Store
  Store
  Store
  Store
  Store
  Store

இந்த ஓவியங்கள் எத்தனை காலம்...?




பாறையின் விளிம்பில் 
குறுக்கே கிடக்கும் மரக்கொம்பில் 
பனி நனைத்ததா?  
மழை நனைத்ததா?
என்று தெரியாமல் 
கசிந்து பெருகி நிற்கும் ஒரு துளி நீர் 
அதை கொத்துவதா? உறிஞ்சி குடிப்பதா? 
என்று யோசனையில் தவமிருக்கும் கரிச்சான் குருவி


காட்டு புல்வெளியில் 
இன்னெதென்று தெரியாமல் 
வகை வகையாக பூத்து கிடக்கும் 
வண்ண வண்ண பூக்கள் 
அதில் மாறி உட்கார்ந்து 
தேனை உறிஞ்சும் வண்ணத்து பூச்சிகள் 

குறுக்கே ஓடிவரும் ஓடை நீரில் 
துள்ளி குதித்து விளையாடும் கெழுத்தி மீன்கள் 
அகப்பட்டதை அலகின் குறுக்கே 
கிடத்தி கொண்டு பறக்க எத்தனிக்கும் மீன் கொத்திகள் 
நண்டுகளின் வலைகளை 
நாசுக்காக கிளறி பார்க்கும் குள்ள நரிகள் 

கள்ளி செடிக்குள் குஞ்சி பொறிக்க 
காத்து கிடக்கும் கவுதாரி முட்டைகளை 
முழுமையாக விழுங்கிவிட்டு 
உடலை நெளிக்கும் ஓலை பாம்புகள் 
சிலிர்த்த வாலை துடிக்க வைத்து கொண்டு 
கொட்டைகளை கொறிக்கும் பருத்த அணில்கள் 


இன்னும் எத்தனை எத்தனையோ உயிரோவியங்களை 
எனக்கு காட்டி கண்குளிர வைத்த பூமி தாய் 
இன்னும் எத்தனை காலம் 
கரும் புகைகளோடு மனித பகைகளோடும் 
மல்லுக்கு நின்று 
எனக்காக பாதுகாப்பாள்....?








Contact Form

Name

Email *

Message *