Store
  Store
  Store
  Store
  Store
  Store

வாருங்கள் பித்ரு தோஷத்தை நீக்குவோம் !



ன்பார்ந்த உஜிலாதேவி இணையதள வாசகர்களே !

உங்கள் அனைவருக்கும் இறைவனான ஸ்ரீ கண்ணபிரானின் அருளாசிகள் நிறையட்டும் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு துளியும் கிருஷ்ணனின் அருளமுது நிறைந்து நிம்மதியும், சந்தோசமும் பொங்கி வழியட்டும்.

நமது முன்னோர்கள் தெய்வ வணக்கம், தேச வணக்கம், முன்னோர்கள் வணக்கம் என்ற மூன்றையும் மிக முக்கியமான தர்மங்களாக கூறினார்கள். தெய்வ பக்தி நமது ஆன்மாவையும், பித்ருக்கள் என்ற முன்னோர்கள் மீது செலுத்துகிற பக்தி நமது தலைமுறையையும் காப்பாற்றும் என்பது உலக 
நீயதி.

நாம் தவறு செய்தால், தவறான வழியில் நடந்தால் துன்பம் ஏற்படுவது இயற்கை. பாதை எங்கும் கருவேலமுள்ளை போட்டுவிட்டு பாதத்தில் இரத்தம் வடிகிறதே! என்று கவலைப்படுவது மூடத்தனம் என்பதை நாம் அறியாதது அல்ல. ஆனால் நாம் தவறே செய்யாத போது, தவறை பற்றி நினைப்பே இல்லாத போது துன்பங்களும், துயரங்களும் நமது வாசல் கதவை தட்டுகிற நேரம் நாம் மிகவும் சோர்ந்து விடுகிறோம்.

இந்த துக்கத்திற்கு என்ன காரணம்? இதிலிருந்து விமோசனம் அடைவதற்கு என்ன வழி என்று பலவாறு சிந்திக்கிறோம். கண்ணுக்கு தெரியாத காரணம், இன்னதென்று புரியாத பல துயரங்களுக்கு மூலகாரணமாக பித்ரு தோஷம் இருப்பதை நமது சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. சாபத்தாலோ, பாவத்தாலோ துயரங்கள் வராத போது தோஷங்களால் வரலாம். அதுவும் பித்ரு தோஷத்தால் அடைகின்ற துன்பங்கள் சுமக்க முடியாத சுமைகளாகும். 

முன்னோர்களுக்கு சரியான வழிபாட்டை நிகழ்த்தாதனால் தோல்வி அடைந்து கொண்டிருப்பவர்கள் ஏராளம். எவ்வளவு தான் முயன்றாலும் முன்னுக்கு வரமுடியாமல் பின்னுக்கு தள்ளப்படுபவர்கள் பலநூறு பேர்கள். தலைமுறை தலைமுறையாக பித்ரு தோஷத்தால் பாதிக்கப்பட்டுவரும் குடும்பங்கள் எண்ணிக்கையில் அடங்காதவண்ணம் இருக்கிறது. 

பித்ருதோஷ துயரத்திலிருந்து விடுபடுவதற்கு சுற்றி வளைத்து குறுக்கு வழிகள் எதுவுமே கிடையாது. ஒரே ஒரு வழி பித்ரு காரியங்களை சரிவர செய்வது மட்டும் தான். சரிவர செய்வது மட்டும் போதாது தங்கு தடையில்லாமல் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். அதுவும் சாஸ்திரப்படி சிறிது கூட முறைகள் வழுவாது செய்யவேண்டும். அப்படி செய்தால் மட்டும் தான். நாம் செய்யும் முன்னோர் வழிபாடு முன்னோர்களை சரியாக சென்றடையும். இல்லை என்றால் விழலுக்கு இறைத்த நீராக வீணாக போய்விடும். 

நமக்கு பித்ரு தோஷம் இல்லை, நமது முன்னோர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். நான் தவறாமல் பித்ரு காரியம் செய்து வருகிறேன். என்பவர்கள் கூட அவர்களது முன்னோர்களின் ஆத்மா மேலும் சிறப்படைந்து இறைவனின் பாதார விந்தங்களில் சுகஜீவியாக இருப்பதற்கும் மாதாம் மாதம் முன்னோர்களை நன்றியுணர்வோடு, மனிதாபிமானத்தோடு நினைத்து பார்ப்பதற்கும் நேரம் வேண்டும், நல்ல மனது வேண்டும். எனவே அத்தகைய அரிய வாய்ப்பை நமது இணையதள வாசகர்களுக்கு கொடுக்க நாம் விரும்புகிறோம்.

