குருஜி அவர்களுக்கு, வணக்கம். ஆஞ்சநேயரை வழிபட்டால், நஷ்டம் விலகி நல்லபடியாக வாழலாம் என்று சொல்கிறார்கள். எங்கள் ஊரில் ஆஞ்சநேயர் கோவில் இல்லை. தினசரி பத்து கிலோ மீட்டர் சென்றால் தான் கோவில் இருக்கிறது. அதனால் நான் வீட்டிலிருந்தே வழிபாடு செய்து ஆஞ்சநேயரின் அருளை பெற பொதுவான மந்திரம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். என்னை போன்ற பலருக்கு பயனுடையதாக இருக்கும்.
இப்படிக்கு,
கணேசமூர்த்தி,
கோடாவிளை.
ஓம் ரீம் ராம் ராம் அஞ்சநேய
ராம் ராம் மம சர்வ சத்ரு
சங்கட நாசாய நாசாய ராம் ராம் ஸ்ரீம் ஓம்
இந்த மந்திரத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம், மனதிற்குள் ஜெபம் செய்து வாருங்கள். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாகவும் மன ஒருநிலைப் பாட்டுடனும், மந்திரத்தை சொல்கிறீர்களோ? அந்த அளவு விரைவில் சங்கடங்கள் விலகி, நல்ல வாழ்க்கை அமைய, ஸ்ரீ ராம தூதனின் அருள் கிடைக்கும்.