Store
  Store
  Store
  Store
  Store
  Store

பரிகாரம் செய்ய மதம் தடையா...?




    குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம். சிறிய வயதில் எனது தந்தையாரின் குடும்பம் கிறிஸ்தவ மதத்தை தழுவி விட்டதனால் நாங்கள் கிறிஸ்தவர்களாக வாழ்ந்து வருகிறோம். எனக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் முடிந்துவிட்டது. இதுவரை என் மனைவி ஐந்துமுறை கருத்தரித்து, மூன்றாவது மாதத்திலேயே கலைந்து விடுகிறது. அவளது கர்ப்பபை மிகவும் நன்றாகவே இருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனாலும், குழந்தை ஏனோ தங்க மறுக்கிறது. மருத்துவம் பார்த்துவிட்டோம் பல ஜெப கூட்டங்களில் கலந்து கொண்டு முழு இரவு ஜெபத்திலும் தொடர்ந்து ஜெபம் செய்துவிட்டோம். ஆனாலும், குழந்தை இல்லை. எங்களது பாஸ்டர்கள் உங்களுக்கு விசுவாசம் குறைவாக இருக்கிறது. அதனால் தான் ஜபத்தை ஆண்டவர் கேட்க மறுக்கிறார் என்கிறார்கள். கண்ணீர்விட்டு அழுகிறோம், கதறி துடிக்கிறோம் மற்றும் மனமுருகி மன்றாடி வேண்டுகிறோம். சில நேரங்களில் என் மனைவி தலையை முட்டிக்கொண்டே ஜெபம் செய்கிறாள். இதை விட எங்கள் விசுவாசத்தை எப்படி காட்டுவது என்று எங்களுக்கு தெரியவில்லை.

வயதும் கடந்து கொண்டே வருகிறது. இனிமேலும் குழந்தை இருக்குமா? இருக்காதா? என்று தெரியவில்லை எங்களிடம் பிறந்த குறிப்புகளை தவிர ஜாதகம் எதுவும் கிடையாது. அதை எழுதி வைக்கும் பழக்கமும் எங்களுக்கு இல்லை. எங்கள் குறிப்புகளை உங்களுக்கு அனுப்புகிறோம். அதை பார்த்து எங்களுக்கு குழந்தை பிறக்குமா, அல்லது எதாவது குழந்தையை தத்தெடுத்து கொள்ளலாமா? என்று தெளிவாக கூறுங்கள். உங்கள் பதில் எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறோம்.


இப்படிக்கு,
கிறிஸ்டோபர் ராஜ்,
நாசரேத், திருநெல்வேலி.


   ழுதால் தான் இறங்கி வருவேன், தலையை முட்டினால் தான் கருணை செய்வேன் என்று எந்த கடவுளும் கூறவில்லை. மனதை ஒருநிலைப்படுத்தி நீங்கள் வைக்கும் எந்த வேண்டுதலையும் இறைவன் கேட்கிறார். காலம் வரும் போது அதற்கான பதிலை நிச்சயம் தருவார். நமக்கு தேவை அவரிடமிருந்து பதிலை பெறும் வரை பொறுமை.

உங்கள் பிறந்த குறிப்பை ஜாதகமாக கணித்துப்பார்த்ததில் பூர்வ புண்ணியஸ்தானமான ஐந்தாம் இடம் உங்களுக்கு தகப்பனார் வழியில் தெய்வ தோஷம் இருப்பது தெரிகிறது. உங்கள் தகப்பனார் மதம் மாறுவதற்கு முன்பு குடும்ப தெய்வமாக வழிபட்டு கொண்டிருந்த, கையில் குழந்தையோடு இருக்கும் ஒரு பெண் தெய்வம் மனக்குறையோடு இருப்பது தெரிகிறது.

மேலும் உங்கள் மனைவியின் ஜாதகத்தில் குருவோடு, சனி இணைந்திருப்பதனால் அவர்களுக்கு கருவை சுமக்கும் தோஷமும் இருக்கிறது. தெய்வ குறைபாடும், கிரக குறைபாடும் ஒரு சேர இருப்பதனால் நீங்கள் குழந்தை பாக்கியம் அடைவதில் பல தடைகள் இருக்கிறது. அது நீங்குவதற்கு வழி செய்தால் கண்டிப்பாக என் கணக்குப்படி வரும் ஒன்றரை வருடத்தில் உங்களுக்கு ஆரோக்கியமான குழந்தை கண்டிப்பாக இருக்குமென்று உறுதி கூறுகிறேன்.

உங்கள் குலதெய்வமான அந்த பெண் தெய்வத்தை, முறைப்படி பூஜை செய்து வழிபடுங்கள். அதோடு ராமேஸ்வரம் சென்று கணவன்-மனைவி இருவரும் கடலில் நீராடி இராமலிங்க சுவாமியையும், அம்பாளையும் வழிபட்டு, பதினைந்து ஏழைப்பெண்களுக்கு வஸ்திரதானம் வழங்குங்கள். அது மட்டுமல்லாமல் அனாதை குழந்தைகளின் விடுதிகளுக்கு சென்று அவர்களோடு தங்கி இருந்து ஒருநாள் சேவை செய்யுங்கள். கண்டிப்பாக குழந்தை பிறக்கும்.

என் மத நம்பிக்கை தடுக்கிறது. உறவினர்கள், நண்பர்கள் கேலி செய்வார்கள். என்று நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல. மதமாற்றம் என்பது ஆன்மீக வழியிலும், எவ்வளவு பெரிய சிக்கலில் கொண்டு விடும் என்பதற்கு இது நல்ல உதாரணம் என்று நினைக்கிறேன். நீங்கள் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் பரிகாரம் என்று வரும் போது அதற்குரிய முறையில் செய்து தான் ஆகவேண்டும்.



Contact Form

Name

Email *

Message *