அன்புடையீர் வணக்கம்..
நாம் மனிதனாகப் பிறந்தது ஏன் என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். இந்தியனாகப் பிறந்தது ஏன் என்ற கேள்விக்கு முதலில் விடை தேடியாக வேண்டும். ஒரு உயிர் முக்தி அடைய வேண்டுமென்றால், இறைவனின் பாதத்தை சென்றடைய வேண்டுமென்றால் முதலில் அது மனிதனாகப் பிறக்கவேண்டும். தேவராகப் பிறந்திருந்தாலும் கூட மனிதனாகப் பிறந்தால் மட்டுமே முக்தி கிடைக்குமென்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மனிதனாகப் பிறந்துவிட்டால் மட்டும் போதுமா? என்றால் இல்லை. அதையும் தாண்டி பாரத பூமியில் ஜனனம் எடுப்பவனாக இருக்கவேண்டும் என்கிறார்கள் பெரியவர்கள். இந்தியனாகப் பிறந்த ஒவ்வொரு மனிதனும் மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நான்கு பேரை வழிபடக் கூடியவனாக மட்டுமல்ல, விருந்தினரை உபசரிப்பவனாகவும், தனது முன்னோர்களை நன்றிக்கடனோடு நினைத்துப் பார்த்து அஞ்சலி செலுத்துபவனாகவும் இருக்க வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
எனவே இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவருக்கும் பித்ரு கடன் தீர்ப்பது கட்டாயமாக இருக்கிறது. அதைச் செய்ய மறுப்பவர்கள், மறந்தவர்கள் அல்லது இயலாதவர்கள் பெரிய துன்பத்திற்கு ஆட்பட வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. எனவே பித்ரு தோஷம் நீங்குவதற்காக மட்டுமல்ல, நமது இன்பத்திற்காக மட்டுமல்ல, நமது முன்னோர்கள் வாழுகின்ற மேலுலகில் அவர்களும் நலமோடு இருக்க வேண்டும் என்பதற்காக பித்ரு காரியங்களை செய்ய நாம் கடமைப் பட்டிருக்கிறோம்.
எல்லோரும் பித்ரு காரியம் செய்ய வேண்டியது தான். அது உண்மை தான். ஆனால் எல்லோராலும் அது முடிகிறதா? நிச்சயம் முடிவதில்லை. பலருக்கு அறியாமை. சிலருக்கு, முன்னோர்கள் இறந்த நாள் எந்த நாள் என்று சரியாகத் தெரியாமை, மற்றும் பலருக்கு முறைப்படி செய்ய வசதி இல்லாமை என்று எத்தனையோ தடங்கல்கள் இருக்கின்றன.
இப்படி இவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதனால் அவர்களின் குறைகளைத் தீர்க்க, ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை என்று வருடத்தில் மூன்று புனித தினங்களை வகுத்துக் கொடுத்து பித்ரு காரியத்தை அப்போது மட்டுமாவது செய்யட்டுமே என்று நமக்கு சலுகை காட்டி இருக்கிறார்கள்.
இந்த சலுகையைக் கூட பயன்படுத்த முடியாமல் எத்தனையோ பேர்கள் உண்டு. குறிப்பாகச் சொல்வது என்றால், அயல்நாடுகளில் வேலை பார்ப்பவர்கள், வருடம் முழுவதும் பயணத்தில் இருப்பவர்கள் போன்றவர்களுக்கு பித்ரு காரியங்கள் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் செய்ய முடியாத நிர்பந்தங்கள் நிறைய இருக்கிறது.
இந்த குறைகளைத் தீர்ப்பதற்குத்தான் நமது குருஜி அவர்கள் சென்ற இரண்டு முறை பித்ரு தோஷ பரிகார பூஜைகளை பொது ஜனங்களுக்காக செய்தார்கள். அந்த பித்ரு காரியங்களில் பங்குபெற்று பயனடைந்தவர்கள் நிறையப்பேர் உண்டு. அவர்களில் பலர், குருஜி மீண்டும் எப்போது பித்ரு பூஜை செய்கிறார் என்று பலமுறை நேரிலும் தொலைபேசி வழியாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
குருஜியின் உடல்நிலை மற்றும் அவருக்கு இருக்கின்ற பல முக்கிய வேலைகள் ஆகியவற்றால் அன்பர்களின் கோரிக்கைகளை உடனடியாக ஏற்க முடியாத நிலையில் இருந்தோம். இப்போது குருஜி மீண்டும் அன்பர்களின் துயரங்களை போக்குவதற்கும் அவர்கள் வாழ்க்கையில் இன்ப வெளிச்சம் ஊற்றெடுத்து வருவதற்கும் வருகிற புரட்டாசி மாதம் அமாவாசை திதி அன்று பித்ரு பூஜை செய்ய இருக்கிறார்கள்.
