Store
  Store
  Store
  Store
  Store
  Store

சட்டங்களை அடக்கும் பூஜை



ன்புள்ள குருஜி அவர்களுக்கு, பணிவான வணக்கம். என் வறுமையின் காரணமாக, அரபு நாட்டில் வேலை செய்து வருகிறேன். இங்குள்ள சட்ட திட்டங்கள் மிகவும் கொடியவைகள். நாம் விரும்புகிறபடி பூஜை புனஸ்காரங்களை வீட்டில் கூட செய்ய முடியாது. திருட்டுத்தனமாகத்தான் இந்துக்கள் வழிபாடுகளை நடத்த வேண்டும். இறைவனை பயந்து, பயந்து வணங்குவதற்கு எனக்கு பிடிக்கவில்லை. ஆனாலும், பூஜைகள் செய்யாமல் என்னால் இருக்க முடியவில்லை. இதனால், இருதலை கொள்ளியாக நான் தவிக்கிறேன். எனக்கு சரியான வழிகாட்டி உதவுமாறு உங்கள் தாழ்பணிந்து கேட்கிறேன்.

இப்படிக்கு,
நரசிம்மன்,
சவுதி.



ருநாள் கிருஷ்ணரும், அர்ஜுனனும் ஒரு நந்தவனத்தில் உலாவிக் கொண்டிருந்தார்கள். அப்போது வானத்தில் பல பூதகனங்கள் கூடை கூடையாக பூக்களை சுமந்து கொண்டு சென்றன. அதை பார்த்த அர்ஜுனன் இந்த பூதகணங்கள் யார் செய்த பூஜையில் உள்ள மலர்களை சுமந்து செல்கின்றன என்று கேட்டான். அதற்கு கிருஷ்ணன், பூமியில் பீமன் பூஜை செய்து கொண்டிருக்கிறான். அவன் செய்த அர்ச்சனை பூக்களை, பூதகணங்கள் எடுத்துச் செல்கின்றன என்று.

அர்ஜுனனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. எனக்கு தெரிந்து பீமன் இதுவரை உண்பது, உடற்பயிற்சி செய்வது, உறங்குவது என்றுதான் இருக்கிறானே தவிர, ஒருமுறை கூட பூஜை, தியானம் என்று செய்ததை நான் பார்த்ததில்லையே. நீ பொய் சொல்வதற்கும் வர வர அளவே இல்லாமல் போய்விட்டது. வேடிக்கை செய்யாதே கிருஷ்ணா என்றான்.

அர்ஜுனா, நீ பீமனை பற்றி போட்டுவைத்திருக்கின்ற கணக்கு மிகவும் பிழையானது. பீமன் மற்றவர்களை போல், ஆடம்பரதிற்காக உலகத்தவர்களின் மதிப்பிற்காக பூஜை செய்பவன் அல்ல. அவன் உண்டாலும், உறங்கினாலும் அவனது மனது, சதா என்னையே தியானித்துக் கொண்டிருக்கிறது. அவனது எண்ணம் என்ற மலர்கள் என் பாதத்தை நோக்கியே அர்ச்சனை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. பீமன் செய்தது பூஜைக்கெல்லாம் ராஜ பூஜையான மானச பூஜை. அதற்கு புறக்கருவிகள் தேவையில்லை. அகம் ஒன்று மட்டுமே போதும் என்று கிருஷ்ணன் பதில் சொன்னான்.

மானஸ பூஜை என்ற மனதிற்குள் செய்யும் பூஜையே மிகவும் விஷேசமானது. காரணம் வெளிபொருட்களை கொண்டு செய்யப்படும் பூஜைகளே மனதை அடக்குவதற்கு தான். சண்டித்தனம் செய்யும் மனதையே பூஜை செய்ய பழக்கிவிட்டால் தானாக மனது சுலபமாக அடங்கிவிடும். எனவே தான் மானச பூஜை என்பதை ராஜ பூஜை என்று நமது முன்னோர்கள் மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள். இந்த பூஜை செய்ய மூர்த்தி வேண்டாம். பூ, பழங்கள் வேண்டாம். தூபதீபம் என்று எதுவுமே வேண்டாம். மலர்ந்த மனது ஒன்று மட்டுமே போதுமானது.

உறக்கத்திலிருந்து எழுந்ததும், குளித்து முடித்து தனிமையான அறையில் அல்லது யாருக்கும் தொந்தரவு இல்லாத இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். கண்களை மூடுங்கள். உங்களது இஷ்டமான கடவுளின் உருவத்தை மனக் கண்ணில் கொண்டுவாருங்கள். குடம் குடமாக பாலிலும், நெய்யிலும் அபிஷேகம் செய்து, பன்னீரால் நீராட்டுங்கள். நீங்கள் விரும்புகிற ஆடை, ஆபரணங்களை இறைவனுக்கு சாற்றுங்கள். வண்ணமயமான மலர்களை அவனுக்கு சமர்ப்பித்து, கோடி அர்ச்சனையை செய்யுங்கள். மனமிட்டு அவனிடம் பேசுங்கள். உங்கள் குறைகளை நிறைகளாக்க அவனிடம் மன்றாடுங்கள். கடவுளுக்கும், உங்களுக்கும் இடையில் யாருமே இருக்கமாட்டார்கள். எந்த அரசாங்கமும் வராது. சட்டங்கள் அங்கே சத்தம் இல்லாமல் அடங்கிவிடும்.





Contact Form

Name

Email *

Message *