வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்!!!
சென்றவருடம் இதே நாளில், இதே மாசி மாத அமாவாசை தினத்தில் பித்ரு தோஷ நிவர்த்திக்கான பூஜையை குருஜி துவங்கி ஏழாயிரத்திற்கும் அதிகமான அன்பர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைத்தார். பித்ரு தோஷ நிவர்த்தி பூஜையில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும், நல்ல பலன் கிடைத்ததை கண்கூடாக காண முடிந்தது.
இந்த வருடமும் அந்த பூஜையை நடத்துவதற்கு குருஜி விரும்பினாலும், பல்வேறு பட்ட பூஜைகள், யாகங்கள் போன்றவற்றை தொடர்ந்து செய்தாலும், பயணங்களை மேற்கொண்டதாலும், தற்போது வேறு சில ஆசிரம பணிகளை துவக்கி இருப்பதனாலும், அனைவருக்குமான பித்ரு தோஷ பரிகார பூஜையை தொடர்ச்சியாக செய்ய இயலாத நிலையில் உள்ளார்.
ஆனாலும் சென்றவருடம் பரிகார பூஜை நடந்து முடிந்த பிறகும் பல அன்பர்கள் தாங்களும் பூஜையில் பங்கு பெற விருப்பம் தெரிவித்தார்கள். அவர்களது வேண்டுகோள்களை அப்போது ஏற்க முடியாத நிலை இருந்தது. அதையும் கருத்தில் கொண்டு, பூஜையில் பங்கு பெற்றவர்கள் மீண்டும் நல்ல பலன்களை அனுபவிக்க வேண்டும் என்பதையும் கருத்தில் வைத்து வேறொரு திட்டத்தை உங்கள் முன்னால் வைப்பதற்கு குருஜி விரும்புகிறார்.
அதாவது அனைவருக்கும் ஒரே நேரத்தில் செய்யும் சிரமத்தை விட்டு விட்டு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக எத்தகைய காலவரைமுறையும் இல்லாமல் வருட முழுவதும் செய்து தர விரும்புகிறார். எனவே நீங்கள் உங்களை பற்றிய விபரங்களை எப்போது வேண்டுமென்றாலும், தெரிவித்து தனித்தனியாக பரிகார பூஜையை நடத்தி கொள்ளலாம்.
மிக முக்கியமாக இந்த பித்ரு தோஷ பரிகார பூஜையை, ருத்ர பூமியான காசியில் தனது சீடர்களை வைத்து செய்ய முடிவு செய்திருப்பது தனிசிறப்பாகும். காசிக்கு சென்று கிரியைகளை செய்ய விரும்பியும் செய்ய முடியாதவர்களுக்கு வரிய நிலையில் இருப்பவர்களுக்கு இது சரியான வரப்பிரசாதமாகும் இதை தவற விடாதீர்கள்.
இதற்க்கான கட்டணம் அதிகமாக இருக்குமோ என்று நீங்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. சாஸ்திரங்களின் பலன் ஏழைகளுக்கும் கிடைக்கவேண்டும் என்பதே குருஜியின் விருப்பமாகும். எனவே உங்களால் முடிந்த தொகையை அனுப்புங்கள், அது போதும்.உங்களால் பணம் கொடுக்க முடியவில்லை என்றாலும், பரவாயில்லை தபால் செலவுக்கு மட்டுமாவது அனுப்பி வையுங்கள். அன்போடு பெற்றுக்கொள்கிறோம். எப்போது வேண்டுமென்றாலும், நீங்கள் பித்ரு தோஷ பரிகார பூஜையில் கலந்து கொள்ளலாம் என்பது நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.
எனவே நீங்கள் கீழ்க்காணும் விபரங்களை எங்களுக்கு உடனடியாக அனுப்புங்கள் காசியில் உள்ள குருஜியின் சீடர்கள் காசியிலும், குருஜி உங்களுக்காக நமது ஆசிரமத்திலும் ஒரே நேரத்தில் பூஜை செய்து பிரசாதங்களை அனுப்பி வைக்கிறோம். வெளிநாடுகளில் வாழ்பவர்கள் பிரசாதத்தை இந்தியாவில் உள்ள குடும்பத்தாருக்கு அனுப்பி வைக்க சொன்னாலும் அனுப்பபடும். அல்லது வெளிநாட்டு முகவரிக்கு கூட அனுப்பலாம். வெளிநாட்டு அன்பர்கள் தங்கள் தொலைபேசி எண்ணை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
இந்த பூஜையில் பங்குபெற நீங்கள் செய்யவேண்டியது இது தான். யாருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களது பெயர், அவர் இறந்த திதி, அவருக்கும் உங்களுக்கும் உள்ள உறவு, இதில் எதாவது ஒன்று தெரியவில்லை என்றாலும் பாதகமில்லை. உங்களுக்கும் - அவருக்கும் உள்ள உறவுமுறையை எழுதினால் கூட போதுமானது. இறந்தவர்களின் புகைப்படங்கள் உட்பட பிறந்த தேதி மற்றும் இறந்த தேதி இருந்தால் மிகவும் விசேஷம் இல்லையென்றாலும்கூட பாதகமில்லை. இதில் மறக்க கூடாதது சாந்தி செய்ய விரும்பும் உங்கள் பெயர், உங்கள் தகப்பனார், தாயார் பெயரும் பூர்வீக ஊரின் பெயரும் கண்டிப்பாக எழுதவும்.
மிக முக்கிய குறிப்பு :-
சென்ற பித்ரு தோஷ பரிகார பூஜையில் பங்குபெற்றவர்கள் தங்களது முகவரியையும், முடிந்த காணிக்கையும் அனுப்பி வைத்தால் போதுமானது. அவர்கள் திதி செய்ய வேண்டியவர்களின் விபரங்கள் எங்களிடம் பாதுகாக்கப்பட்டு உள்ளது . மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள நீங்கள் விரும்பினால் கீழ்க்காணும் அலைபேசியில் எங்களை அழைக்கவும்.
காணிக்கை அனுப்ப வேண்டிய வங்கி முகவரி :-
NAME - Guruji
A/C NO - 0106301000035874,
LAKSHMI VILAS BANK,
IFSC CODE - LAVB0000106,
ARAKANDANALLUR.
காசோலை அல்லது டி.டி Guruji என்ற பெயரில் மட்டும் எடுத்து அனுப்பவும்
தபால் முகவரி :-
குருஜி,
4/76 C காமராஜ் சாலை,
அரகண்டநல்லூர் - 605752,
திருக்கோவிலூர் (தாலுக்கா),
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு.
மின்னஞ்சல் முகவரி :-
sriramanandaguruji@gmail.com.
தொலைபேசி எண் :-
+91 - 9442426434
இப்படிக்கு,
சதீஷ் குமார்,
+91 - 9442426434.