மரியாதை நிறைந்த குருஜி அவர்களின் பாதங்களுக்கு பணிவான வணக்கம். உலகியல் வாழ்வில் நான் இருந்தாலும், ஆன்மீக வழியில் சென்று என் ஆன்மாவை இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய விரும்புகிறேன். அதற்கு என்னை தயார் படுத்த தகுந்த குரு ஒருவரிடம் மந்திர தீட்சை பெற்று, பயணத்தை துவங்கலாம் என்று நினைக்கிறேன். இந்த பிறவியில் தீட்சை பெறுவதற்கான தகுதி எனக்கு இருக்கிறதா? என்னால் அதை பெற முடியுமா? என்று அருள் கூர்ந்து விளக்கம் தருமாறு வேண்டி கேட்கிறேன். தவறுகள் இருந்தால் பொறுத்தருள வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
ஹேமானந்த்,
மலேசியா.
ஹேமானந்த்,
மலேசியா.
இன்றைய காலத்தில் நல்ல சீடர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். குருமார்களின் எண்ணிக்கை தான் மிக குறைவாக இருக்கிறது. அதுவும் ஒருவரை குருவாக ஏற்றுக்கொள்ளவே மிகவும் யோசிக்க வேண்டிய நிலையில் சராசரி மனிதன் இருக்கிறான். காரணம் குரு என்ற வார்த்தையின் மதிப்பும், மரியாதையும் தன்னை குரு என்று அழைத்து கொள்பவர்களுக்கே தெரியாது. இது ஒருபுறம் இருக்கட்டும்
ஒரு மனிதன் நல்ல குருவை அடைவானா? அவர் மூலம் தீட்சை பெறுவானா? தனது ஆன்மீக லட்சியத்தை அடைவானா என்பதை ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தை வைத்து முடிவு செய்து விடலாம். காரணம் ஒருவனுக்கு ஆன்மீக எண்ணம் என்பது திடீரென்று வருவது இல்லை. ஜென்மங்கள் தோறும் தொடர்ந்து வந்தால் தான் இந்த ஜென்மத்திலும் அது வரும். ஐந்தாம் இடம் என்பதும் பூர்வ புண்ணியஸ்தானம் சென்ற பிறவியை கணக்கு போடும் இடம் என்பதால் இதை கூறுகிறேன்.
இந்த ஜாதகருக்கு ஐந்தாம் இடத்தில், ஒன்பது பத்து பதினொன்று ஆகிய இடங்களின் அதிபதிகள் பலம் பெற்று இருப்பதனால் இது கண்டிப்பாக நல்ல குருவை தரிசனம் பெறுவார் அவர் இவருக்கு தீட்சையும் தருவார் என்று கூறலாம். ஆனால் வேறு சில கிரஹங்களை கவனத்தில் கொள்ளும் போது அத்தகைய ஆன்மீக பயிற்சியில் இவர் இந்த ஜென்மாவில் முழுமை பெறுவாரா? என்ற சந்தேகம் இருக்கிறது.