குருஜி அவர்களுக்கு, வணக்கம். எனக்கு ஐம்பது வயதாகிறது. இதுவரை எந்த தொழிலையும் என்னால் முழுமையாக செய்ய முடியவில்லை. வேலைக்கு சென்றாலும் கூட, இனம்புரியாத ஏதோ காரணங்கள் ஏற்பட்டு, தொடர்ந்து செல்லமுடியாத நிலை வந்துவிடுகிறது. இதை தடுக்க என்ன பரிகாரம் செய்யவேண்டும். தயவு செய்து எனக்கு கூறி வழிகாட்டுமாறு வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
ஜம்புநாதன்,
அறந்தாங்கி.
ஜாதகத்தில் கேந்திரம் வலுப்பெறா விட்டாலும், மூலத்திரிகோண ஸ்தானம் பலம் இல்லாமல் இருந்தாலும், சரியான தொழிலோ, வேலையோ கிடைக்காது. மேலும் சூரியனும், செவ்வாயும் ஜாதகத்தில் இணைந்திருந்தால் இந்த தொல்லையை தவிர்க்க முடியாது.
இந்த அவல நிலையிலிருந்து விடுதலை அடைய வளர்பிறை அஷ்டமி நாளில், துர்க்கை அம்மனை நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும். மேலும் தினசரி உங்களால் முடிந்த ரூபாய் ஐந்தோ, பத்தோ அதை தனியாக எடுத்து வைத்து, சேமித்து மாதக் கடைசியில் அன்னதானம் செய்ய வேண்டும். அப்படி செய்தால், ஐந்து மாதத்திற்குள் நல்ல வேலை அல்லது தொழில் அமையும்.