வயிற்றில் தரிக்காமல்
மசக்கை எடுக்காமல்
இடுப்பில் சுமக்கும்
தாயம்மா!
மேனி கொதித்தாலும்
கால்கள் வலித்தாலும்
கண்கள் சுரக்கின்ற
மனசம்மா!
தோள்கள் கனத்தாலும்
மேனி தளர்ந்தாலும்
அணைத்து வளர்க்கின்ற
இறையம்மா!
அக்கா என்ற பெயர்
உறவு கொடுத்தாலும்
அம்மாவும் நீயும்
ஒன்றம்மா!