Store
  Store
  Store
  Store
  Store
  Store

மழுப்பாமல் பதிலை சொல்லுங்கள்



    குருஜி அவர்களுக்கு வணக்கம் ஆண்டிக்கு ஆண்டி ஒட்டு காச்சல் என்று சொல்வார்கள். அதாவது ஒரு சாமியாருக்கு இன்னொரு சாமியாரை பிடிக்காதாம். நீங்கள் அப்படி பட்டவர் அல்ல என்று நான் நினைக்கிறேன். அதனால் மழுப்புதல் இல்லாமல் நேரடியாக ஒரு பதிலை சொல்லுங்கள். இன்றைய நிலையில் மிகச்சிறந்த ஆன்மீக புருஷர் யார்? தயவு செய்து பதில் தரவும்.

இப்படிக்கு,
கிருஷ்ணராஜன் ,
மலேசியா .



   ண்மையை சொல்ல வேண்டும் என்று முடிவு செய்த பிறகு, அதை மழுப்பி பசப்பி பேசுகின்ற பழக்கம் எனக்கு சிறிய வயது முதற்கொண்டே கிடையாது. சரியோ? தவறோ? மனதில் தோன்றியதை பேசி விடுவேன். இதனால் பல இழப்புகளையும் எதிர்ப்புகளையும் சம்பாதித்து இருக்கிறேன். 

திறமைசாலி, அனுபசாலி பல விஷயங்களை தெரிந்தவர் என்றால், அவர் யாராக இருந்தாலும் அவரிடம் சென்று கற்றுக்கொள்வதற்கு ஆர்வமாக இருப்பவன் நான். எனவே மற்றவர்களின் திறமையை குறைத்து மதிப்பிடும் பழக்கம் எனக்கு கிடையாது. அதனால் என்னால் எப்போதும் ஒளிவு மறைவு இல்லாமல் பேச முடியும்.

நல்ல ஆன்மீகவாதிகள், பழுத்த ஆன்மீகபழங்கள் என்று பலரையும் என்னால் கூற முடியும். அவர்களில் பலர் ஊருக்கும், உலகத்தாருக்கும் தெரியாமல் வாழ்வதனால், அதாவது தெரிவிக்க விரும்பாமல் வாழ்வதனால், அவர்களை பற்றிக்கூறுவதை விட்டு விட்டு அடையாளம் தெரிந்த சிலரை கூறுகிறேன்.

நமது காலத்தில் வாழ்ந்த, காஞ்சி மகாபெரியவர், புட்டபர்த்தி சாய்பாபா போன்றோரும் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் யோகி ராம்தேவ், மாதா அமிர்தானந்தமயி, தயானந்தசரஸ்வதி இன்னும் சிலரும்.


Contact Form

Name

Email *

Message *