Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆண்மை குறைவை நீக்கும் தாந்த்ரீக் ஹீலிங்


    ன்று வெள்ளிக்கிழமை மாலை ஆறுமணி இருக்கும். என்னை காண்பதற்காக ஒருவர் வந்திருப்பதாக சொன்னார்கள். சனியும், ஞாயிறும் தவிர மற்ற நாட்களில் புதிய நபர்கள் யாரையும் நான் பார்ப்பதில்லை. அதிலும் குறிப்பாக மாலை நேரத்தில் யாரையுமே சந்திப்பதில்லை என்பது என் வழக்கம். இதனால் எனது உதவியாளர் இப்போது குருஜியை யாரும் காணமுடியாது என்று அந்த நபரிடம் பலமுறை சொல்லி இருந்தும் அவர் தொடர்ந்து மனமுருகி கேட்டுக்கொண்டதனால் என்னிடம் தகவலை சொன்னார்கள் நானும் சரி வரச்சொல் பார்ப்போம் என்றேன். வேறு வேலையும் இருந்ததால் சீக்கிரமே சொல்ல வந்ததை, பேச வேண்டியதை பேசச்சொல் என்று கூறி அனுமதி கொடுத்தேன்.

வந்த நபர் இளைஞர். முப்பது வயதிற்கு கீழ்தான் இருக்கும். பார்ப்பதற்கு கம்பீரமாக ஒரு சினிமா நடிகரை போல அழகாக இருந்தார். அவர் சொல்லாமலே அவருடைய நடத்தையில் ஐஸ்வர்யம் தெரிந்தது. உடம்பிலும், ஆடையிலும் தெரிந்த செழுமை அவரது கண்களில் இல்லாது இருப்பதை என்னால் ஒரு நொடியில் உணர்ந்து கொள்ள முடிந்தது. கண்களுக்கு கீழே விழுந்திருந்த கருவளையமும், அடிக்கடி அவர் நிமிர்ந்து பார்க்க முடியாமல் தரையை பார்த்த நிலையும் மனிதர் சுமக்க முடியாத சுமையை சுமந்து கொண்டிருக்கிறார் என்பதை சொல்லாமல் சொல்லியது. எங்கே இருந்து வருகிறீர்கள் என்று நான் கேட்டதற்கு பெங்களூரில் இருந்து வருவதாகவும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருப்பதாகவும் தன்னைப்பற்றி அறிமுகம் செய்து கொண்டார்.

சில நிமிடங்கள் அமைதியாக இருந்த அவர் சுவாமிஜி உங்களோடு மனம்விட்டு பேசவேண்டும் எனக்கு அனுமதி தாருங்கள் என்று வேண்டினார். சொல்லுங்கள் எதுவாக இருந்தாலும் தயங்காமல் பேசுங்கள். என்னால் முடிந்த வழியை காட்டுகிறேன் என்று சொன்னேன். அவர் பேச ஆரம்பித்தார் என் சொந்த ஊர் திருநெல்வேலி பக்கம். என் குடும்பமே பரம்பரை பரம்பரையாக வசதி படைத்த குடும்பம். எங்கள் ஊரில் எங்களுக்கு என்று தனி மரியாதை உண்டு. என் அப்பாவிற்கு நான் கடைசி மகன். என்னை வெளிநாட்டில் படிக்க வைத்தார். நல்ல வேலையும் கிடைத்தது இன்று கைநிறைய சம்பாதிக்கவும் செய்கிறேன் சென்ற மாதம் வரையில் அமெரிக்காவில் இருந்த நான் தற்போது தான் பெங்களூருக்கு வந்திருக்கிறேன் வேலையிலும் பிரச்சனை இல்லை. வசதி வாய்ப்பிலும் குறைவில்லை எனக்கு ஒரே பிரச்சனை என் மனைவி.