குருஜி சாதாரண மனிதராகப் பிறந்திருந்தாலும் கூட, அவருடைய அருளாற்றலாலும் ஆன்மீக சாதனைகளாலும் அவரை இறைவன் நாராயணரின் தூதராகவே பல பக்தர்கள் காண்கிறார்கள். அப்படி உன்னதமான அவதாரமான குருஜி அவர்களால் செய்யபடுகிற பித்ரு பூஜையானது மக்களின் துயரத்தை உடனடியாகவே சூரியனைக் கண்ட பனியைப் போல விலக செய்யும் என்பது அனுபவ உண்மை.
எனவே பித்ரு காரியங்களை செய்ய விரும்புகிற அன்பர்கள், அவர்கள் முன்பு நடந்த பூஜையில் கலந்து கொண்டவர்களாக இருந்தாலும் இப்போது புதியதாக கலந்துகொள்ள விருப்பம் உடையவர்களாக இருந்தாலும் உடனடியாக ஆசிரமத்தோடு தொடர்பு கொள்ளுங்கள்.
மேலும் சென்ற இரண்டு முறை பித்ரு பூஜை நடந்த போது பல அன்பர்கள் கோ தானம் என்ற பசு தானத்தை கொடுப்பதற்கு விரும்பி குருஜியிடம் முறையிட்டார்கள். அப்போது இருந்த சில சூழ்நிலைகளால் இப்போதைக்கு கோ தானம் வேண்டாம் என்று குருஜி தள்ளி வைத்தார்கள். ஆனால் பலரும் அன்பு என்னும் ஆயுதத்தால் குருஜியை தாக்கிய வண்ணமே இருக்கிறார்கள். எனவே அவர்களது கோரிக்கையையும் இந்த முறை ஏற்றுக்கொள்ளலாம் என்று அனுமதி அளித்துள்ளார். ஆதலால் பசு தானம் செய்ய நினைப்பவர்கள் நமது ஆசிரமத்தோடு நேரடி தொடர்பு கொண்டு, முடிந்தால் நேரிலேயே வந்து முறைப்படி தானம் செய்யலாம்.
பித்ரு காரியம் செய்பவர்களுக்கு காணிக்கை கொடுக்க வேண்டியது சாஸ்திரப்படி அவசியமாகிறது. அப்படி காணிக்கைகள் கொடுக்கப்பட்டால் தான் முன்னோர்களுக்கு செய்கின்ற கடன் அவர்களை சென்றடையும் என்று ஐதீகம் இருக்கிறது. ஆனால் எல்லோராலும் காணிக்கைகளை கொடுத்துவிட முடியாது. வறுமை என்பது விருப்பத்தை விட பெரியதாக இருப்பதனால் பலரும் பித்ரு காரியம் செய்வதிலிருந்து ஒதுங்கிப் போகிறார்கள். ஆனால் அப்படி யாரும் ஒதுங்கக் கூடாது என்பதற்காக, முடிந்தவர்கள் தாராளமான காணிக்கையை தரட்டும்.. முடியாதவர்கள் அவர்களால் இயன்ற சிறிய தொகையைக் கூட அன்போடு கொடுக்கட்டும் என்று குருஜி விரும்புகிறார். எனவே அதன்படி நீங்கள் செயல்படலாம்.
2017 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி அதாவது ஹேவிளம்பி வருடம் புரட்டாசி மாதம் மூன்றாம் தேதி செவ்வாய் கிழமை மஹாளய பட்சம் மதியம் 12.09 மணிக்கு துவங்குகிறது. அன்று இரவு நடுநிசியில் நமது ஆசிரமத்தில் குருஜியால் பித்ரு பூஜை செய்யப்படும்
அதே நேரம் காசி மற்றும் ராமேஸ்வரத்தில் உள்ள குருஜியின் சீடர்களாலும் உங்கள் முன்னோர்களுக்கான பித்ரு காரியங்கள் அந்தந்த புனித இடங்களில் நடைபெறும். இந்த பூஜையில் பல தாந்த்ரீக முறைப்படியிலான கிரியைகள் நடைபெற இருப்பதனால் குருஜியும் சில சீடர்களையும் தவிர வேறு யாருக்கும் நேரில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்பதையும் அன்போடு தெரிவித்துக்கொள்ள கடமைப் பட்டிருக்கிறோம்.
