முதல் இரண்டு நாட்கள் குருஜியை கண்டவுடன் அவர் காலடியில் சென்று படுத்துக் கொண்டது இந்த வான்கோழி இப்போது அவர் சக்கர நாற்காலியில் எங்கெங்கு செல்கிறாரோ அங்கெல்லாம் பின்தொடர ஆரம்பித்துவிட்டது அது ஏன் அப்படி செய்கிறது என்று குருஜியிடம் கேட்டபோது உங்கள் நண்பர் உங்களை தொடர்ந்து வந்தால் ஆச்சரியப்பட மாட்டீர்கள் எனது நண்பர் என்னோடு வந்தால் உங்களுக்கு அதிசயமாக படுகிறதா? என்று விளையாட்டாக குருஜி பதில் தந்தார் அந்த பறவை நடந்து வருவதில் எத்தனை பாசப்பினைப்பு தெரிகிறது பாருங்கள்