என் மனைவி வேறு யாரும் இல்லை. என் சொந்த மாமன் மகள். நானும் அவளும் சின்ன வயதிலிருந்தே காதலித்தோம். எங்களுக்குள் எந்த விதமான கருத்து வேற்றுமைகள் என்பது கிடையாது. அவள் என் மீது உயிரையே வைத்திருந்தாள் நானும் அவள் இல்லாமல் வாழ்வை நினைத்து பார்த்ததே கிடையாது. எங்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு என்பதும் இல்லை. நாங்கள் இருவரும் சேர்ந்து தான் சில காலம் காதலர்களாக வாழ்வோம் அதன் பிறகு திருமணத்தை செய்து கொள்ளலாம் என்று தள்ளி போட்டோமே தவிர பெற்றோர்கள் யாரும் எங்களை தடுக்கவில்லை. சென்ற வருடம் திருமணம் செய்து கொண்டோம். திருமணம் நடந்த கையோடு அவளை அழைத்துக்கொண்டு அமெரிக்கா சென்று விட்டேன். அவளும் படித்தவள் என்னை விட புத்திசாலி. அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தில் பொழுது போக்கிற்காக வேலைக்கு போனாள்.

எங்கள் இல்லறம் எந்த குறையும் இல்லாமல் நன்றாகவே நடந்தது. திடீரென்று ஒருநாள் எனக்கு வலது தோள்பட்டையில் நரம்பு இழுப்பது போல இழுத்தது. வலி கைமுழுவதும் சிறிது நேரத்தில் பரவி விட்டது மருத்துவரை பார்க்கச்சென்றேன். அமெரிக்காவில் நமது ஊரைப்போல உடனே பரிசோதனை செய்து மருந்து தர மாட்டார்கள். இரண்டு நாள் மூன்று நாள் காக்க வைத்தே வைத்தியம் செய்வார்கள் என் விஷயத்திலும் அப்படித்தான் நடந்தது. என்னால் வலியை தாங்க முடியவில்லை அப்போது என் அலுவலகத்தில் வேலை பார்த்த ஒருவர் வலி நிவாரண மருந்து என்று ஒன்றை தந்தார் நானும் சாப்பிட்டேன். சிறிது நேரத்தில் வலி போய்விட்டது நிம்மதியாக இருந்தேன். ஆனால் அந்த நேரத்தில் தான் என் வாழ்வின் ஒட்டுமொத்த நிம்மதியும் பறிபோய் இருக்கிறது. அது எனக்கு தெரியவில்லை.

இரண்டு நாள் கழித்து நான் சாப்பிட்ட வலி நிவாரண மருந்து எதிர் விளைவை என் உடம்பில் ஆரம்பித்திருக்கிறது. எனக்குள் இருந்த ஆண் என்ற உணர்ச்சி குறைவது போல் உணர்ந்தேன். என் மனைவியோடு சந்தோசமாக இருக்க முடியவில்லை அன்று முதல் படிப்படியாக எங்கள் தாம்பத்திய உணர்வு நின்றே போய்விட்டது. எனக்குள் ஆண்மை எழுச்சி என்பது சிறிது கூட இல்லை. ஆரம்பத்தில் அதை பொறுத்துக்கொண்ட என் மனைவி நாளாவட்டத்தில் வெறுமையை உணர்ந்தாள். நான் இந்தியாவுக்கு போகிறேன் என்று தாய் நாடு திரும்பிவிட்டாள். வந்தவள் ஒருவாரம் வரையில் என்னோடு போனில் பேசிக்கொண்டிருந்தாள். அதன் பிறகு என்னிடம் பேசுவதை குறைக்க ஆரம்பித்து விட்டாள். சிறிது நாளில் முற்றிலும் தவிர்த்தே விட்டாள்.

