Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆண்மை குறைவை நீக்கும் அத்திமர தாயத்து !





குருஜி அவர்களுக்கு, வணக்கம். ஒன்பது கிரகங்களுக்கும் தனித்தனியான மரம் அல்லது செடி ஒன்று உண்டு என்றும், குறிப்பிட்ட கிரகத்தின் வீரியம் குறைந்தவர்கள் அந்த மரத்தின் வேர்களை தாயத்துகளாக அணிந்து கொள்ளலாம் என்றும், அப்படி செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள் இது உண்மையா? உண்மை என்றால் எந்த கிரகத்திற்கு என்ன மரம் என்றும், என்ன மந்திரம் என்றும் கூற முடியுமா? தயவு செய்து உதவி செய்யுங்கள்.

இப்படிக்கு,
சேதுராமன்,
வத்தலகுண்டு.



ண்ணில் படைக்கப்பட்ட தாவரங்கள் அனைத்துமே கிரகங்களின் ஆற்றலை ஈர்க்கவல்லதாக இருக்கிறது. சில குறிப்பிட்ட தாவரங்கள் குறிப்பிட்ட கிரகத்தின் ஆற்றலை மிக அதிகப்படியாக ஈர்க்கிறது. அந்த வகையில் வில்வம் சூரியனையும், பாலைமரம் சந்திரனையும், நாயுருவி செடி செவ்வாயையும், புங்கன்மரம் புதனையும், கண்டு பரங்கிமரம் குருவையும், அத்திமரம் சுக்கிரனையும், வன்னிமரம் சனியையும், சந்தனமரம் ராகுவையும், அஷ்வகந்தி கேதுவையும் மிக அதிகமாக தன்பால் ஈர்க்கிறது.

உதாரணத்திற்கு ஒருவருக்கு சுக்கிரன் பலம் குறைந்திருந்தால் அவருக்கு ஆண்மைக் குறைவும், குழந்தை பெற்றுக் கொள்வதற்கான சக்தி குறைவும் மிக அதிகமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் அத்திமர வேரை வெள்ளிக்கிழமை அதிகாலை முறைப்படி காப்பு கட்டி எடுத்து, நாற்பத்தி எட்டு நாட்கள் சுக்கிரனின் மூல மந்திரத்தால் ஊருவேற்றி வெள்ளி தாயத்தில் வைத்து கட்டிக் கொண்டால் கண்டிப்பாக அந்த குறைகள் நீங்கும். இப்படி ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்தனியான விதிமுறைகள் உண்டு. அவற்றை முறைப்படி செய்தால் நல்ல பலனை அனுபவிக்கலாம்.

இதே போல செல்வம் இல்லாதவர்கள், தொழிலை சிறப்பாக நடத்த முடியாதவர்கள், பொருளாதரத்தில் சிக்கல் உடையவர்களுக்கு  குரு கிரகத்தினுடைய ஆற்றல் குறைவாக இருக்கும். எனவே தான் அவர்களால் எவ்வளவு முயற்சி செய்தாலும், முன்னுக்கு வரமுடியாமல் தவிப்பார்கள் இவர்களும் குருவுக்கு சொந்தமான கண்டுபரங்கி வேர்களை எடுத்து தாயத்து செய்து அணிந்தால் கண்டிப்பாக பணச் சிக்கல்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இதைப் போன்று திருமணத் தடை, தீய சக்திகளிடமிருந்தும் பாதுகாப்பு, ஆரோக்கிய குறைவு, வேலையில்லாத சிக்கல் போன்று ஒவ்வொரு குறைகளுக்கும் தனித்தனி தாயத்துகள் உண்டு.

-----------------------






Contact Form

Name

Email *

Message *