Store
  Store
  Store
  Store
  Store
  Store

காயத்ரி மந்திரம் எப்படி சொல்லாம்...?



குருஜி அவர்களுக்கு, வணக்கம். காயத்ரி மந்திரத்தை வாய்விட்டு உரத்த குரலில் பாராயணம் செய்வதனால் பலன் கிடைக்குமா? தயவு செய்து விளக்கம் தரவும்.

இப்படிக்கு,
நாகராஜன்,
கோவை.



தரேய பாஷ்யம் என்ற ஒரு நூல் இருக்கிறது. அதில் காயத்ரி மந்திரம் சொல்வதனால், அதாவது காயத்ரி மந்திரத்தை இன்னின்ன மாதிரி சொல்வதனால், இன்னின்ன பலன் கிடைக்கும் என்ற விளக்கம் இருக்கிறது.

பாஷகம், உபாம்ஷ, மானஷம் என்பது அந்த மூன்று வகையாகும். பாஷ்கம் என்றால், கெட்டியாக அதாவது அழுத்தம் திருத்தமாக நின்று நிதானமாக சொல்வதாகும். இப்படி சொல்வதற்கு, அதி தேவதையாக உமாதேவி இருக்கிறாளாம். இவள் தனது சக்திக்கு உட்பட்ட அனைத்து பலனையும் தருவாளாம்.

உபாம்ஷ என்றால் மெதுவாக உதடு மட்டும் அசையும்படி சொல்வதாகும். இதற்கு அதிதேவதை வாயு பகவான். எனவே இவர் இதற்கான பலனை தருவார். காயத்ரிதேவியே அதி தேவதையாக இருப்பது மானஷம் என்ற மூன்றாவது வகையில். மானஷம் என்றால் மனதிற்குள் சொல்வதாகும். இப்படி சொல்வதனால், காயத்ரியின் முழு பலனையும் அனுபவிக்கலாம். என்று ஐதரேய பாஷ்யம் உறுதியாக சொல்கிறது. எனவே மந்திரத்தை மனதிற்குள் சொல்வது தான் மிகச் சிறந்த வழிமுறையாகும்.






Contact Form

Name

Email *

Message *