இந்த வாரத்திற்கான குருஜியின் கேள்வி இதோ!!!..
கடவுளை அடைவதற்கு மிகவும் எளிய வழி எது?
என்ற கேள்விக்கு நடைமுறைக்கு சாத்தியமான பதிலை தந்தவர் இந்துமதி. அவரை குருஜியின் சார்பில் பாராட்டுகிறோம் அவருக்கான பரிசினை நேரில்வந்து குருஜியின் கைகளால் பெற்றுகொள்ளலாம் அல்லது அவரது வங்கி முகவையை அனுப்பினாலும் நாங்கள் அதில் செலுத்தி விடுகிறோம்.
இந்துமதியின் பதில் இதோ
விண்ணில் உள்ள மழைத்துளி மண்ணில் விழுவதற்கு என்ன தேவை? மலையில் தோன்றிய நதி கடலில் வந்து கலப்பதற்கு என்ன தேவை? தாய்பசுவை அடைவதற்கு இளம் கன்றுக்கு என்ன தேவை? பூரண சரணாகதி ஒன்றுமட்டுமே தேவை. இறைவனை அடைவதற்கும் இந்த ஒன்று தான் எப்போதுமே தேவை.
இந்துமதி .
டெல்லி |