நான் பைத்தியம் பிடித்தவன் போல் ஆகிவிட்டேன். வேலையை மாற்றிக்கொண்டு ஊருக்கும் வந்துவிட்டேன். வந்தவுடன் மனைவியை சென்று பார்த்தேன். இல்லற வாழ்க்கை என்பதே தாம்பத்திய இணக்கத்தில் இருக்கிறது. அது இல்லாத போது நான் எப்படி உன்னோடு வாழ முடியும். எனவே நாம் பிரிந்து விடுவது தான் நல்லது என்கிறாள். என்னால் அவளை பிரிவது பற்றி யோசிக்கவே முடியாது. ஆனாலும் அவளுடைய கோரிக்கையிலும் நியாயம் இருக்கிறது தானே? என்னால் எதையும் பேசமுடியவில்லை அமைதியாக வந்து விட்டேன். இந்த விஷயம் என் பெற்றோர்களுக்கு தெரிந்தால் உயிரையே விட்டு விடுவார்கள். மற்றவர்களுக்கு தெரிந்தால் என்னை கேலி செய்து கொன்றுவிடுவார்கள். வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் தவிக்கிறேன் என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

இவரின் கதையை கேட்டவுடன் பாவமாக இருந்தது. ஆனாலும் இந்த பையனின் காதல் எந்த வகையை சேர்ந்தது என்பது எனக்கு புரியவில்லை. மாமன் மகளும் அத்தை மகன் என்கிறார். சிறிய வயதிலேயே காதல் வசப்பட்டு விட்டோம் என்றும் கூறுகிறார். இல்லற வானில் சிறகடித்து பறந்த கதையும் இருக்கிறது. இப்படிப்பட்ட இந்த காவிய உறவு, ஆண்மைக்குறைவு என்ற குறைபாடு வந்தவுடன் சீட்டுக்கட்டு மாளிகை சரிந்து விழுந்தது போல் விழுந்தது எப்படி? இவர்களது காதல் பலகீனமானதா? அல்லது இவர்கள் உறவு காமம் மட்டுமே கொண்டதா? என்று நான் யோசித்தேன். கடைசியில் இவை இரண்டுமே இல்லை. இன்றைய சமூகச்சூழல் தான் இத்தகைய கொடிய முடிவுகளை இளைஞர்களை எடுக்க வைக்கிறது என்பது தெளிவாக தெரிந்தது.


இன்றைய விவாகரத்து வழக்கு பல வரதட்சணை கொடுமை, கணவனின் இம்சை, மனைவியின் பாராமுகம், கள்ள உறவு போன்ற காரணங்களுக்காக நீதிமன்றத்திற்கு வருவதாக சொல்லப்படுகிறது. நான் அறிந்த வகையில் சம்மந்தப்பட்ட நபர்களின் வாழ்க்கையை நேருக்கு நேராக பகுத்து ஆராய்ந்து தெரிந்த வகையில் மேற்கூறிய காரணங்கள் என்பவைகள் ஒரு சில இடத்தில் நடப்பது உண்மை தான் என்றாலும் ஆனால் அவற்றிற்குள் தாம்பத்திய குறைபாடு என்பது மட்டும் தான் பரவலாகவும் பாரமாகவும் இருக்கிறது என்று கூறமுடியும். மனைவியை திருப்திபடுத்தாத கணவன், கணவனோடு முழுமையாக இணங்காத மனைவி இப்படி இருக்கிற குடும்பங்கள் பிரிவதற்கு முனைப்பு காட்டி வருகின்றன. இதை கவனத்தில் கொள்ளாவிட்டால் நிச்சயம் வருங்காலத்தில் இந்தியா முழுமைக்கும் தற்கொலை தடுப்பு மையங்கள் மிக அதிகமாக ஏற்படுத்த வேண்டிய துர்பாக்கிய சூழ்நிலை வரும்.

மேலும் ஆண்மைக்குறைவு என்பதை உடல் சார்ந்த நிகழ்வாக மட்டுமே பார்க்கப்படுகிறது. உண்மையில் அது முழுவதும் உடல் சார்ந்த பாதிப்பு அல்ல, முக்கால் பங்கு மன பாதிப்புகளாலே ஏற்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நமது உடம்பிற்குள் ஏற்படுகிற சில இரசாயன மாற்றங்கள் விசித்திரமான விளைவுகளை ஏற்படுத்தும். மருத்துவ விஞ்ஞானம் ரசாயன மாற்றம் தான் எண்ணங்களின் வளர்ச்சி என்று கூறுகிறது. இது ஒருவிதத்தில் சரியே தவிர முழுமையான சரி அல்ல. ஆனால் இங்கே இந்த இளைஞருக்கு ஏற்பட்டிருப்பது விசித்திரமான இரசாயன மாற்றத்தால் வந்த ஆண்மை குறைவே ஆகும். மனதின் அழுத்தங்கள் நரம்பு மண்டலத்தை பாதித்து, அவற்றின் துடிப்பைக்கெடுத்து விடுவதனால், மனிதனுக்கு ஏற்படுகிற இயற்கையான பாலுணர்ச்சி குறைந்து விடுகிறது, சிலருக்கு முற்றிலும் அழிந்து விடுகிறது.

