அன்புள்ள குருஜி அவர்களுக்கு, வணக்கம். எங்கள் வீட்டிற்குள் அடிக்கடி பாம்பு நடமாட்டம் இருக்கிறது. குழந்தைகள் இருப்பதனால் பயமாக உள்ளது. பாம்புகள் வீட்டிற்குள் வராமல் தடுக்க ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள்.
இப்படிக்கு,
சாந்தலஷ்மி,
புதுக்கோட்டை.
பாம்புகள் இயற்கையாக வாழுகின்ற புதர் பகுதிகளை அழித்துவிட்டு வீடுகளை கட்டினால் இதுதான் நிலைமை. அவைகள் தங்க, உணவு எடுக்க சரியான இடம் இல்லாத போது வேறு எங்கு செல்லும்? அதனால் தான் இயற்கையை தொல்லை செய்யாதீர்கள் என்று கூறுவது. இருப்பினும்,
குங்கு மாங்கித தேஹாய குந்தேந்து தவளாய ச
விஷ்ணுவாஹ நமஸ்துப்பியம் பக்ஷி ராஜாய தே நம
என்ற கருடனுக்குரிய ஸ்தோத்திர மந்திரத்தை, வீட்டில் மாலையில் விளக்கு ஏற்றும் போது தினசரி பதினெட்டு முறை சொல்லி வந்தால் பாம்புகளினால் வரும் தொல்லை விலகும்.