மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது அதிரடியாக நூறு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார் அதேப்போல இப்போது நரேந்திர மோடி ஐநூரு , ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்திருக்கிறார்
மூன்று மணி நேர அவகாசத்தில் அறிவிப்பு வந்திருப்பது சாதாரண ஜனங்களுக்கு குறிப்பாக வெளியூர் பயணங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பல வித கஷ்டங்களை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை
அரசு மருத்துவமனை தவிற மற்ற மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை நோயாளிகள் அவர்களின் உறவினர்கள் பெரிய அவஸ்தைக்கு ஆளாவார்கள் என்பதும் நிஜம்
இப்படி ஒரு சில துன்பங்களை தவிற மொத்தத்தில் இந்த அறிவுப்பு நல்ல பலனையே தரும் என்று நம்புகிறேன் கணக்கில் வராத கருப்பு பணம் பதுக்கல் போன்றவை பெரிய சரிவை சந்திக்கும் போலி ரூபாய் நோட்டுக்கள் முற்றிலும் ஒழியும் பயங்கரவாதிகளின் சதி செயலுக்கான மூல பணவரவு தடைபடும்
மொத்தத்தில் நல்ல நடவடிக்கை நீண்ட நாள் நன்மைக்காக தற்கால கஷ்டங்களை பெருத்துக் கொள்வது தவறல்ல