இந்த வாரத்திற்கான குருஜியின் கேள்வி இதோ!!!..
ஜாதிகளால் ஏற்படும் நன்மைகள் என்ன...?
என்ற கேள்விக்கு நடைமுறைக்கு சாத்தியமான பதிலை தந்தவர் திரு ராம் குமார் அவரை குருஜியின் சார்பில் பாராட்டுகிறோம் அவருக்கான பரிசினை நேரில்வந்து குருஜியின் கைகளால் பெற்றுகொள்ளலாம் அல்லது அவரது வங்கி முகவையை அனுப்பினாலும் நாங்கள் அதில் செலுத்தி விடுகிறோம்.
ஜான்சன் செல்லத்துரையின் பதில் இதோ
ஜான்சன் செல்லத்துரையின் பதில் இதோ
ஜாதியின் கொடுமைகளை பற்றி விளக்கம் கொடுக்கவும் விமர்சனம் செய்யவும் நமது மக்கள் நன்றாக பழகியிருக்கிறார்கள் ஜாதி கொடுமைகளை பற்றி எந்த அளவு அறிந்திருகிறார்களோ அந்தளவு அனைவருக்கும் ஜாதி பற்று இருக்கிறது ஜாதி கிராமங்களில் தான் வாழ்கிறது நகரங்களில் செத்து கொண்டிருக்கிறது என்பதெல்லாம் உண்மைக்கு எதிரான கருத்தாகும் கல்வி சாலை துவங்கி கல்லறை தோட்டம் வரையிலும் ஜாதி இங்கே உறுதியாக நம்பப்படுகிறது பின்பற்றபடுகிறது அதே அளவு ஜாதியிய எதிர்ப்பு வாதங்கள் பேசவும் படுகிறது. இது தான் நமது தேசத்தின் நிஜமான அரசியல் ஜாதியை ஒழிக்க வேண்டுமென்று வாய்கிழிய பேசுகிற அரசியல்வாதிகளும் சரி கைதட்டி வரவேற்கின்ற தொண்டர்களும் சரி திரைமறைவுக்கு பின்னால் ஜாதியை வளர்ப்பதற்கு எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பது யாரும் அறியாத இரகசியமில்லை மனிதன் நிஜமாகவே இன்னொரு மனிதனை ஆளுமை செய்ய நினைக்கிறான் ஆட்சி செய்ய ஆசைபடுகிறான் அதனால் ஏற்பட்டது தான் ஜாதி கொடுமைகள் ஆனால் நிஜமாகவே ஜாதிகள் கொடுமை செய்வதற்காக உருவாக்கப்பட்டது அல்ல ஐரோப்பிய மக்கள் காட்டுமிராண்டி வாழ்க்கை வாழ்ந்த காலத்திலேயே அரசியல் சித்தாந்த நெறியை வளர்த்தவர்கள் ஆசிய மேதைகள் குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் இந்திய சமூக அமைப்பு பண்பட்ட நெறிப்பட்ட சமூக அமைப்பாக வேருன்றி நின்ற சரித்திர காலத்தில் கூட வெள்ளையர்கள் வேட்டைக்காரர்களாக தான் இருந்தார்கள் அறிவு முதிர்ச்சி மிக்க இந்தியர்களின் கண்டுபிடிப்பே ஜாதி என்ற சமூக அமைப்பு மனிதன் கூட்டமாக வாழுகின்ற இயல்பு படைத்த சமூக விலங்கு மனித சமூகம் நீடித்து வாழவேண்டும் என்றால் ஒற்றுமை மட்டுமிருந்தால் போதாது வேற்றுமையில் ஒற்றுமை இருந்தால் மட்டுமே சமூகத்தின் ஆயுள் தன்மையும் ஆரோக்கிய தன்மையும் நீடித்ததாக இருக்கும். எனவே தான் ஒவ்வொரு சமூக குழுவும் ஒவ்வொரு ஜாதியாக பிரிக்கப்பட்டது. அப்படி பிரிக்கப்பட்ட ஜாதிகள் சிறு சிறு விரகுகட்டுகள் பெரிய விறகு கட்டை உதிர்ந்து போகாமல் காப்பது போல் காத்தது என்றால் அது மிகையில்லை. உண்மை கசக்கும் ஆனால் அதை எதிர்கொள்ளாமல் இருக்க முடியாது என்று இந்தியாவிலிருந்து முற்றிலுமாக ஜாதிகள் அழிக்கப்படுகிறதோ அன்று இந்தியாவின் ஆத்மாவான பண்பாடு முற்றிலும் மரணமடைந்து விடும் நம் தேசம் தேசமாக இருக்காது. ஜாதியில் ஒழிக்கப்பட வேண்டியது ஏற்ற தாழ்வுகளே தவிர வேறொன்றும் இல்லை. இந்த ஏற்ற தாழ்வுகள் பொருளாதார சிந்தனையின் அடிப்படையில் நிலவுடமை தத்துவத்தின் அடிப்படையில் உருவானதே தவிர இயற்கையானது அல்ல. எனவே இதை ஒழிப்பதில் இட ஒதிக்கீடு தனி சலுகைகள் சரியான பங்காற்றி நிறைவேற்றி விடும். ஆயினும் ஜாதிகளை ஒழிக்க முயற்சி செய்வது வீண் என்பதே என் கருத்து...
இப்படிக்கு
ஜான்சன் செல்லத்துரை
அமெரிக்கா
|