Store
  Store
  Store
  Store
  Store
  Store

கணவனை வசியம் செய்யும் ராஜவசியம் !


மாந்திரீகம்   - 4 


   சியக்கலையில் எட்டுவிதமான வசியங்கள் உள்ளதென்று கூறி அதில் மிக முக்கியமான தேவதா வசியத்தை பற்றி சென்றமுறை கூறினீர்கள். அடுத்ததாக ராஜவசியம் என்ற ஒன்றை சொன்னீர்கள். ராஜவசியம் என்றால் அரசர்களை அல்லது அரசர்களுக்கு ஒப்பான அரசுத்தலைவர்களை வசியம் செய்வதா?

குருஜி:- ராஜவசியம் என்ற வார்த்தையில் உள்ள ராஜ என்ற சொல்லுக்கு அரசன், அரசு தலைமை என்று மட்டும் பொருள் கொண்டால் அது மிக குறுகியதாக இருக்கும் என்று நினைக்கிறேன். ராஜ என்ற வார்த்தையில் தலைமை தாங்குகிற எல்லா சக்திகளையும் குறிப்பிடலாம் என்பது சற்று ஆழ்ந்து சிந்தித்தால் தெரியவரும். உதாரணத்திற்கு ஒரு குடும்பத்தின் தலைவன், ஒரு நிறுவனத்தின் தலைவன், ஒரு கிராமத்தின் தலைவன் இவர்கள் எல்லாம் மிக குறுகிய இடப்பரப்பில் அதிகாரம் செலுத்துபவர்களாக இருந்தாலும் கூட அவர்களும் தலைவர்களே! ஒருவகையில் ராஜ என்ற பெயருக்குள் அடங்கியவர்களே என்பதை உணரவேண்டும்.

இப்படி உயர்ந்த நிலையில் இருப்பவர்களை, அவர்களை விட சற்று குறைவான நிலையில் இருப்பவர்கள் தங்களுக்கு சாதகமாக மாற்றி அமைத்துக்கொள்வதை ராஜவசியம் எனலாம். அத்தோடு அதிகாரம் செலுத்துபவர்கள், அந்த அதிகாரம் தங்களிடத்தில் நிரந்தரமாக தங்கவேண்டும் என்பதற்கு அதிகாரத்தை வசியப்படுத்தி வைத்து கொள்வதையும் ராஜவசியம் எனலாம். மிக சுருக்கமாக சொல்லப்போனால் ராஜவசியம் என்பது ஆண்டான்- அடிமை இருவருக்குமே சம அளவில் பயன்தரக்கூடியது.

ங்களைவிட உயர்ந்த இடத்தில் இருப்பவர்களை வசியப்படுத்தி கொள்வதற்கு அல்லது தங்களிடத்தில் நிரந்தரமாக அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு ராஜவசியம் உதவுகிறது என்று புரிந்து கொள்கிறோம். இதில் அடிப்படையான சந்தேகம் என்னவென்றால், இந்த வசியம் என்பது வசிய மூலிகைகளால் செய்யப்படுவதா? அல்லது மந்திரங்களால் செய்யப்படுவதா?

குருஜி:- வசியங்கள் என்று வருகின்ற போது அவற்றிற்கு மூலிகைகளின் தேவைகளும் உண்டு, மந்திரங்களின் தேவைகளும் உண்டு. ஒருவகையில் மூலிகைகள் என்பது மந்திரங்களை சேமித்து வைத்துக்கொள்ளும் கருவியாக இருக்கிறது என்றால், வசியத்தில் மிக முக்கிய பணியை செய்வது மந்திரங்களே ஆகும். மந்திர சக்தியானது மனித உடம்பை பிரபஞ்ச சக்திகளின் தங்குமிடமாக மாற்ற வல்லது ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை முறை வழுவாது உருவேற்றும் போது அந்த மந்திர அதிர்வுகள் நமது உடலையும், மனதையும் கவசம் போல காத்து நிற்கிறது. அப்போது மந்திரங்களின் அதிர்வு சலனத்தால் நமது மன எண்ணங்கள் மிக வலிமையாக வெளிப்பட்டு சென்று நமது விருப்பங்கள் எதுவோ அதை மிக சுலபமாக கண்டடைய செய்துவிடுகிறது.

ந்திரங்களை கொண்டு ராஜவசியம் செய்வதாக இருந்தால் இன்றைய அரசும், அரசியல்வாதிகளும் தவறுகளே செய்யாமல் பார்த்து கொள்ளலாம் அல்லவா? இதை ஏன் உங்களை போன்றவர்கள் செய்வது கிடையாது?


குருஜி:- கராத்தே கற்றுக்கொள்ள முதலில் செல்லும் மாணவன், இந்த கலையை கற்றுக்கொண்டு உலகம் முழுவதும் நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்கலாம், எதிர்த்து போராடலாம் உலகத்தை சீர்படுத்திவிடலாம் என்று தான் நினைப்பான். வித்தையின் ஞானம் உள்ளுக்குள் பெருக பெருக நம்மையும் அறியாமல் நிதானம் வந்துவிடுகிறது. சில நிகழ்வுகளுக்கான மூலங்களும் அதை சரிசெய்ய போனால் அடுத்தகட்டம் ஏற்படுகிற சில சங்கடங்களும் பளிச்சென்று தெரிய ஆரம்பிக்கும். இதனால் ஆரம்பத்தில் இருந்த ஆரவாரம் படிப்படியாக குறைந்துவிடும். இந்த கேள்வியின் பொருளும் அதுதான். ராஜவசியத்தை கற்றுக்கொண்டு இன்று இருக்கும் எல்லா அரசியல்வாதிகளையும் தர்மபுத்திரனாக மாற்றிவிடலாமே என்ற ஆசையின் வெளிப்பாடாகவே இதைநான் கருதுகிறேன்.

