குருஜி அவர்களுக்கு வணக்கம் என் கணவர் அடிக்கடி வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய படுகிறார் அல்லது ராஜினாமா செய்யவேண்டிய நிலைக்கு தள்ளபடுகிறார் எந்த வேலையும் அவருக்கு சரிவர அமையவில்லை அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? தயவு செய்து வழிகாட்டுங்கள்
இப்படிக்கு
தமயந்தி
குடியாத்தம்
செவ்வாயும் சூரியனும் பிறந்த ஜாதகத்தில் சேர்ந்திருந்தாலோ அல்லது கோச்சார காலத்தில் தற்காலிக இணைப்பு ஏற்பட்டாலோ வேலை இழப்பு தொழில் முடக்கம் போன்றவைகள் ஏற்படும் உங்கள் கணவருக்கு பிறந்த ஜாதகத்திலேயே கோளாறு இருக்கிறது அதனால் தான் வேலை அடிக்கடி பறிபோகிறது
கிரக இணைப்பை ஒருபக்கம் குறைசொன்னாலும் இன்னொருபக்கம் உங்கள் கணவருக்கு வேலை செய்வதில் ஆர்வம் இல்லை நண்பர்களோடு அரட்டை அடிப்பதிலும் வீண் பொழுது போக்கில் காலம் கழிப்பதிலும் ஆர்வம் அதிகம் என்பதை என்னால் அறிந்துகொள்ள முடிகிறது.
நமக்கு சம்பளம் கொடுத்து வேலையில் வைக்கும் முதலாளி தகுந்த உழைப்பை எதிர்பார்ப்பான் அதை நாம் கொடுக்காத போது தொடர்ந்து நம்மை பணியில் வைத்து கொள்ள அவன் என்ன நம் பங்காளியா?
முதலில் உங்கள் கணவரின் மனநிலையை மாற்ற முயற்சி செய்யுங்கள் அதன்பிறகு ஒன்பது பெளர்ணமி தினத்தில் வீட்டில் விரதம் இருந்து சத்திய நாராயணா பூஜை செய்யுங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.