Store
  Store
  Store
  Store
  Store
  Store

கள்ளக் காதல் கொள்பவர் ஜாதகம்



    ன்புள்ள குருஜி அவர்களுக்கு, பணிவான வணக்கம். என் மூத்த சகோதரிக்கு திருமணம் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த ஏழு வருஷத்தில் அவள் படுகிற பாட்டை பிசாசு பார்த்தால், கூட கண்ணீர் விட்டு கதறி அழும். அவளது கணவர் செய்கின்ற கொடுமைக்கு அளவே கிடையாது. அவருக்கு இல்லாத கெட்டபழக்கம் உலகில் எதுவுமே கிடையாது. தினசரி நரக வேதனையை அனுபவித்து கொண்டிருக்கிறாள். அவரை விட்டு பிரிந்து வந்துவிடலாம் என்றால், தனக்கிருக்கும் மூன்று குழந்தைகளின் எதிர்காலம் பற்றியும் எங்கள் வீட்டின் பொருளாதார நிலை பற்றியும் நினைத்து தயங்குகிறாள். தினம் தினம் செத்துப்பிழைப்பதை விட கஞ்சியோ, கூழோ குடித்துக்கொண்டு நம் வீட்டில் இருக்கலாம் வந்து விடு என்றாலும் வர மறுக்கிறாள். அவளுக்கு எதிர்காலம் என்ற ஒன்று இருக்கிறதா? கணவரோடு அவள் நிரந்தரமாக வாழ முடியுமா? பிரிந்து வந்து விடலாமா? என்பதை தயவு செய்து நீங்கள் கூறுமாறு பணிவோடு வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
எழுமலை,
திருவண்ணாமலை.



    னைவியை கைநீட்டி அடிப்பவன் ஆண்மகன் அல்ல என்று ஊர் முழுவதும் பிரச்சாரம் நடைபெறுகிறது. பலருக்கும் உபதேசமும் வழங்கப்படுகிறது. ஆனால் பன்னெடுங்காலமாக கணவன் அடிப்பதும், மனைவி அதை சகிப்பதும் மாற்றமே இல்லாமல் நடந்து வருகிறது. கணவன் அடித்தால், அவனை திருப்பி தாக்கும் வல்லமை பெண்களுக்கு இல்லாமல் இல்லை. ஆனாலும் அவர்கள் நமது முன்னோர்கள் கூறிய கணவனே கண்கண்ட தெய்வம் என்ற வாக்கை இன்றும் சிறிதளவேனும் மதிப்பதனால் கைகட்டி மெளனமாக இருந்து வருகிறார்கள்.

எனக்கு தெரிந்து ஒருவன் தினசரி தன் மனைவியை அடித்து உதைப்பதிலேயே ஆனந்தம் கொண்டிருந்தான். சண்டை போடுவதற்கு எப்படித்தான் அவனுக்கு காரணங்கள் கிடைக்குமோ தெரியாது. தினசரி சண்டை போடுவதும், அடிதடியில் ஈடுபடுவதும் வாடிக்கையாக இருந்தான். அவன் வாயிலிருந்து வருகின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் சாக்கடையை விட அதிக துர்நாற்றம் மிக்கதாக இருக்கும். திடீரென்று ஒருநாள் அவன் அமைதியாகி விட்டான். தொடர்ச்சியாக அவனை அமைதியாகவே பார்க்க நேரிட்டது. அவனுக்கு என்ன நேரிட்டது என்று விசாரித்த போது ஒருநாள் அவன் மனைவி மகளிர் காவல் நிலையத்தில் சென்று புகார் செய்ததாகவும், அவர்கள் இவனை அழைத்து சரியான முறையில் கவனித்து அனுப்பியதாகவும் தெரிந்தது. அதன் பிறகு மனுஷன் பெட்டிப்பாம்பாக அடங்கி போய்விட்டான்.

இந்த மாதிரி ஆசாமிகளுக்கு முரட்டு வைத்தியம் கண்டிப்பாக தேவை. நீங்கள் அனுப்பி உள்ள ஜாதகத்தில், சுக்கிரன், சந்திரன், ராகு ஆகிய மூன்று கிரகங்களும் சேர்க்கை பெற்று அமைந்திருக்கிறது. இப்படி அமைந்த ஜாதகர் கள்ளக்காதலில் ஈடுபடுபவராகவும், இயற்கைக்கு முரணான வகையில் உறவு கொள்ள விருப்பம் உடையவராகவும் இருப்பார் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இவர்களை சிறிய வயதிலேயே இனம் கண்டு திருத்த வேண்டும். அப்படி திருத்துவதற்கு பரிகார முறைகளும் இருக்கிறது. ஆனால் இவரை பொறுத்தவரை காலம் கடந்து விட்டது. வருகிற சனி பெயர்ச்சியில், இவரது உடல் நிலை மிகவும் பாதிப்படையும். உயிருக்கு கண்டம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஆகவே உங்கள் தமக்கையாருக்கு நல்ல பலனை சொல்வதற்கான வழி வகை இல்லாமல், இருப்பதை அறிந்து வருந்துகிறேன். தினசரி அவரை மாரியம்மனை வழிபட்டு வரச்சொல்லுங்கள். எதையும் தாங்கும் இதயத்தை அவருக்கு அன்னை பராசக்தி கொடுப்பாள். பராசக்தி நினைத்தால் ஒரு நிமிட நேரத்தில் உங்கள் அக்காவின் துயரத்தை பனிபோல நீக்கி விடுவார். எனவே கடவுளை நம்புவதை தவிர இப்போது வேறு வழி இல்லை


Contact Form

Name

Email *

Message *