குருஜி அவர்களுக்கு வணக்கம். எனது வலது கை, ஆள்காட்டி விரலுக்கு கீழே கருப்பு நிறத்தில் புள்ளி விழுந்திருக்கிறது. இப்படி விழுவது அசுப பலனை தருமென்று கூறுகிறார்கள். அதற்கு நான் என்ன செய்வது?
இப்படிக்கு,
கல்பனா ,
வந்தவாசி .
ஆள்காட்டி விரலுக்கு கீழ் உள்ள பகுதியை குருமேடு என்று சொல்வார்கள். கைரேகை சாஸ்திரப்படி இதில் கரும்புள்ளி விழுவது நற்பெயரை களங்கப்படுத்தும் நிகழ்வுகளை நடத்தும் என்று சொல்ல பட்டிருக்கிறது இருந்தாலும் அந்த புள்ளி இயற்கையாக விழுந்ததா? அல்லது செயற்கையாக ஏற்பட்டதா? அதுவும் இல்லையென்றால் ஏதாவது சரும நோயால் வந்ததா என்பதையும் ஆராய வேண்டும்.