Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆசைகளை நிறைவேற்றும் அதிசயமந்திரம்



மிர்ததாரா மஹாமந்திர தீட்சை பற்றி எங்களுக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன. குறிப்பாக சொல்வது என்றால் இந்த மந்திர தீட்சையை காசுதரும் மந்திரம் என்ற தலைப்பில் கொடுக்கிறீர்கள். அப்படி என்றால் இது பண பிரச்சனையை மட்டும் தீர்க்க கூடியது தானா? மற்ற பிரச்சனைகளை இது தீர்க்காதா?




குருஜி:- மனிதனாக பிறந்து விட்டாலே அவனை சுற்றி ஏராளமான பிரச்சனைகள் மலிந்து விடுகிறது. இவைகள் நமது சொந்த தவறுகளாலும் வருகின்றன. சென்ற பிறவியில் நாம்
செய்த பாவங்களின் சம்பளமாகவும் வருகிறது. நமது குடும்ப முன்னோர்கள் செய்த தீமைகளாலும் வருகிறது.

செல்வம் இல்லாமையால் வருகிற துயரம், குடும்பத்தில் அமைதி இல்லாததால் ஏற்படுகிற துன்பம், உடம்பில் ஆரோக்கிய குறைவால் நேருகிற கஷ்டம் இப்படி விதவிதமான சோதனைகள் உண்டு. இந்த சோதனைகள் அனைத்துமே பல வடிவங்களில் இருந்தாலும் அனைத்தும் புறப்படுகிற மூலம் என்பது ஒன்றே ஒன்று! அது நமது மனம். இந்த மனதை செழுமை படுத்திவிட்டால், கூர்மையாக்கி விட்டால் ஏற்பட கூடிய கஷ்டங்களிலிருந்து மனிதன் தப்பித்து கொள்ளலாம்.

ஆனால் நமது மனது பேய்பிடித்த குரங்கு போன்றது, கட்டுகடங்காமல் ஆடக்கூடியது இப்படி குதியாட்டம் போட்டுகொண்டிருக்கிற மனதை பிடித்து இழுத்து ஒருநிலைபடுத்தி, சீரிய வழியில் நடைபோட செய்து அறிவு கண்ணை திறந்து வைப்பதே ''அமிர்ததாரா மகாமந்திரம்'' அதாவது இந்த மந்திரம் நம்மை போன்ற சாதாரண மனிதர்களுக்கு வருகிற அனைத்து வித பிரச்சனைகளுக்கும் ஒரே மருந்தாக இருக்க கூடியது.

அதனால் இதை சகல பிரச்சனைகளையும் தீர்க்கும் மந்திரம் என்று சொல்லலாமே!! அதை விட்டு விட்டு ''காசுதரும் மந்திரம்'' என்று கூறுவது ஏன்?  என்று ஒருசிலர் யோசிக்கலாம். அந்த யோசனை தவறு அல்ல நம்முடைய நோக்கம் இந்த மந்திரத்தை கற்றுக்கொண்டு சகலவிதமான மனிதர்களும் தங்களது தனிப்பட்ட துக்கங்களிருந்து விடுபட வேண்டும் என்பதே நமது நோக்கம். அதற்காக மற்றவர்களை சற்று திரும்பி பார்க்க வைப்பதற்காகவே அந்த பெயர் வைக்கப்பட்டது. வழிமுறை சற்று விமர்சனத்துக்குறியதாக இருந்தாலும் கூட நோக்கம் சரி என்பதனால், இதை பெரிதுபடுத்தவேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.

அதனால் மிக தெளிவாகவே சொல்ல விரும்புகிறேன். பணப்பிரச்சனைகள், வியாபார தொழில் சிக்கல்கள், குடும்ப பிரச்சனைகள், கணவன்,மனைவி மனஸ்தாபம், குழந்தைகளின் கல்வி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, நல்ல இல்லறத்தை பெற்றுத்தரும் அறிய வாய்ப்பு, நவக்கிரக தோஷங்களால் வரும் திருமண தடை, குழந்தை இன்மை போன்றவைகளை அகற்றிடவும். கல்வி, அறிவு, திறமை, இவைகள் வளர்ந்திடவும், உத்தியோகத்தில் மேன்மை கிடைத்திடவும், ஆயுள் ஆரோக்கியம் நிலைத்திடவும், வந்த நோய்கள் விலகிடவும் இந்த ''மந்திர பயிற்சி'' நிச்சயம் துணைபுரியும்.

