சசிகலா முதல்வராவதை நல்லவர்கள் விரும்பவில்லை
சசிகலாவை, நாட்டை நேசிப்பவர்கள் பதவிக்கு வரக்கூடாது என்று நினைக்கிறார்கள்
நல்ல அரசியல் ஞானம் உள்ளவர்கள், சசிகலாவின் அரசியல் பிரவேசத்தை அறுவெறுப்போடு பார்க்கிறார்கள்
ஒட்டு மொத்த தமிழ் நாடே சசிக்கலாவை வரவேற்க தயாராக இல்லை
ஆயினும் அ.இ.அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் பெருவாரியானவர்கள் சசிக்கலாவைத்தான் தங்களது தலைவராக தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்
அரசியல் சாசன சட்டப்படி பெரும்பான்மையான குழுவின் தலைவருக்கே ஆளுனர், பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்பது விதி
உச்ச நீதிமன்ற தீர்ப்பு சசிகலாவிற்கு பாதகமாக அமைந்து விட்டால் என்னாவது?எனவே தீர்ப்பு வரும் வரை காத்திருப்போம் என்று கவர்னர் மாளிகை மௌனம் சாதிப்பது முறையான செயலாக இருக்காது
தீர்ப்பு எதிர்மறையாக அமைந்து சசிகலா பதவியை விட்டு போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அவர் போகட்டுமே, அதே கட்சியில் வேறொருவரை அப்போது தேர்ந்தெடுத்தால் போகிறது
இந்த ஜனநாய முறையை விட்டு விட்டு தேவையில்லாமல் காலதாமதம் செய்யப்பட்டால் கவர்னரின் மெளனம் கள்ள மௌனம் என்றாகிவிடும், தமிழக அரசியல் அரங்கில் மத்திய அரசு தலையிட்டு தகிடுதத்தம் செய்வதாகவும் விமர்சனம் எழும் இது நல்லதல்ல
எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற இருதரப்பாரும் செய்கின்ற செயல்கள் கிரேக்கம் ரோமாபுரி ஆகிய நாடுகளில் ஆதியில் நடந்த அடிமை வியாபாரத்தை விட கேவலமாக இருக்கிறது
தகவல் தொடர்பு சாதனங்கள் தொடர்ச்சியாக இந்த பதவிக்கான சண்டைகளை பற்றி மட்டுமே பேசுவதால், குழாய்யடி சண்டைக்கு நடுவில் மாட்டிக் கொண்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது
பலம் பொருந்தியவர் யார் என்று நிருபிக்க வேண்டிய இடம் நட்சத்திர விடுதியோ கவர்னர் மாளிகையோ அல்ல, அதற்கான இடம் சட்டசபை அங்கே பன்னீர் செல்வமும் வரட்டும் சசிகலாவும் வரட்டும் ஜனநாய முறைப்படி வாக்கெடுப்பு நடத்தட்டும் வென்றவர் ஆளட்டும்
அதை விட்டு விட்டு லாவணி கச்சேரி நடத்துவது சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு வழி ஏற்படுத்தும், நாட்டின் அமைதி கெட்டுவிடும்
நல்லவர் ஆள வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள் எனவே இருவரையும் மோத விடுங்கள் உடைந்த கண்ணாடி ஒன்று சேராது, எப்படியும் இடைக்கால தேர்தலை தவிர்க்க முடியாது
மக்கள் மன்றம் தீர்ப்பு எழுதட்டுமே.