிறம்பி கிடக்கிறது என்று உறுதியாக நம்பியவன் மிகக் கடினமான கேள்விகளை கேட்க தயாரானான்
ஒருவனின் அறிவு வளர எத்தனை கருவிகள் தேவை ?
அப்பா இந்த நேரத்தில் இது என்ன தேவையில்லாத கேள்வி?
தேவை இருக்கிறது மகனே அவசியம் இல்லாமல் கேட்கவில்லை நான் பதிலைச் சொல்லு?
நேருக்கு நேராக பார்த்து தெரிந்து கொள்ளுதல்
ஒன்று
தூரத்தில் புகை தெரிந்தால் அங்கு கண்டிப்பாக நெருப்பு இருக்கும் என்று அனுபவத்தை கொண்டு யூகித்தறிதல்
இரண்டு.மேலே சொல்லு
முன்னோர்களும் அறிஞர்களும் எழுதி வைத்த ஆவணங்களை நம்பிக்கையோடு பின்பற்றுதல்
பேஷ், மூன்று,
நமது திறமையால் வேலை செய்யும் நுண்ணுனர்வு
ஆகா அறுமை மகனே சுக்ராச்சாரியாரின் திறமையான மாணவர்களின் நீயும் ஒருவன் என்பதை நிருபித்துவிட்டாய் இப்படி நாலு கருவிகளால் அடையும் அறிவை வைத்து இந்த பிரபஞ்ச சிருஷ்டியை நீ உணர்ந்தவரையில் எனக்கு சொல்
அப்பா அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் நடைபெரும் சண்டையின் காரணத்தை கேட்டால் விஷயத்தை எங்கோ திருப்புகிறீர்களே
காரணத்தை விளக்கமாக சொல்வதற்காகத்தான் இதையெல்லாம் கேட்கிறேன் வீனாக பேசாதே கேட்பதை சொல்
ஆதியில் அண்டம் ஒரு முட்டைப் போல் இருந்தது அதற்குள் இயங்கும் சக்தி இருந்தது
அதாவது அண்டம் என்ற பிரகிருதியும் சக்தி என்ற புருஷனும் ஒன்றாக இருந்தார்கள் அவர்களை யாரும் சிருஷ்டிக்கவில்லை விளக்கமாக சொல்வதென்றால் அவர்கள் தானாக தோன்றிய விதைகள் அப்படித்தானே?
ஆமாம் அப்பா இயக்கம் வலுவடைய அண்டம் சிதறியது உலகங்கள் உருவானது
அப்படி என்றால் உலகங்களின் உருவாக்கத்திற்கு காரணம் பொருளா? சக்தியா?
வெளிச்சம் இல்லாமல் எப்படி சூரியன் இல்லையோ அப்படி சக்தி இல்லாமல் பெருள் இல்லை அதனால் உலகங்களின் தோன்றத்திற்கு இரண்டுமே காரணம் தான் ஆனால் சக்தி பொருளை தன் இஷ்டப்படி பயன்படுத்தி கொள்கிறது
அப்படியென்றால் சக்தியை அறிவு மயமானது என்று எடுத்துக் கொண்டால் தவறில்லையே
நிச்சயம் தவறில்லை அறிவும் உணர்வும் இல்லையென்றால் சக்தியின் படைப்பு இத்தனை நேர்த்தியாக இராது
சபாஷ் அப்படி என்றால் அந்த சக்தியின் பெயர் என்ன ?
நமது ரிஷிகள் விராட் புருஷன் என்று சொல்கிறார்கள் நாம் மஹாதேவர் ருத்ரன் என்று அழைக்கின்றோம்
நாம் ருத்ரன் என்று அழைப்பதும் தேவர்கள் நாராயணன் என்று அழைப்பதும் பரம்பொருளுக்கு குறியீடுகள் தானே தவிற அதுவே பிரம்மம் அல்ல அப்படித்தானே
ஆமாம் அதுதான் உண்மை
அந்த பரம்பொருள் எங்கே இருக்கிறார்?
