குருஜி அவர்களுக்கு வணக்கம். மிக சிக்கலான விஷயம் ஒன்றிற்கு உங்களிடம் தீர்வு காண விரும்பி இந்த கடிதம் எழுதுகிறேன். எனது நண்பருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அவர் ஜாதகத்தை முன்பு யாரிடம் கொடுத்து பார்த்தாலும் உனக்கு ஆண்வாரிசு இல்லை. அதையும் மீறி இருந்தால் இளம் வயதில் குழந்தையை பறிகொடுத்து புத்திர சோகத்தால் அவதிப்படுவாய் என்று கூறி இருக்கிறார்கள். இப்போது இவருக்கு பிறந்திருக்கும் ஆண்குழந்தையை பார்த்து மிகவும் அஞ்சுகிறார். தன்னால் தன் குழந்தைக்கு பாதிப்பு வந்துவிடுமோ? என்று மனதுக்குள்ளயே அழுது துடிக்கிறார். அவரது ஜாதகத்தையையும், குழந்தையின் ஜாதகத்தையும் அனுப்பி இருக்கிறேன். நன்றாக ஆராய்ந்து சரியான தீர்வை கூறி என் நண்பரை காப்பாற்ற வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
பெயர் வெளியிட விரும்பாத,
உஜிலாதேவி வாசகர்.
ஜோதிடத்தில் உள்ள சில பலன்களுக்கு நீக்கு போக்கான பரிகாரங்கள் உண்டு. அவைகளை செய்து, வரும் துயரங்களிலிருந்து தற்காத்து கொள்ளலாம். வேறு சில பலன்கள் இருக்கிறது. அவற்றிற்கு எந்த பரிகாரமும் கிடையாது. வருவதை அனுபவித்து தான் ஆகவேண்டும். உங்கள் நண்பரின் ஜாதகமும், ஏறக்குறைய இந்த ஜாதியை சேர்ந்தது என்றே நினைக்கிறேன்.
விருச்சிக லக்கினம் அல்லது ராசிக்கு ஐந்தாம் இடத்தில் குரு அமர்ந்து நீசம் பெறுவது நல்லதல்ல. அப்படி அமைந்து விட்டால் ஆண் வாரிசு இல்லாமல் செய்துவிடும் அல்லது இருக்கும் வாரிசை எப்படியாவது பிரித்து விடும். இது பொதுவான விதியல்ல. நடந்தே தீருகின்ற அடிப்படையான விதி. உங்கள் அன்பரின் ஜாதகப்படி இதே விதத்தில் கிரஹம் அமைந்திருப்பதனால் அவருக்கு ஆண்வாரிசு இல்லை, இருக்க முடியாது என்று துணிந்து கூறலாம்.
அதே நேரம் இந்த குழந்தையின் ஜாதகத்தை பார்க்கும் போது தீர்க்க ஆயுள் கொண்ட குழந்தையாக தெரிகிறது. நான் கூறுவது சற்று குழப்பமாக இருக்கும். தகப்பனுக்கு ஆண்குழந்தை இல்லை, இருந்தாலும் உடனடியாக இறந்துவிடும் என்கிறார், அதே நேரம் குழந்தைக்கு ஆயுளும் கெட்டி என்கிறார் இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் யோசிக்கலாம். சிக்கலான விஷயம் தான் ஆனால் உங்கள் நண்பரின் ஜாதகத்தை வேறொரு கோணத்தில் ஆராய்ந்து பார்த்தால் சிக்கல் தீர்ந்து விடும்.
அதாவது ஒருவரது ஜாதகத்தில் ஐந்தாம் அதிபதி, பத்தாம் அதிபதி ஏழு, எட்டு அதிபதிகளும் கெட்டு, கூடவே குருவும் நீசம் அடைந்திருந்தால், இவரது மனைவிக்கு உருவான குழந்தை வேறொரு தகப்பனை கொண்டவனாக இருப்பான் என்பதும் விதி. எனவே நான் கூறும் இந்த இரகசியத்தை மனதில் வைத்து அவருக்கு ஆறுதல் சொல்லுங்கள் நல்லது நடக்கும்.