இதில் கலந்து கொள்ள நீங்கள் செய்யவேண்டியது உங்கள் முன்னோர்கள் பற்றிய விபரங்களை அதாவது யாருக்கு நீங்கள் பித்ரு சாந்தி செய்ய விரும்புகிறீர்களோ? அவர்களது பெயரையும், இறந்த வருடம், தேதி, நேரம் போன்ற விபரங்களையும், அல்லது அவைகள் எதுவும் தெரியவில்லை என்றால் திதியை மட்டுமாவதும், அதுவும் தெரியவில்லை என்றால் தோராயமான காலத்தையும் குறிப்பிட்டு நேரில் அல்லது தபாலில் பதிவு செய்து கொள்ளலாம். அவர்களது புகைப்படங்கள் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். உங்களது முன்னோர்களை பற்றிய விவரங்கள் எதுவுமே தெரியவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம் உங்களுக்கும், அவர்களுக்கும் உள்ள உறவு முறையை குறிப்பிட்டாலும் போதுமானது.
உங்கள் முன்னோருக்காக இந்த சாந்தி பூஜையில் கலந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக விபரங்களை அனுப்பி வையுங்கள் அல்லது கீழ்காணும் எங்கள் முகவரிக்கு தபாலில் எழுதி அனுப்புங்கள். கண்டிப்பாக மிக கண்டிப்பாக உங்கள் தபால் முகவரியை குறிப்பிட்டு எழுதுங்கள். அப்போது தான் பிரசாதம் அனுப்பி வைக்க எங்களுக்கு வசதியாக இருக்கும். மேலும் என்று பித்ரு பூஜை நடக்கிறதோ அன்றிலிருந்து இருபது நாளில் உங்களுக்கு பிரசாதமும் பூஜை பற்றிய விபரமும் அனுப்பி வைக்கப்படும்.
வெளிநாடுகளில் வாழ்பவர்கள் பிரசாதத்தை இந்தியாவில் உள்ள குடும்பத்தாருக்கு அனுப்பி வைக்க சொன்னாலும் அனுப்பபடும். அல்லது வெளிநாட்டு முகவரிக்கு கூட அனுப்பலாம். வெளிநாட்டு அன்பர்கள் தங்கள் தொலைபேசி எண்ணை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். பூஜையில் முன்னோர்களுக்கு சாந்தி செய்வதற்கு என்ன கட்டணம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை சொல்லி வரன்முறை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை முடிந்தவர்களும் இருப்பார்கள், முடியாதவர்களும் இருப்பார்கள். எனவே எல்லோருக்கும் வசதியாக அவரவர் விரும்புகிற காணிக்கையை அனுப்பி வைக்கலாம். உங்களால் பணம் கொடுக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை தபால் செலவுக்கு மட்டுமாவது அனுப்பி வையுங்கள் அன்போடு பெற்றுக்கொள்கிறோம்.
செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் உங்கள் முன்னோர்களை பற்றிய விபரங்களை அனுப்பி வைக்கும்படி வேண்டுகிறோம்.
- மிக முக்கிய குறிப்பு :-
இந்த பித்ரு பூஜையில் பங்குபெற நினைக்கும் நேயர்கள் செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி வரையில் தங்களது முன்னோர்களை பற்றிய விபரங்களை அனுப்பலாம்.
காணிக்கை அனுப்ப வேண்டிய முகவரி :-
காசோலை அல்லது டிடி Guruji என்ற பெயரில் மட்டும் எடுத்து அனுப்பவும்
வங்கி முகவரி :-
Name : Balu Guruji
Account Number : 228801500160
IFSC Code : ICIC0002288
ICICI BANK LTD,
VENGUR branch
வெஸ்டன் யூனியன் வழியாக காணிக்கை செலுத்த வேண்டிய முகவரி:-
P.Sathish Kumar,
4/76 c Kamaraj Road,
Arakandanallur - 605752
Tirukoilur (Tk),
villupuram (Dt),
Tamilnadu,
Arakandanallur - 605752
Tirukoilur (Tk),
villupuram (Dt),
Tamilnadu,
தபால் அனுப்பவேண்டிய முகவரி :-
Guruji,
4/76 c Kamaraj Road,
Arakandanallur - 605752
Tirukoilur (Tk),
villupuram (Dt),
Tamilnadu,
cell no = +91-9442426434.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:-
+91 - 9442426434
இப்படிக்கு
சதீஷ் குமார்