இந்த மந்திர பயிற்சியில் தோல்வி என்பதே கிடையாது எனலாம் நீங்கள் எதை நோக்கி ஆர்வத்தோடு இந்த மந்திரத்தை சொல்கிறீர்களோ அதை உங்களுக்கு இது பெற்றுத்தரும். அப்படி பெற்றவர்கள் நிறையப்பேர் தங்களது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டு வருகிறார்கள். ''காசுதரும் மந்திரம்'' என்ற பெயர் இவ்வளவு சந்தேகங்களை உருவாக்கும் என்று நான் நினைக்கவில்லை. எனவே அந்த பெயரை மாற்றி அமைக்கலாம் என்று நினைக்கிறேன். ஆசையை நிறைவேற்றும் அமிர்ததாரா  என்றோ அல்லது அந்த வகையில் வேறு பெயர்களோ மிக விரைவில் வைத்துவிட சொல்கிறேன்.



ந்த மந்திரத்தை செல்வம் வேண்டும் என்று ஒருவர் கற்றுக்கொள்கிறார் அது அவருக்கு கிடைத்துவிடுகிறது. அதன்பிறகு அவருக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றோ திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றோ தோன்றினால் இதே மந்திரம் போதுமா? இதை அவைகளுக்கு எப்படி பயன்படுத்தலாம்?



குருஜி; சங்கல்பம் என்ற ஒரு கருத்து நமது சனாதன தர்மத்தில் இருக்கிறது. அதாவது நமக்கு ஒரு பொருள் வேண்டுமென்றால் அதை பெற்றே தீருவது என்று உறுதி எடுத்து கொள்வதே சங்கல்பமாகும். முதலில் ஒரு காரியத்திற்காக சங்கல்பம் எடுத்து கொண்டு மந்திரத்தை ஜெபம் செய்து வரவேண்டும். அந்த காரியம் நிறைவேறிய பிறகு அடுத்த விஷயதிற்காக சங்கல்பம் எடுத்துகொள்ளலாம். இப்படி நமக்கு வருகின்ற ஒவ்வொரு பிரச்சனைகளையும் தீர்த்து கொண்டே போனால் இறுதியில் ஒன்றே ஒன்று மட்டும் நிறைவு பெறாமல் இருப்பதை பார்ப்போம்.

அந்த ஒன்று மிக முக்கியமானது நாம் மனிதனாக பிறவி எடுத்திருப்பதே. அதற்காகத்தான் அது இறைதரிசனத்தை பெறுவதாகும். இந்த எண்ணம் வந்தவுடனே நமது உலக ஆசைகளை விலக்கிவிட்டு இறைவனை தேட ஆரம்பித்துவிடுவோம். அப்படி நீங்கள் தேடும் காலம் வரும்வரையில் உங்கள் தேவைகள் எதுவாக இருந்தாலும் அதை ''அமிர்த தாரா மஹாமந்திரம்'' கொடுத்து கொண்டே இருக்கும்



வ்வொரு மனிதனுக்கும் தனித்தனியான மந்திரங்கள் கொடுக்கிறேன் என்று சொல்கிறீர்கள். உலகில் கணக்கற்ற மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி மந்திரங்கள் இருக்கிறது என்றால் அதை நம்புவதற்கு சற்று கடினமாக இருக்கிறது. எனவே நீங்கள் அதற்கு சரியான விளக்கம் தரவேண்டும்.?