இறைவன் சில நியதிகளை வகுத்து அதன்படி உலகத்தை நடத்தி வருகிறான். உலகத்தில் நடைபெறுகின்ற சில காரியங்களுக்கு காரணத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. வேறு சில காரியங்களுக்கு காரணம் என்னவாக இருக்கும் என்பதை கூட நம்மால் யூகிக்க முடியவில்லை. வயலில் களை இருக்கிறது என்று என் கண்ணுக்குப்பட்ட சில புற்களை நாம் பறிக்க துவங்கினால் என்னைபோல ஒவ்வொருவரும் பறிக்க துவங்குவார்கள். இறுதி கட்டத்தில் வயலில் களையும் இருக்காது, பயிறும் இருக்காது. அவரவர் விருப்பபட்டதை அவரவர் எடுத்திருப்பார்கள். அதைபோலத்தான் அரசியல்வாதிகளையும், அரசுகளையும் நமது சொந்த விருப்பபடி மாற்றி அமைக்க நினைப்பது. நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம் மனிதர்கள் தீர்மானித்தபடி உலகம் நடப்பதாக. நிச்சயம் அப்படி அல்ல, இறைவனின் தீர்மானத்தின்படியே உலகத்தின் ஒவ்வொரு நிகழ்வும் நடக்கிறது

ராஜவசியத்தின் மூலம் செய்யக்கூடிய காரியங்கள் என்று ஒரு வட்டம் உண்டு. அந்த வட்டத்தை மீறி எவராலும் செயல்பட முடியாது. சுருக்கமாக சொல்வது என்றால் உத்தியோகத்தில் உயர்வு கிடைக்க, மேலதிகாரிகளின் இணக்கமான ஒத்துழைப்பு கிடைக்க, அலுவலகப்பணிகளில் சச்சரவுகள் இல்லாமல் பணிபுரிய, அரசு அதிகாரிகளால் கிடைக்கவேண்டிய நியாயமான சலுகைகள் தங்கு தடையில்லாமல் கிடைக்க, அரசு மற்றும் தனியார் துறையில் உள்ள அதிகார பீடம் நம்மீது கரிசனமாக நடந்து கொள்ளவும் ராஜவசியம் உதவும். அதை விட்டுவிட்டு புரட்சி செய்யப்போகிறேன் உலகத்தை மாற்றப்போகிறேன் என்பதற்கெல்லாம் இது போதாது அதற்கு வேறு விஷயங்கள் இருக்கிறது.

பொதுவாக நீங்கள் இந்த ராஜவசியத்தை என்ன காரணத்திற்காக மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறீர்கள்?

குருஜி:- இது மிகவும் நல்ல கேள்வி என்று நான் நினைக்கிறேன். அலுவலகம், நிர்வாகம் இதன் அதிகாரபீடம் என்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், குடும்பத்தில் உள்ள பெண்கள் இதை மிக அதிகமாக விரும்பி என்னிடம் கற்றுக்கொள்கிறார்கள். எதற்காக அவர்கள் ராஜ வசியத்தை விரும்புகிறார்கள் என்றால், பல கணவர்கள் மனைவியை மனுஷியாக கூட மதிப்பதில்லை. சமைத்துப்போடும், பிள்ளைகளை பெறும் இயந்திரங்கள் என்றே நினைத்து, தங்களது அதிகார பலத்தை அவர்கள் மீது செலுத்துகிறார்கள். பெண்களின் நியாமான உணர்வுகள் இதன்மூலம் நசுக்கப்படுகிறது. எனவே அவர்கள் தான் நேசிக்கின்ற, கணவன் தன்னை நேசிக்க வேண்டும் என்று விரும்பி ராஜவசியத்தை கற்கிறார்கள். மேலும் அடங்காத பிள்ளையை அன்புகாட்டி தனது கைக்குள் கொண்டுவரவும், மருமகளை மிதிக்கிற மாமியாரை சரிபடுத்தவும், மாமியாரை மதிக்காத மருமகளை நெறிபடுத்தவும் கூட ராஜவசியம் துணை செய்கிறது.

ராஜவசிய மந்திரங்களை சிரத்தையோடு கற்று நல்ல முறையில் பயன்படுத்தி வருபவர்கள், வாழ்க்கையில் மிகவும் சாதாரண நிலையில் இருந்து மிக உயர்ந்த நிலைக்கு சென்றிருக்கிறார்கள். சுடர்விளக்காக இருந்தாலும் தூண்டி விடுவதற்கு யாராவது அவசியம் என்பது போல நமக்குள் பலவகை திறமைகள் இருந்தாலும், அவற்றை அங்கீகாரம் செய்து மக்கள் மத்தியில் எடுத்துச்செல்ல மற்றவர்களின் உதவி கண்டிப்பாக நமக்கு தேவை. அந்த உதவியை தக்க நேரத்தில், தக்க மனிதரிடமிருந்து நாம் பெற்று கொள்வதற்கு ராஜவசியம் கண்டிப்பாக துணைசெய்யும்.

Contact Form

Name

Email *

Message *