இந்த வாரத்திற்கான குருஜியின் கேள்வி இதோ!!!..
கடவுள் என்று வணங்கப்படும் கிருஷ்ணர் கோகுலத்தில் பெண்களோடு லீலைகளில் ஈடுபட்டது சரியான நிகழ்வுதானா...?
என்ற கேள்விக்கு நடைமுறைக்கு சாத்தியமான பதிலை தந்தவர் திரு ராம் குமார் அவரை குருஜியின் சார்பில் பாராட்டுகிறோம் அவருக்கான பரிசினை நேரில்வந்து குருஜியின் கைகளால் பெற்றுகொள்ளலாம் அல்லது அவரது வங்கி முகவையை அனுப்பினாலும் நாங்கள் அதில் செலுத்தி விடுகிறோம்.
ராம் குமாரின் பதில் இதோ
ராம் குமாரின் பதில் இதோ
கண்ணன் கோபிகை பெண்களுடன் லீலைகளில் ஈடுபட்டது சரியான நிகழ்வே.இதில் தவறு ஒன்று மில்லை.இந்த நிகழ்வின் மூலம் நாம் அறியப்படும் உண்மை எதுவென்றால் இறைவனை அடைய இதுவும் ஒரு வழி.உதாரணத்திற்கு நாம் ஸ்ரீ ராமகிருஷ்ணரை எடுத்து அவர் நமக்கு போதித்து விட்டு சென்ற வழியில் இதுவும் ஒன்று.தாசனாக,நண்பனாக,காதலனாக,சேவகனாக,கணவனாக இன்னும் பல விதமான வழிமுறைகளில் நாம் இறைவனை நினைத்து பக்தி செய்யலாம். இதில் கோபிகைகள் கண்ணனை லீலைகள் மூலம் தொழுதனர்.மனம் என்பது நமது ஆத்மாவின் படர்க்கை.அதைதான் மனம் என்று அழைக்கிறோம்.கோபிகைகள் எனும் ஜீவாத்மாக்கள் பரமாத்மாவை லீலைகள் மூலமாக சேவித்தனர்.அதனால் அவர்களுக்கு மோட்சம் உண்டாயிற்று.பக்தியால் மட்டும்தான் இறைவனை அடைய முடியும் என்றில்லை.காமம்,கோபம்.மோகம் போன்ற சக்திகளை இறைவனிடம் நோக்கி செலுத்தும் பொது,அது அவனுக்கு பக்தி செய்வது போன்றுதான்.நாம் இறைவனிடம் எதை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கிறோமோ,அவன் நம்மை நோக்கி 10 அடி எடுத்து வைத்து முன் வருகிறான்.அதனால் கோபிகைகள் மோகம் மூலம் கிருஷ்ணனை பக்தி செய்து சேவித்தனர்.அவர் அந்த மோகத்தை பக்தியாக எடுத்து கொண்டு லீலைகள் மூலம் அவர்களுக்கு இறைவன் எனும் ஆனந்தத்தை கொடுத்து முடிவில் பரமபதம் பேரானந்தத்தை கொடுத்தான்.இதை உணர்த்த நாராயணன் நமக்கு கொடுத்த திருவிளையாடல்..
இப்படிக்கு
ராம் குமார்
|