பரம்பொருள் என்பது தனித்துவம் ஆனதா எல்லா பொருளிலும் ஊடுருவி நிற்பதா என்பதை உணர்ந்து கொள்ளும் பக்கும் எனக்கு இன்னும் வரவில்லை அதனால் என்னால் இந்த கேள்விக்கு சரியான பதிலை தர இயலாது
பக்குவம் வரவில்லை என்பதை உணர்ந்து கொள்வதே பெரிய பக்குவ நிலைதான் அந்த வகையில் உன்னைக் கண்டு மகிழ்கிறேன் ஆனால் பலர் மூடத்தனத்தின் ஊற்றுக் கண்ணாக இருந்து கொண்டே தாங்களே தான் ஞானத்தின் பிறப்பிடம் என்று பிதற்றிக் கொண்டு திரிவார்கள் அவர்களால் தான் உலகம் அழிவு நிலையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது
அப்பா இந்த இடத்தில் உங்கள் கூற்றோடு என் சிந்தனை புரண்படுவதாக உணர்கிறேன் தோன்றுகின்ற அனைத்துமே கால வீதியில் பயணம் செய்து இறுதியில் அழிந்து போவதுதானே இயற்கை நியதி அதன் அடிப்படையில் தானே உயிர்களின் தோற்றமும் முடிவும் நடந்து வருகிறது அதை மறைத்து விட்டு மூடர்களின் மேல் பழியை போடுவது என்ன தர்மம்?
மகனின் நுட்பமான கேள்வியை கேட்டு விஷ வர்மன் ஒரு நிமிடம் தடுமாறித்தான் போனான் ஆனால் தான் சொன்ன கருத்து வேறு மகன் புரிந்து கொண்ட கருத்து வேறு என்பதை அவதானித்து தனது நிலையை விளக்க முற்பட்டான் நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை அனர்த்தன வியாக்கியானம் செய்பவர்களால் ஏற்படும் விபரிதங்களைத் தான் சொல்ல வந்தேன் என்றான்
மன்னிக்க வேண்டும் தந்தையே நீங்கள் மேலே சொல்லுங்கள்
பரம்பொருளின் இருப்பை பற்றியோ இயக்கத்தை பற்றியோ விளக்கம் கூறும் அளவிற்கு என் நிலையும் உயரவில்லை இருந்தாலும் நமது முன்னோர்களான மகரிஷிகள் கூறி சென்றதை நானறிவேன் பரம்பொருளான பிரம்மம் தனது தனித்தன்மையை இழக்காமல் அதே நேரம் சகல வஸ்த்துக்களிலும் வியாபித்து இருப்பதாக சொல்கிறார்கள்
அதாவது ஒரு தீபத்திலிருந்து இன்னொறு தீபம் ஏற்றப்பட்டாலும் முதல் தீபத்தின் அளவு எப்படி குறைவதில்லையோ அப்படியே பிரம்மம் எல்லா பொருளிலும் நிறைந்திருந்தாலும் தன்னளவில் எந்த குறைபாடும் இல்லாமல் நிறைவானதாகவே இருக்கிறது அப்படித்தானே தந்தையே
ஆமாம் மிகச் சரியாக புரிந்து கொண்டாய் காணும் பொருளெல்லாம் பிரம்மம் தான் காணாத பொருட்களும் பிரம்மம் தான் இப்படித்தான் அண்ட சராசரங்கள் எல்லாம் பிரம்ம மயமாக இருக்கிறது என்று ஞானிகள் கூறுகிறார்கள் ஆனால்...
என்ன ஆனால்...?
பிரம்மம் என்பது நிலையான பொருள் அதில் மாற்றம் இல்லை மாறவும் செய்யாது ஆனால் பிரபஞ்சம் என்ற பொருள் மாறக் கூடியது ஒவ்வொறு க்ஷனமும் மாறிக் கொண்டே இருப்பதை நேருக்கு நேராக காண்கிறோம் எனவே மாறக் கூடிய பிரபஞ்சம் பிரம்மாக இருக்க முடியாது பிரமத்தோடு அதை ஒப்பிடுவது பிரமத்தை இழிவுபடுத்தும் செயலாகும் என்ற கருத்துடைய ஒரு கூட்டம் காசியப புத்திரர்களுக்கு மத்தியில் உருவானது
அடடே அப்புறம் என்னாச்சி?
