Store
  Store
  Store
  Store
  Store
  Store

வெற்றியின் நொடிகள்...!



ழுது அழுது கிடந்தது போதும்
தொழுது நின்று தோற்றது போதும்
எழுந்து நடந்தால் இன்னல் மாயும்
உழுத நிலமே உலகம் வணங்கும்

அலைகள் இருப்பது ஆழியின்  நன்று
உலையில் வீழ்வது உருக்கின் நன்று
கலையில் அழுவது கண்டால் நன்று
மலையில் ஏறினால் மருந்தும் நன்று

ஒருமுறை வருவதே உலக வாழ்க்கை
மறுமுறை அரிது மானிடர் யாக்கை
இருக்கும் போதே இழந்து நின்றால்
வருந்தும் தலைமுறை வருடங்கள் நூறு...

சாம்பலும் இங்கே சரித்திர மாகும்
ஆம்பல் மலரும் அம்புலி பகைக்கும்
மாம்பழச் சுவைக்கு வண் டினம் மயங்கும்
சோம்பல் மயக்கம் துயரத்தின் துவக்கம்

கண்ணீர் விட்டவன் கருகிப் போவான்
மண்ணைத் தொட்டவன் மறுபடி எழுவான்
புண்கள் என்பது புகழின் படிகள்
விண்ணைத் தொடுவதே வெற்றியின் நொடிகள்

வருவது வரட்டும் வாழ்ந்து பார்ப்போம்
தருவதை தரட்டும் தளரா துழைப்போம்
ஒருநாள் உலகம் உணர்ந்து கொள்ளும்
திருநாள் அன்றே தெய்வம் பேசும்






Contact Form

Name

Email *

Message *