அன்புள்ள குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் என் மகள் ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் கொடுத்து பார்த்தேன் அவர் அவளுக்கு மாங்கல்ய தோஷம் இருக்கிறது அதனால் திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது என்று கூறுகிறார். ஒரு தாயின் நிலைமையில் இருந்து இதை யோசித்து பாருங்கள் எப்படி என்னால் தாங்கி கொள்ள முடியும்? என் மகள் ஜாதகத்தை உங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன் தயவு செய்து கணித்து பார்த்து அவர் கூறியது சரிதானா? திருமணம் செய்ய கூடாதா? செய்வதாக இருந்தால் ஏதாவது பரிகாரம் இருக்கிறதா? என்பதை எனக்கு தெளிவாக கூறி வழிகாட்டுமாறு உங்கள் பாதம் தொட்டு வேண்டி கேட்டுகொள்கிறேன்
இப்படிக்கு
பத்மாநாராயணன்
அமெரிக்கா
ஒரு ஜாதகத்தில் செவ்வாயும் சனியும் இணைந்து ஏழாவது வீட்டில் இருந்தால் அந்த பெண்ணோ பையனோ மிக இளம் வயதில் வாழ்க்கை துணையை இழப்பார்கள் என்று சில ஜோதிட நூல்கள் கூறுவதை ஆதாரமாக வைத்து பலர் பலன் கூறுகிறார்கள் நான் அந்த முறையை தவறு என்று வாதாட வரவில்லை ஒருவேளை அந்த இரண்டு கிரகங்களுக்கும் ஏழாவது வீடு பலம் கொடுக்கும் இடம் என்றாலும் பாதகம் செய்ய முடியாத இடம் என்றாலும் கெடுதியான பலனை எப்படி கொடுக்க முடியும் என்று கேட்கிறேன்?
உங்கள் மகள் ஜாதகத்தில் மேற்கூறிய வண்ணம் கிரகம் அமைந்துள்ளது ஆயிரம் சமாதானம் உங்களுக்கு கூறினாலும் சனி செவ்வாய் இரண்டுமே பாவ கிரகங்கள் அவைகள் ஏழாம் இடம் என்ற திருமண ஸ்தானத்தில் இருப்பது பெரிய குற்றமாகும். இதன் விளைவாக மண வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது
அதனால் இந்த பெண்ணிற்கு காலம் கடந்த பிறகு அதாவது முப்பது வயதை தாண்டிய பிறகு திருமணம் செய்து வைப்பது தான் நல்லது என்று நினைக்கிறேன். அதற்கு முன் வைத்தால் தற்காலிகாமாக கூட கணவன் மனைவி பிரிவு ஏற்படலாம். எனவே இதில் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்.
எது எப்படி இருந்தாலும் எல்லா கிரகங்களின் ஆற்றலை விட இறைவனின் ஆற்றல் மேலானது இந்த மாதிரி கிரகத்தால் தோஷம் இருப்பவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல் இசக்கி அம்மனை வழிபட்டு அம்மனுக்கு பட்டாடை சாற்றி நேர்த்தி செய்தால் கண்டிப்பாக தோஷம் விலகி சந்தோசம் மலரும்.