கல்லுக்குள்ளும் மண்ணுக்குள்ளும் கடவுள் கிடையாது கல்லையும் மண்ணையும் வணங்காதே என்றது ஒரு கூட்டம் கல்லும் மண்ணும் கட்டையும் கூட கட வுளின் அம்சம் அவரின் சானித்தும் இல்லாத பொருளே இல்லை என்றது இன்னொறு கூட்டம் சாதாரணமாக துவங்கிய கருத்து மோதல் தான் இது ஆனால் நாளாவட்டத்தில் வீம்பாக வளர்ந்தது வார்த்தை மோதல் சில இடங்களில் கைகலப்பானது பிறகு வளர்ந்து ஆயுதச் சண்டையாகவும் மாறியது அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் கருத்து வேற்றுமை இப்படித்தான் உதயமானது
குயவன் பானை செய்கிறான் அதற்காக பானை குயவனாகுமா? அதைப் போல் உலகம் உலகத்தின் வஸ்த்துக்கள் பிரம்பனின் படைப்பு படைத்தவனை வணங்க வேண்டுமே தவிற படைக்கபட்டவைகளை வணங்க வேண்டியதில்லை என்று அரக்கர் கூட்டத்தார் உறுதியாக நம்ப ஆரம்பித்தனர்
இந்த கொள்கை சரியானது போல தோன்றுமே தவிற முழுக்க முழுக்க சரியானது அல்ல பானை தெய்வம் இல்லை என்பது சரிதான் ஆனால் மானை மண்ணால் ஆனது அந்த மண்ணை நீர் கொண்டு பிசைந்து செய்யபடுகிறது மண்ணும் நீரும் ஓட்டிக் கொள்ள சக்தி வேண்டும் அந்த சக்தி என்பதே தெய்வம் அந்த சக்தி பானையோடு இருக்கும் வரையில் தான் பானை பானையாக இருக்கும். எனவே பானையில் சக்தி உறைவதனால் பானையை தெய்வம் என்று கொண்டாடுவதில் தவறில்லை என்று நம்பியவர்களை தேவர்கள் என அழைக்கத் துவங்கினர்
விராட கேதுவின் முகத்தில் மகிழ்ச்சியின் ரேகைகள் ஓடத் துவங்கியது இதுவரை அவன் தன் இனத்தாருக்கும் தேவர்களுக்கும் பிறப்பின் அடிப்படையில் வேற்றுமையும் இருந்திருக்க வேண்டும் அதனாலேயே பகைமை வளர்ந்திருக்க வேண்டும் என்று நினைத்திருந்தான் இது மட்டுமல்ல நில ஆக்கிரமிப்பு மற்றும் அரசியல் பதவி மோதல்களும் கூட காரணமாக இருந்திருக்கலாம் என நினைத்தான்
அரக்கர்கள் உடல் பலம் மிக்கவர்கள் மனதையும் அறிவையும் விட செயல்களில் அவர்களின் உடலே முந்தி நிற்கும் எந்தவொறு பிரச்சனையிலும் நின்று நிதானமாக செயல்படதெரியாது மோதி மிதித்து காரியத்தை சாதித்துக் கொள்வதிலே ஆர்வம் ஜாஸ்த்தி பல நேரங்களில் வெற்றிக்கு அறிவை விட பலமும் வேகமும் சுலபமாக துணை செய்கிறது இதனாலேயே அரக்கர்கள் பலப் பிரயோகத்தை அதிகமாக விரும்புகிறார்கள் தேவர்கள் புத்தி பலத்தால் சாதிக்கலாம் என்று கருதி இருக்கலாம் இதனாலும் சண்டை துவங்கி இருக்கும் என்றும் நினைத்திருந்தான் ஆனால் அந்த எண்ணங்கள் அனைத்துமே தவறாக இருப்பதை இப்போது உணர்ந்தான்
விஷவர்மனின் அடுத்த வார்த்தைகளும் இவனது எண்ணத்தை மெய்ப்பது போல வெளி வந்தது அரக்கர்கள் ஏக பிரம்மம் தான் ஒரே கடவுள் அவரைத் தவிற மற்றவற்றை வழிபடுவது பெரும் குற்றம் அதை செய்யாதீர்கள் என தேவர்களை தடுத்தனர் மீறி வழிபட்டால் மீழாத நாகத்தில் வீழ்வீர்கள் என்றும் மிரட்டினர் கடவுள் கருணை வடிவானவரே தவிற தண்டனை கொடுக்கும் நீதிபதி அல்ல பார்க்கும் பொருட்கள் அனைத்திலும் இறைத்தன்மையை பார்ப்பது தவறில்லை என்று அசுரர்களின் வர்ப்புருத்தலை புறக்கணித்தனர் தேவகள் முடிவு ஓய்வே இல்லாத யுத்தம் பலத் தலைமுறையாக நடந்து வருகிறது என்று கூறி முடித்தான் அரக்கர்களின் தலைவன்