Store
  Store
  Store
  Store
  Store
  Store

பேய்கள் உலாவும் இடம் எது...?


சில வீடுகளை பேய்கள் வாழ்கிற இடங்கள் என்று கூறுகிறார்களே? உண்மையில் மனிதர்கள் வாழும் இடத்தில் பேய்கள் குடியிருக்குமா?

     பொதுவாக மனித நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் ஆவிகளின் சஞ்சாரம் அவ்வளவாக இருக்காது. காரணம், ஆவிகள் அமைதியான ஒதுக்குப்புறமான இடங்களையே விரும்புவதாக சில வாமாசார நூல்கள் கூறுகின்றன. ஏன் மனிதர்களை அதற்கு பிடிக்கவில்லையா என்று கேட்டால் அப்படி இல்லை மனிதர்கள் வாழுகிற பகுதியில் ஆகர்ஷன சக்தியானது அதிகமாக இருக்கும். அதில் ஆவி வடிவங்கள் பிரவேசிப்பதில் பல கஷ்டங்கள் உண்டு.

ஆனாலும், வட கிழக்கு பகுதியில் மேடாக அமைந்த வீடுகள் வாஸ்து படி ஆவிகள் நடமாடுவதற்கு ஏற்ற வீடுகள் என்றும் சொல்லப்படுகிறது. இது எனது அனுபவத்தில் மிகவும் சரியாக இருப்பதை பார்த்திருக்கிறேன். எந்த வீட்டில் ஈசான்யமும், நிருதியும் கெட்டுப்போய் இருக்கிறதோ அங்கே ஆவிகள் தொல்லையும் “ஏவல்” “பில்லி” “சூனியம்” போன்ற அபிசார பிரச்சனைகளும் இருக்கிறது.

வீடுகளில் ஆவிகள் இருந்தால் மனிதர்களுக்கு தொல்லைகள் ஏற்படுமா?

     விகளுக்கும், மனிதர்களுக்கும் உள்ள மிக முக்கிய வேறுபாடே உடம்பு தான். நமக்கு உடம்பு உண்டு. அவைகளுக்கு கிடையாது. உடம்போடு வாழுகிறபோது பெறுகின்ற புலன் இன்பங்களை, ஆவிகளான பிறகு பெற இயலாது. எனவே மனித உடம்பை மீண்டும் பெறுவதில் ஆவிகள் முனைப்பு காட்டுவது உண்டு. இதனால் மனிதர்களுக்கு பிரச்சனைகள் உருவாகும்.

மனதில் கொந்தளிப்பு, செயலில் பதட்டம், வார்த்தைகளில் தடுமாற்றம் என்பது ஆவிகளினால் முதற்கட்டமாக ஏற்படும் தொல்லையாகும். அடுத்தடுத்து உடல்நலம், குடும்பத்தாரின் உறவுநலம் போன்றவைகள் பாதிப்படையும். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் அடிக்கடி நோய்கள் ஏற்படும்.

ஆவிகள் வீடுகளில் இருப்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம்?

“பேய் மிரட்டி” என்றொரு மூலிகை இருக்கிறது இதை பச்சையாகவே விளக்கில் திரி போட்டு தீபம் ஏற்றலாம் இந்த தீபத்தை ஆவிகள் உள்ள வீட்டில் ஏற்றினால் தீபம் எரியாது உடனே அணைந்து போய்விடும் மற்ற வீடுகளில் நின்று நிதானமாக எரியும் பூத வேதாள உப்பு என்ற ஒரு மூலிகையும் உண்டு. இதை ஆவிகள் உள்ள இடத்தில் வைத்தால் பிணநாற்றம் வீசும்.

இவைகளெல்லாம் மூலிகை வகைகள். இவைகளை தேடி எங்கே போவது, எப்போது வாங்குவது நடக்கிற காரியத்தை சொல்லுங்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து, அருகம் புல் சாற்றினால் அந்த பிள்ளையார் எத்தனை வருடம் ஆனாலும் கெட்டுப் போக மாட்டார் என்று உங்களுக்கு தெரியும். அதே பிள்ளையாரை ஆவிகள் உள்ள பகுதியில் பிடித்து வைத்தால், ஐந்தே நாட்களில் வண்டுகள் மொய்த்து கெட்டுப் போகும். இதை வைத்து ஆவிகள் நடமாட்டத்தை ஓரளவு புரிந்து கொள்ளலாம்.

ஆவிகள் வீடுகளுக்குள் வரமால் இருக்க என்ன செய்ய வேண்டும்?

   ருடம் தவறாமல் பித்ரு காரியங்களை செய்ய வேண்டும். குல தேவதை வழிபாட்டை முறைப் படி நடத்த வேண்டும். இவை இரண்டும் சரியாக நடக்கும் வீட்டில், ஆவிகள் தொல்லை இருக்காது. மேலும் தினசரி வீட்டில் நெய் தீபம் ஏற்றி, சாம்பிராணி தூபம் போடலாம். தினசரி ராம நாம சங்கீர்த்தனமோ, சிவ நாம ஜெபமோ நடத்தலாம். ஹரி நாம பஜனை நடைபெறும் இடத்தில் பேய்கள் நெருங்காது என்று பல பெரியவர்கள் சொல்கிறார்கள்.

Contact Form

Name

Email *

Message *