Store
  Store
  Store
  Store
  Store
  Store

மதக் கல்வி வேண்டும்





ன்புள்ள குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் 

இன்று நமது நாட்டில் மதத்தை பயன்படுத்தி பலவிதமான சிக்கல்கள் உருவாக்கப்படுகின்றன இன சண்டைகள் மொழி சண்டைகள் அரசியல் சண்டைகள் என்று எல்லாவற்றிற்குமே மதம் தான் மூலகாரணமாக இருக்கிறது. மதத்தை வைத்து மக்களை பிரிப்பதில் அந்நிய சக்திகள் மட்டுமல்ல நமது அரசியல் சக்திகளும் முன்னிலையில் நிற்கின்றன இப்படி சகல விதத்திலும் மதத்தால் பிரச்சனைகள் ஏற்படுவதனால் மதமே வேண்டாம் என்ற முடிவிற்கு ஏன் நாம் வரக்கூடாது? மதம் இல்லாமல் வாழலாம் நாடு இல்லாமல் வாழ முடியுமா? எனவே நாட்டின் நலன் கருதி மதத்தை ஒதுக்கி வைப்பது சிறப்பு என்று நான் கருதுகிறேன். இதை பற்றி உங்கள் கருத்தை அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறேன்.

இப்படிக்கு 
சரவணக்குமார் 
திண்டிவனம்.



ன்று இந்தியாவில் மதத்தை வைத்து பிரச்சனைகள் உருவாக்கபடுவதாக நீங்கள் கவலைபடுகிறீகள் உங்கள் கவலை நியாயமானது மனிதர்கள் அமைதியாக வாழ்வதற்கு எதை வேண்டுமென்றாலும் விட்டு கொடுக்கலாம். என்று கருதுகிற அளவிற்கு உங்கள் மனம் செல்வதை அறிந்து உண்மையில் நான் வியப்படைகிறேன். சந்தோசமும் கொள்கிறேன். 

காரணம் இந்த உலகில் விலைமதிக்க முடியாத அபூர்வமான பொருள் அமைதி என்பது அமைதியாக வாழ்வதற்காகவே இதுவரை உலகில் பல சண்டைகள் நடந்து வருகின்றன. என்பது நிதர்சனமான உண்மையாகும். இதையும் நாம் மனதில் வைக்கவேண்டும் 

மதச் சண்டை என்பது இன்று நேற்று துவங்கியது அல்ல நான் உலக சரித்திரத்தில் நடைபெறுகின்ற மதச்சண்டைகளை பற்றி இங்கே பேச போவதில்லை. நமது நாட்டில் நடக்கின்ற நடந்த மதச் சண்டைகளை பற்றி சிந்தித்தாலே போதும் என்று கருதுகிறேன். 

ஒரு காலத்தில் புத்த மதத்தினருக்கும் இந்து மதத்தினருக்கும் பகமை மிகப்பெரியதாக இருந்தது ஒருவரை ஒருவர் கருத்துகளால் மட்டுமல்ல ஆயுதங்களாலும் தாக்கி கொண்ட இரத்த பக்கங்களை சரித்திர ஏடுகளில் காண முடிகிறது. அதன் பிறகு இந்து மதத்தில் இருக்கின்ற ஆறு பிரிவுகளுக்கு உள்ளேயே பலவிதமான தகராறுகள் உண்டு சிவனுக்காக ஒரு பிரிவினரும் பெருமாளுக்காக இன்னொரு பிரிவினரும் மோதி கொண்டது யாரும் அறியாதது அல்ல. 

இன்று பெளத்தம், இந்துமத பிரிவுகள் என்ற நிலை மாறி இஸ்லாம் கிறிஸ்தவம் இந்துமதம் என்ற நிலையில் சண்டைகள் வலுவாகி வருகிறது. இதற்கு காரணம் என்ன என்றால் அரசியல்வாதிகள் சில மத பிரிவுகளுக்கு சுய நோக்கத்திற்காக சலுகைகள் காட்டுகிறார்கள் சிலரை வெறுத்து ஒதுக்குகிறார்கள் அவர்களின் சிறிய குறைகளை கூட பூதாகரப்படுத்தி விளம்பரம் செய்கிறார்கள். இதனால் தான் மத சண்டைகள் அன்றும் இன்றும் தொடர்ந்து வருகின்றன. 

கால் பாதங்களில் பித்த வெடிப்பு வருகிறது என்பதற்காக பாதங்களை வெட்டிவிட முடியாது. அதே போல தான் மதத்தால் சண்டைகள் வருகிறது என்பதற்காக அதை தேவை இல்லை என்று ஒதுக்கிவிட முடியாது. காரணம் மதத்தில் வெறும் வழிபாடு மட்டும் இருப்பது இல்லை 

இன்றைய இந்தியாவில் செழுமை மிக்க பண்பாடுகள் எல்லாமே மதத்திலிருந்தும் மத சிந்தனையிலிருந்தும் உருவானது என்பதில் மாற்றுகருத்து இல்லை இந்திய கட்டிடகலை இந்திய இசைகலை இந்திய நுண்கலைகள் அனைத்திற்குமே மூலம் மதம் தான். எனவே மதத்தை கைவிட்டால் நாம் இந்த அருமையான பண்பாடுகளையும் நாளாவட்டத்தில் கைவிட வேண்டிய சூழ்நிலை வரும். 

எனவே மதத்தை கைவிட வேண்டிய அவசியம் இல்லை இன்னும் ஆழமாக மதத்தை பற்றிய வாசிப்புகளை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டுமென்று நான் கருதுகிறேன். ஒவ்வொரு மதத்தின் உள்ள உண்மை பொருளை மனிதன் உணர்ந்து கொள்ள துவங்கினால் எவரும் குறுக்கிட்டு சிக்கல்களை ஏற்படுத்திவிட முடியாது. எனவே குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மதக்கல்வியை கொடுக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன். 



Contact Form

Name

Email *

Message *