ஐயா, எனது வீட்டின் முன்பாக உள்ள மின்சாரக்கம்பிகளில் தினமும் இரவு நேரத்தில் இரண்டு காக்கைகள் (வீட்டின் நுழை வாயிலுக்கு நேர் மேலே) அமர்ந்துள்ளன. இது குடும்பத்திற்கு நல்லதா? விளக்கம் தரவும்.
இப்படிக்கு,
துளசி உமாசங்கர்,
ஊர் பெயர் தரவில்லை.
காகம் என்பதை சனீஸ்வர பகவான் வாகனம் என்று நினைத்து பலர் பயப்படுகிறார்கள். காகம் வீட்டிற்குள் வந்தால், வீட்டு மாடியில் கூடு கட்டினால், சனி தன்னை பிடித்துக்கொள்வாரோ? சனியால் தொல்லைகள் வருமோ என்று பலரும் அச்சப்படுகிறார்கள். இது வீணான பயம். காகம் சனியின் வாகனம் மட்டுமல்ல, நமது முன்னோர்களின் சின்னமும் கூட. காகபுஜண்டர் என்ற ரிஷியும் காகத்தின் வடிவில் இருக்கிறார்.
உங்கள் வீட்டிற்கு மேலே செல்லும் மின்சாரக்கம்பியில் தான் அவைகள் இருக்கிறதே தவிர, உங்கள் வீட்டு சுவற்றில் அது இல்லை. அப்படியே சுவற்றில் இருந்தாலும் நீங்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. காகம் தலையில் அடித்தால், உடலில் எச்சம் போனால் நல்லது என்றும் கூறுவார்கள். அதே நேரம் வீட்டுக்கு முன்னால் காகங்கள் அமருவது நல்ல சகுனத்தின் அறிகுறி என்று சகுன சாஸ்திரம் கூறுகிறது. முடிந்தால் அந்த காகங்களுக்கு உணவளியுங்கள். உங்கள் குடும்பத்திற்கு ஆசிர்வாதமும், சாப நிவர்த்தியும் ஏற்படும்.