இன்றைய சூழலில் சரியான முறையில் பித்ரு வழிபாடுகளை நடத்துவதற்கு பொருள் வசதியும் அமைவது இல்லை. அப்படி அமைந்தாலும் சரியான வழிமுறை தெரிந்த புரோகிதர்களும் கிடைத்து விடுவது இல்லை. வெளிநாட்டில், வெளிமாநிலங்களில் இருப்பவர்களுக்கு கால நேரமும் சரியாக அமைவது இல்லை. எனவே இந்த குறைகளை மனதில் கொண்டு நமது ஆசிரமத்தில் வருகிற புரட்டாசி அமாவாசை முதல் ஒவ்வொரு மாத அமாவாசையிலும் பித்ரு சாந்தி மஹாஹோமம் நடத்துவதாக தீர்மானிக்க பட்டுள்ளது. 

வேதங்கள் கூறுகின்ற முறைப்படியும், தாந்ரீக சாஸ்திர நெறிப்படியும், சித்தர்களின் வழிமுறைப்படியும் பித்ரு சாந்தி மஹா ஹோமம் நடைபெறுகிறது. இதில் யார் வேண்டுமானாலும் பங்கு பெற்று அவர்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைந்து ஆசிர்வாதம் பெறுவதற்கு கலந்து கொள்ளலாம்.  

வேதங்கள், தாந்ரீக  சாஸ்திரம், சித்தர் நெறி ஆகிய மூன்று முறைப்படி செய்கின்ற ஹோமம் என்பதனால் சர்வ நிச்சயமாக உங்களது முன்னோர்களை அவர்கள் மூலம் நீங்கள் எவ்வளவு தோஷம் பெற்றவர்களாக இருந்தாலும், அவர்களது ஆத்மாவை சாந்தி அடைய செய்து, திருப்தி அடைய வைத்து, பித்ரு லோகத்தில் அவர்களுக்கு நல்ல கதி அமைய துணை செய்யலாம். பல முறை பித்ரு நிவர்த்தி பரிகாரங்கள் செய்து சளைத்தவர்கள் கூட இந்த வகையை பயன்படுத்தி முயற்சி செய்தால் மிக உறுதியான பலனை அடையாளமென்று உத்தரவாதத்துடன் நம்மால் கூறமுடியும். 

இதில் கலந்து கொள்ள நீங்கள் செய்யவேண்டியது உங்கள் முன்னோர்கள் பற்றிய விபரங்களை அதாவது யாருக்கு நீங்கள் பித்ரு சாந்தி செய்ய விரும்புகிறீர்களோ? அவர்களது பெயரையும், இறந்த வருடம், தேதி, நேரம் போன்ற விபரங்களையும், அல்லது அவைகள் எதுவும் தெரியவில்லை என்றால் திதியை மட்டுமாவதும், அதுவும் தெரியவில்லை என்றால் தோராயமான காலத்தையும் குறிப்பிட்டு நேரில் அல்லது தபாலில் பதிவு செய்து கொள்ளலாம். அவர்களது புகைப்படங்கள் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். உங்களது முன்னோர்களை பற்றிய விவரங்கள் எதுவுமே தெரியவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம் உங்களுக்கும், அவர்களுக்கும் உள்ள உறவு முறையை குறிப்பிட்டாலும் போதுமானது.

உங்கள் முன்னோருக்கான ஆத்ம சாந்தி ஹோமம்  2016- ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி மகாளய அமாவாசை அன்று துவங்கி அடுத்த வருடம் வருகிற மகாளய அமாவாசை வரை 12 மாதங்கள் நடைபெறும். அதற்கு மேலும் சாந்தி ஹோமத்தை தொடர நினைத்தால் நீங்கள் புதிதாக பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் இந்த காலகட்டத்தில் இடைப்பட்ட நேரத்தில் நீங்கள் பதிவு செய்தாலும், புரட்டாசி மாதம் அமாவாசை வரையிலுமே ஹோமம் செய்யப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும். அதாவது வருடா வருடம் புதுப்பித்து கொள்ள வேண்டும். 

வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்த ஹோமத்தில் கலந்து கொள்ள விரும்பினால் கண்டிப்பாக தபால் வழியிலேயே குறிப்புகளை அனுப்பி வைக்க வேண்டும். மிக கண்டிப்பாக மின்னஞ்சல் ஏற்றுகொள்ள இயலாது. முன்பு நமது ஆசிரமத்தில் நடந்த பித்ரு பூஜையில் பங்குபெற்றவர்கள் தங்களது முகவரியை தெரியப்படுத்தினால் மட்டும் போதும். உங்கள் முன்னோர்களை பற்றிய அனைத்து குறிப்புகளும் எங்களிடம் இருப்பதனால் மீண்டும் அனுப்பும் சிரமத்தை நீங்கள் அடையவேண்டாம். 

இந்த பித்ரு சாந்தி ஹோமத்திற்கு கலந்து கொள்ள குறிப்பிட்ட கட்டணம் எதுவும் கிடையாது. காரணம் இருப்பவர்கள், இல்லாதவர்கள் அனைவருக்கும் சமவாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த சலுகை அறிவிக்கப்படுகிறது. ஆனாலும் ஹோமங்கள் நடத்துவதற்கும், அதை சார்ந்த அன்னதானங்கள், வேறு பரிகார பூஜைகள் நடத்துவதற்கும் பொருளாதாரம் என்பது அவசியம் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே உங்களால் முடிந்த காணிக்கையை அனுப்பி வையுங்கள். இருப்பவர்கள் அதிகமாகவும் இல்லாதவர்கள் தங்களால் முடிந்ததையும் காணிக்கையாக செலுத்தினால் நல்லது. 

ஹோமத்திற்க்கான பிரசாதம் புரட்டாசி மாத அமாவாசை ஹோமத்திற்கு அனுப்பி வைக்கப்படும். பிறகு உள்ள பிரசாதங்கள் சாஸ்திரப்படி சமூத்திரத்தில் கரைக்கப்படும். ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாத பிரசாதம் மட்டுமே அனுப்பப்படும் என்பதை கவனத்தில் வைக்கவும். மேலும் இந்த ஹோமத்தில் நேரடியாக கலந்து கொள்ள விரும்புபவர்கள் அமாவாசை அன்று மாலையே நமது ஆசிரமத்திற்கு வந்துவிட வேண்டும். நேரில் கலந்து கொண்டால் மாதாம் மாதம் பிரசாதத்தை பெற்று கொள்ளலாம். 

பித்ரு சாந்தி மஹா ஹோமத்தில் பங்குபெற விரும்பும் அனைவரும் மேலே கேட்டுள்ள விவரங்களோடு உடனடியாக தொடர்பு கொண்டு முன்னோர் பெயர்களை பதிவு செய்து கொள்ளுங்கள். மிக அதிகமான பேருக்கு பதிவு செய்ய இயலாது என்பதனால் முன்கூட்டி வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 


மிக முக்கிய குறிப்பு :-


   இந்த மாத பித்ரு பூஜையில் கலந்து கொள்ள அக்டோபர் 28 ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்கவும்.   இந்த பித்ரு பூஜையில் பங்குபெற நினைக்கும் நேயர்கள் தங்களது முன்னோர்களை பற்றிய விபரங்களை உடனடியாக அனுப்பவும் .

காணிக்கை அனுப்ப வேண்டிய முகவரி :-


    காசோலை அல்லது டிடி Guruji என்ற பெயரில் மட்டும் எடுத்து அனுப்பவும் 

 online - ல்  காணிக்கை  செலுத்த :-




வங்கி முகவரி :-


Name : Balu Guruji
Account Number : 228801500160
IFSC Code : ICIC0002288
ICICI BANK LTD,
VENGUR branch
  

வெஸ்டன் யூனியன் வழியாக  காணிக்கை  செலுத்த வேண்டிய முகவரி:-

P.Sathish Kumar,
4/76 c Kamaraj Road,  
Arakandanallur -  605752
Tirukoilur  (Tk),
villupuram (Dt),
Tamilnadu,

தபால் அனுப்பவேண்டிய முகவரி :-


Guruji,
4/76 c Kamaraj Road,  
Arakandanallur -  605752
Tirukoilur  (Tk),
villupuram (Dt),
Tamilnadu,
cell no = +91-9442426434.



மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:-

+91 - 9442426434


இப்படிக்கு 
சதீஷ் குமார் 

Contact Form

Name

Email *

Message *