குருஜி அவர்களுக்கு, வணக்கம். நமது இந்து மதத்தில் குங்குமம் இல்லாமல் சுமங்கலி பெண்கள் இருக்க கூடாது என்று கட்டாயப்படுத்துகிறார்களே அதற்கு என்ன காரணம்?
இப்படிக்கு,
வசுமதி ,
சென்னை .
சுமங்கலிகள் மட்டுமல்ல யாருமே வெறும் நெற்றியோடு இருக்க கூடாது. காரணம், மற்ற மனிதர்களின் சிந்தனை நம்மை தாக்குவதற்கு ஏற்ற இடமாக இருப்பது புருவ மத்தி. இந்த பகுதி வழியாகத்தான் வேறு மனிதர்களின் நல்ல எண்ணமும், கெட்ட எண்ணமும் நமக்குள் பாய்கிறது. இது தேவையற்ற சலனத்தை நம்மில் ஏற்படுத்திவிடுகிறது. மனோ வசியம் செய்பவர்கள் கூட தங்களது வசிய சக்தியை, இந்த வழியாகத்தான் பிரயோகம் செய்வார்கள். எனவே இந்த இடத்தில் மறைப்பு வேண்டும். அதனால் தான் குங்குமம், சந்தனம், விபூதி போன்றவைகளை நெற்றியில் இட்டுக்கொள்ள சொன்னார்கள்.