குருஜி:- பலகோடி மனிதர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருமே மூன்றே மூன்று சுபாவத்தில் அடங்கி விடுகிறார்கள். அந்த மூன்று குணங்கள் ஒன்றோடு ஒன்று கலந்தும் கலக்காமலும் எதாவது ஒன்றுமட்டும் மிகைபட்டும் மனிதர்கள் இருப்பதனால் ஒவ்வொரு மனிதனும் தனித்தனி குணாதிசயத்தோடு நமக்கு தெரிகிறான். மனிதர்களை சற்று ஆழ்ந்து நோக்கினால் அவர்களது சுபாவம் நன்கு தெரியும். இதை அனுபவத்தின் மூலமும் அனுமானத்தின் மூலமும் முடிவு செய்துவிடலாம்.

அப்படி தேர்வு செய்யப்படும் மனிதர்களின் குணங்களுக்கு ஏற்றவாறு பீஜமந்திரங்கள் இருக்கின்றன. அவைகள் தனித்தனி ஒலியாக பிரிந்தோ, கூடியோ மந்திர வடிவு பெறுகிறது. அதை தேர்ந்தெடுத்து குறிப்பிட்ட மனிதனுக்கு கொடுக்கும் போது அவனுக்கு மட்டுமே அது சொந்தமாகி விடுகிறது. இப்படி அவரவருக்குரிய மந்திரத்தை கொடுக்கும் ஆற்றல் எனது குருவின் வழியாக நான் பெற்றேன். இறைவன் அருளால் எனது தனிப்பட்ட சக்தியாலும், வேறுபல தெய்வீக துணையாலும் இம்மந்திரங்கள் எனக்கு கிடைக்கின்றன. இவைகளை நீங்கள் புத்தகங்களிலோ வேறு எந்த வகையிலோ பார்த்திருக்க முடியாது. குருவின் அருளும், இறைவனின் திருவருளும் மட்டுமே இதை தரும்.




பொதுவாக ஒவ்வொரு மந்திரங்களுக்கும் அதிதேவதைகள் உண்டு அந்த வகையில் அமிர்ததாரா மஹா மந்திரத்தின் அதிதேவதை யார்?




குருஜி:- காமதேனு, கற்பக விருட்சம், அட்சயபாத்திரம் என்பவைகள் எல்லாம் கேட்டதை கொடுக்கும் சக்தி வாய்ந்தது. ஒருவர் கேட்டதை கொடுக்கும் போது கொடுப்பதனால் அவரை காப்பதாகவும் ஆகிவிடுகிறது. ''அமிர்ததாரா மஹாமந்திரம்'' என்பதும் கேட்டதை கொடுக்கும் சக்தி வாய்ந்தது என்பதனால் அது காக்கும் பொருளாகிறது. காப்பது என்று வந்துவிட்டாலே அது மகாவிஷ்ணுவின் தொழிலாகி விடுவது. எனவே இந்த மந்திரத்தின் அதிதேவதையாக இயற்கையாகவே ஸ்ரீ மகாவிஷ்ணு வந்துவிடுகிறார். இருப்பினும் அவரது அம்சம் பொருந்திய மகாலஷ்மி, சங்குசக்கரம், சேஷன், கருடன், போன்றவைகளும் மந்திரத்தின் ஒலி அலைகளுக்கு ஏற்றவாறு அதிதேவதையாக வருவார்கள். நாம் பொதுவாக காக்கும் கடவுளான விஷ்ணுவை மனதில் நிறுத்தி மந்திரம் சொன்னாலே போதுமானது.



மிர்ததாரா மஹாமந்திர பயிற்சியில் ஈடுபடுகிற போது முத்திரைகளை பயன்படுத்தலாமா? பயன்படுத்தலாம் என்றால் எந்த முத்திரையை பயன்படுத்தலாம்?





குருஜி:- பொதுவாக இந்த மந்திர பயிற்சிக்கு முத்திரைகள் பயன்படுத்த வேண்டுமென்று அவசியமில்லை. நானும் அப்படி யாரையும் வற்புறுத்துவது கிடையாது. முத்திரைகளை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால் சின் முத்திரையே இதற்கு ஏற்றதாகும்.



வருங்காலத்தில் இன்னும் பல சந்தேகங்கள் வரலாம். அவற்றை குருஜியோடு அவ்வபோது பேசி தெளிவுபடுத்தி கொள்ளலாம்........ 






Contact Form

Name

Email *

Message *