குருஜி அவர்களுக்கு வணக்கம். என் தாயாருக்கு சேர வேண்டிய சொத்தை என் தாய்மாமன் தர மறுக்கிறார். என் ஜாதகபடியும் என் தாயாரின் ஜாதகப்படியும் சொத்து கிடைக்குமா?
இப்படிக்கு,
கமலேஷ் முருகன்,
தூத்துக்குடி.
கமலேஷ் முருகன்,
தூத்துக்குடி.
மாமனுடைய நிலைமையை, புதன் கிரஹத்தின் தன்மையை வைத்தும், ஐந்தாம் இடத்தின் நிலையை வைத்தும் அறிந்து கொள்ளலாம். புதன் நீசம் அடைந்து, ஐந்தாம் இடத்தில் இருந்தால் மிக கண்டிப்பாக மாமனிடமிருந்து சல்லிக்காசு உதவி கூட பெறமுடியாது. மாறாக பகையும், வஞ்சனையும் நிறைந்திருக்கும். இந்த ஜாதகரின் அம்சமும் அப்படியே இருக்கிறது. தாயாரின் ஜாதகமும், பூர்விக சொத்து கிடைக்காது என்று சொல்கிறது. எல்லாம் சரி உங்கள் தாயாருக்கு தான் அவரது தந்தை நல்ல சீதனத்தோடு திருமணம் செய்து வைத்திருக்கிறார். பின் எதற்காக பங்கு கேட்டு சண்டைபோட வேண்டும். சட்டம் - உரிமை இருக்கிறது என்கிறது, தர்மம் அப்படி சொல்லவில்லையே தர்மம் தான் தலையை காக்கும். மறந்து விடாதீர்கள்.