ஊர் மைதானத்தில் சைக்கிள் சாம்பியன் சைக்கிள் சுத்துவார் உண்பது,உறங்குவது எல்லாமே அவருக்கு சைக்கிளில் தான் நடக்கும்.இரவு நேரத்தில் யாரும் இல்லாதபோது இறங்கிப்படுத்து ஓய்வெடுக்கிறாரா? இயற்கை உபாதையை எப்படி கழிக்கிறார்? குளியல் போன்ற காரியங்களை எப்படி செய்கிறார்? என்பதை ஆராயும் இரகசியமாக கண்காணிக்கும் இளம் வட்டங்கள் உண்டு
அதே போலவே சர்க்கஸ், மோடி மஸ்தான் வித்தைகள், பாகூத்து என்ற தோல்பாவை கூத்துக்கள் என்பவைகளெல்லாம் மைதானத்தில் நடக்கும். புதியதாக வெளிவரும் எம்ஜிஆர், சிவாஜி படப்பாடலை போட்டு ரெக்காட் டான்ஸ் ஆடுகிற கலைஞர்களும் அவ்வபோது வருவார்கள்.
ஊரிலுள்ள பெருசுகள், பொட்டு பொடிசுகள் ஒருவர்கூட விடாமல் ஆர்வமாக பார்ப்பார்கள். அந்த கலைஞர்களுக்கும் வயிறு நிறைய சோறு கிடைக்கும், கைநிறைய காசும் கிடைக்கும். தொன்றுதொட்டு இருந்து வருகின்ற கலைகள் அழியாமல் பாதுகாக்கப்பட்டும் வந்தது.
இன்று அந்த கலைகள் எங்கே போனது? கலைஞர்கள் என்ன ஆனார்கள்? என்பது தெரியவேயில்லை தொலைக்காட்சியும், கைபேசியும் மக்கள் புழக்கத்திற்கு அதிகமாக வந்தவுடன் இந்த ஜீவனுள்ள கலைகள் உயிரிழந்து போய்விட்டன என்று நினைக்கிறேன். அல்லது விஞ்ஞானம் என்ற ஆழி பேரலைகள் முன்னால் இவைகள் தாக்குபிடிக்க முடியாமல் தூசிபோல பறந்துவிட்டது என்று நினைக்கிறேன்.
சிறுவர்களின் விளையாட்டு,இளைஞர்களின் உற்சாகம்,கன்னிப்பெண்களின் கலகலப்பு,பெரியவர்களின் நையாண்டி என்று எந்த நல்ல விஷயங்களையும் இன்று கிராமங்களில் காணமுடியவில்லை. ஏன் நேற்றுவரை அழகாக கிராம வீதிகளில் சென்ற மாட்டு வண்டிகளை கூட பார்க்க முடியாத தவிப்பு ஏற்படுகிறது.
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காத,கலந்து இணைந்து போகும் உறவுமுறைகள், இன்று இணையதளத்திலும், செல்பேசிகளிலும் தொலைந்து கொண்டிருப்பதை கண்ணெதிரே காணமுடிகிறது. இப்படியே மனிதன் இயந்திர வேகத்தில் மாறிக்கொண்டே வந்தால், ஒவ்வொரு மனிதனும் உறவுகள் வேண்டாமென்று தனித்தனி தீவுகளாக சிதைந்து கொண்டு வந்தால், வருங்காலம் என்பது மிகவும் அச்சத்திற்குரியதாக ஆகிவிடுமோ என்ற பலமான ஐயம் எழுகிறது.
ஒருவேளை இளமை பிராயத்தை கடந்துகொண்டிருக்கும் ஒருவன், பழமைகளை நேசிக்கும் ஒருவன், புதுமைகளை எதிர்கொள்ள முடியாத ஒருவன், புலம்புவதை போல இதையும் ஒரு புலம்பல் என்று யாராவது எடுத்துகொண்டால் இந்த கருத்தை பற்றி ஆழ்ந்து சிந்திக்காமல் விட்டுவிட்டால் அது நல்லதாக இருக்காது என்பது என் அபிப்பிராயம்.