நாத்திகவாதத்தை உங்களால் ரசிக்க முடியுமா?'.
"அறிவுக்கு விருந்தாக அமைந்தால் எந்த வாதத்தையும் ரசிக்கலாம்,அதற்காக பக்கவாதத்தை ரசிக்க முடியாது
ஊழல் அரசியல்வாதிகளிடம் உங்களுக்கு பழக்கம் உண்டா?
"நான் அரசமரத்தடி பிள்ளையாரைப் போன்றவன் யார் வேண்டுமானாலும் என்னிடம் வரலாம் ஆனால் நான் யார் பின்னாலும் போக மாட்டேன்"
ஆன்மீகவாதியாக இல்லாவிட்டால் யாராக இருந்திருப்பீர்கள்?
"ஆன்மீக வாழ்வில்தான் இருந்திருப்பேன் நான் அதற்கு என்றே பிறந்திருப்பவன் "
சினிமா பார்க்கும் வழக்கம் உண்டா?
"இயல், இசை, நாடகம் என்பது தமிழின் மூன்று சிறப்புகள் சினிமா என்பதும் கலையின் ஒரு அங்கம்தான் அதை ஏன் புறக்கணிக்க வேண்டும்?"
ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் எவ்வளவு வைத்துள்ளீர்கள்?
"என் கையில் காலனா கிடையாது மக்கள் காணிக்கையாக தரும் காசு எல்லாம் அறக்கட்டளை கணக்கில் போய்விடும். எனக்கு சோறு போடுவதே அறக்கட்டளைத்தான் பிச்சைக்காரன் கையிலாவது ஐந்து, பத்து இருக்கும் எதுவும் இல்லாத சுதந்திர பறவை நான் "