குருஜி அவர்கலுக்கு வணக்கம் கருட தரிசனத்தை எந்த நாட்களில் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்
இப்படிக்கு
சுசிலா
தேன்கனிக்கோட்டை
கருடனை தரிசிப்பதும் பெருமாளை தரிசிப்பதும் ஒன்று என்று மிக சிறந்த பாகவதர்கள் கூறுவார்கள் காரணம் நாராயணனுக்கு சேவை சாற்றுகிற சாதாரண பக்தன் கூட நாராயணன் வடிவாகவே மாறுவான் என்பது தான் பாகவத தர்மத்தின் மிகப்பெரிய தாத்பரியம் எனவே அந்த வகையில் கருடதரிசனம் மிகசிறந்த வழிபாட்டு முறையாகும்
ஆரோக்கியம் பெருகி நோய்கள் விலகவேண்டுமானால் ஞாயிற்று கிழமையும் துன்பம் நீங்கி இன்பம் பெருக திங்கள் கிழமையும் மகாலஷ்மியின் அருள் நிரந்தரமாக கிடைக்க செவ்வாய் கிழமையும் நினைத்த காரியங்கள் கைகூடி வர புதன் கிழமையும் பில்லி சூன்யம் மாந்திரீக தொல்லைகள் விலக வியாழாக் கிழமையும் ஆயுள் கூடுவதற்கு வெள்ளி கிழமையும் ஆனந்தம் மட்டுமே வாழ்க்கையில் இருப்பதற்கு சனிக்கிழமையும் கருட தரிசனம் செய்யவேண்டும் என்று சொல்கிறார்கள்.