Store
  Store
  Store
  Store
  Store
  Store

முருகனை வழிபட்டால் குழந்தை பிறக்கும் !





ன்புள்ள குருஜி அவர்களுக்கு, பணிவான வணக்கம். அமெரிக்காவிலிருந்து நந்தகுமார்-மஞ்சுளா இணைந்து எழுதும் வேண்டுதல் கடிதம். உங்கள் இணையதளத்தை பார்த்த நாள் முதல் எப்படியாவது உங்களிடம் எங்கள் குறைகளை முறையிட வேண்டும் என்று விரும்பி பல முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பார்த்தோம். எங்கள் துரதிருஷ்டம் அது இயலவில்லை. எங்களுக்கு திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் முடிந்து விட்டது. இன்னும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் நாங்கள் அனுபவிக்கும் மனக் கஷ்டம் மிக அதிகம். சொந்த நாட்டிற்கு வந்தால் உறவினர்கள் விசாரிப்பார்களே என்ற எண்ணத்தில் இரண்டு வருடமாக ஊருக்கே வரவில்லை. எங்கள் பெற்றோர்கள் எங்களைப் பார்க்கத் துடியாக துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இறைவன் மட்டும் இன்னும் கருணை காட்ட மறுக்கிறான். எங்கள் இருவரின் உடல் நலமும் நன்றாக இருக்கிறது. எங்கள் ஜாதகத்தை இத்தோடு அனுப்பி உள்ளோம். எங்களுக்கு குழந்தை இருக்குமா? அல்லது தத்து எடுத்துக் கொள்ள வேண்டுமா? என்பதையும் கூறவும். மேலும் உங்களிடம் அமிர்த தாரா மந்திர தீட்சை எடுத்துக் கொண்டால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்குமென்று நம்புகிறோம். அப்படி செய்யலாமா? தயவு செய்து வழிகாட்டவும்.

இப்படிக்கு,
நந்தகுமார் குடும்பத்தினர்,
அமெரிக்கா.



ரியான தாம்பத்திய வாழ்விற்கு இறைவன் தருகிற நற் சான்றிதழ் குழந்தை பாக்கியமென்று பலரும் நம்புகிறார்கள். அப்படி என்றால் குழந்தை இல்லாத தம்பதியினர் சரியான தாம்பத்யம் நடத்தவில்லையா என்று யாரும் சிந்திக்க கூடாது. ஒன்றாம் வகுப்பிலிருந்து இரண்டாம் வகுப்பிற்கு செல்ல கிடைக்கும் மதிப்பெண் போன்றது தான் மழலைச் செல்வம் என்பது.

கல்யாணம் முடிந்து, உடனடியாக குழந்தை இல்லை என்றால், உற்றார் உறவினர்கள் கேட்கின்ற கேள்வியும், பார்க்கின்ற விதமும், ஒரு விதமாக இருக்கும். அதை அனுபவித்தவர்களுக்கு தான் கஷ்டம் தெரியும். இதனால், குழந்தைகள் இல்லாத பல தம்பதியினர் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கே அஞ்சுவார்கள். இப்படிப்பட்ட தம்பதியினர் முதலில் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது மற்றவர்களின் சான்றிதழுக்காக காத்திருப்பது அல்ல. நம் மனசாட்சியும், இறைவனும் சான்றிதழ் தந்தால் போதும் என்ற எண்ணத்தை வளர்த்தால் எந்த பிரச்சனையும் கிடையாது.

ஜாதகத்தில் இரண்டாம் இடத்து அதிபதி, ஐந்தாம் இடத்தில் உச்சம் பெற்றிருந்தால் புத்திர பாக்கியம் கண்டிப்பாக உண்டு என்று ஜோதிட நூல்கள் தெளிவாக கூறுகின்றன. எனவே உங்களுக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் இருக்கிறது என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை. நீங்கள் உடனடியாக குழந்தை பிறந்தவுடன், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்து குழந்தையை தொட்டில் கட்டி கோவிலை சுற்றி வந்து பிரார்த்தனை செலுத்துவோம் என்று வேண்டிக் கொள்ளுங்கள். கண்டிப்பாக பலன் கிடைக்கும். அமிர்த தாரா மந்திர தீட்சை எடுத்துக் கொள்வது உங்கள் சொந்த விருப்பம் அதற்கும் பலன் கண்டிப்பாக உண்டு இறைவன் உங்களது குறைகளை விரைவில் நீக்குவான்.






Contact Form

Name

Email *

Message *