கனமான பசியோடு
வயல் வெளியில்
இறங்கி தேடுகிறேன்
ஒரு நெல் மணி கூட கண்ணில் தெரியவில்லை
நான் விதைத்த விதை
நான் நட்ட நாற்று
நான் பிடுங்கிய களை
நான் பாய்ச்சிய தண்ணீர்
எங்கே போனது?
என் தாகம் தீர்த்த ஓடைகளை
தேடிப் போகிறேன்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
கானல் நீரே அழைக்கிறது
என் நீர் குட்டைகள்
என் கண்மாய்கள்
என் படுகைகள்
என் வாய்க்கால்கள்
எங்கே போனது?
என்னை இதமாய் தாலாட்டிய
பச்சை மரத்து நிழல்களை
நாடி ஒடுகிறேன்
சுட்டெரிக்கும் வெயில் மென்மையான பாதங்களை
கொப்பளிக்க வைக்கிறது
என் தோட்டம்
என் சோலைகள்
என் காடுகள்
என் அடர்ந்த வனங்கள்
எங்கே போனது?
அதோ அந்த மான்கள் ....
என் கோதுமை வயல்களை
கபளீகரம் செய்கிறது
என் ஜீவ ஊற்றுக்களை
நக்கி நக்கி வரண்டுபோக வைக்கிறது
எனது மரங்களை
ஒவ்வொறு இலைகளாய்
மொட்டை அடிக்கின்றன
வேட்டையாடு நண்பா வேட்டையாடு
வேகம் கொண்ட மான்களை வேட்டையாடு
அந்த மான்கள்
மயங்கி நின்று மயங்க வைக்கின்றது
கலக்க தாமரையை மலர வைக்கின்றது
வழுக்கி விழும் நேரமெல்லாம்
வாய்விட்டு சிரித்து கேலி செய்கிறது
அந்த மான்கள் ஓடும் முன்பே
குறி வைக்கும் தூரம் மறையும் முன்பே
வேட்டையாடு
கூர்மையான அம்பு நுனியில்
அடிபட்டு வீழட்டும் - மான்கள்
வதைபட்டு மாழட்டும்