இவற்றில் இருந்து மனிதனை காப்பது மிக கடினமான பணியே ஆகும். ஆனால் நமது முன்னோர்கள் சரியான வழியை நமக்கு காட்டி தந்திருக்கிறார்கள். வேதங்களில் மக்கள் வேதம் என்று அழைக்கப்படுகிற அதர்வண வேதத்தில் மனிதனின் நரம்பு மண்டலத்தை தூண்டி விட்டு செயல்படுத்த கூடிய மந்திரங்கள் இருக்கிறது. இவற்றை முறைப்படியான அதிர்வுகளாக்கி பாதிக்கப்பட்ட நபரிடத்தில் தொடர்ந்து ஹீலிங் முறையில் செலுத்தினோம் என்றால் நல்ல முன்னேற்றம் உடனடியாகவே ஏற்படும் இதன் பெயர்தான் தாந்த்ரீக் ஹீலிங் என்பதாகும். இந்த முறையை பயிற்சி பெற்றவர் பாதிக்கப்பட்டவர்களுக்காக சரியான கால இடைவெளி விட்டு செய்யும் போது மருந்துகள் செய்யாத அதிசயத்தை இது செய்வதை நேரடியாக பார்க்கலாம்.

அந்த இளைஞருக்கும், இந்த தாந்ரீக் ஹீலிங் என்பதை தொடர்ச்சியாக சில வாரங்கள் செய்து ஆயுர்வேதிக் மருந்துகள் சிலவற்றை கொடுத்தேன். ஒன்றரை மாதத்திலேயே நல்ல மாற்றம் இருப்பதை அவர் நேரிலேயே கண்டு கொண்டார். இனி நிச்சயமாக அவர் தன் மனைவியோடு கம்பீரமாக வாழ முயற்சி செய்வார் என்று நம்பலாம். இந்த விஷயத்தை இங்கு எதற்காக இவ்வளவு விரிவாக கூறுகிறேன். சிலர் கேட்கலாம் காரணம் இல்லாமல் நான் கூறவில்லை. இந்த மாதிரியும் குறைபாடுடைய பலர் என்னோடு தொலைபேசியில் பேச வருகிறார்கள் ஆனால் முழுமையாக பேசாமல் கூச்சப்பட்டு தயங்குகிறார்கள் இதற்கு வழி இருக்குமா? இதிலிருந்து மீள முடியுமா? என்று கலங்குகிறார்கள் நிறைய பேர் தனது வாழ்க்கை இத்தோடு முடிந்து விட்டதாக முடிவே செய்து விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் வருந்த வேண்டாம். தீராத பிரச்சனை என்று எதுவும் இல்லை. நமது முன்னோர்கள் பல மார்க்கங்களை காட்டி இருக்கிறார்கள் என்பதை கூறவே எழுதுகிறேன்.


இதுவரையில் தாந்த்ரீக் ஹீலிங் மூலம்

    இதயநோய்கள், இரத்தக்கொதிப்பு, நரம்புத்தளர்ச்சி, நீரிழிவு, மனநோய், மூளைக்கோளாறு, தூக்கமின்மை, இடுப்பு, கை-கால் மூட்டுவலிகள், தீராததலைவலி, ஒவ்வாமை, ஆஸ்துமா, காக்கை வலிப்பு, பித்த மயக்கம் மற்றும் பல இரகசிய கொடிய வியாதிகள் குணப்படுத்தப்பட்டுள்ளன.

Contact Form

Name

Email *

Message *