Store
  Store
  Store
  Store
  Store
  Store

கலப்பு திருமணம் நடக்கும் ஜாதகம்



    குருஜி அவர்களுக்கு வணக்கம். நானும் ஒரு பெண்ணும் ஐந்து வருடங்களாக காதலித்து வருகிறோம். இருவரும் படித்து முடித்து நல்ல வேலையில் அமர்ந்த பிறகே திருமணம் செய்ய தீர்மானித்திருந்தோம். இப்போது நாங்கள் திருமணத்திற்கு தயாராகி, பெற்றோர்களிடம் தெரிவிக்கும் போது இரண்டு வீட்டாரும் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். காரணம் நாங்கள் இருவரும் வேறு வேறு ஜாதி. குடும்பத்தாரின் ஒப்புதலோடு தான் திருமணம் செய்ய நாங்கள் விரும்புகிறோம். எங்கள் திருமணம் நல்லபடியாக நடக்க என்ன செய்ய வேண்டும்? தயவுசெய்து வழிகாட்டுங்கள்.

இப்படிக்கு,
ரமேஷ்குமார்,
பெங்களூர்.




   ந்து வருடங்களாக நிதானத்தோடு காதலித்துவரும் நீங்கள், வேலை அமைந்தபிறகு திருமணம் செய்யலாம் என்று திட்டமிட்ட நீங்கள், ஐந்து வருடத்திற்கு முன்பே உங்கள் காதல் விவகாரத்தை பெற்றோர்களிடம் கலந்து பேசி இருக்கலாம் அல்லவா? ஜாதி வேறு வேறு இதற்கு கண்டிப்பாக பெரியவர்கள் சம்மதம் தர யோசிப்பார்கள் என்ற விஷயம் உங்கள் கவனத்தில்படாமல் போனதற்கு பணம் தான் அனைத்தும் அது வந்துவிட்டால் பெற்றவர்கள் எதற்கும் சம்மதிப்பார்கள் என்ற அசட்டு துணிச்சல் காரணமா?

அன்றே சொல்லி இருந்தால் இன்று வரையில் அவர்களுக்கும் ஆலோசனை செய்ய கால அவகாசம் கிடைத்திருக்கும். காலம் என்பது மிகச்சிறந்த ஆசிரியர். உருகாத மனதையும் உருகவைக்கும், பெருகாத வெள்ளத்தையும் பெருகவைக்கும். காலம் உங்கள் பெற்றவர்களின் மனதை மட்டுமா மாற்றாமல் போய்விடும். உங்கள் அசட்டுத்தனம் மற்றவர்களின் மனதை வேதனை அடையச்செய்யும் என்பதை மறந்து விட்டீர்கள்.

போனால் போகட்டும் இனியாவது நடக்கப்போவதை யோசித்து செய்யுங்கள். உங்கள் ஜாதகத்தில் ஏழாவது வீட்டில் சனி அமர்ந்து இருப்பதாலும், அது நீசம் அடைந்து இருப்பதாலும் கண்டிப்பாக உங்களுக்கு ஜாதி விட்டு ஜாதி தான் திருமணம் நடக்குமென்று உறுதியாக கூறலாம். அதுவும் ஏழாம் இடத்தில் தோஷம் இருப்பதனால் பெற்றவர்கள் எதிர்ப்பை சம்பாதித்தே திருமணம் நடக்குமென்று கூற முடிகிறது. எனவே கண்டிப்பாக அவர்களிடம் இந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதம் செய்யுங்கள். போனால் போகட்டும் என்ற மனோபாவத்தில் அட்சதை போட்டு ஆசிர்வதிப்பார்கள்


Contact Form

Name

Email *

Message *