குருஜி சார் எனக்கு பதினெட்டு வயது முடிந்து விட்டது. வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்று நினைக்கிறேன். நானும் கஷ்டப்படக்கூடாது என்னால் மற்றவர்களும் கஷ்டப்படக்கூடாது. இந்த வகையில் ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்.
இப்படிக்கு,
கமலேஷ்,
ஈரோடு.
உன் வயதிற்கு புரிய வேண்டும் என்பதற்காக தத்துவங்கள், உபதேசங்கள் எதுவும் பேசாமல் அவைகளை பற்றி சிறிது கூட சிந்திக்காமல் யதார்த்தமான ஒரு கருத்தை சொல்கிறேன் கேட்டுக்கொள். முன்னேறுவதற்கு இரண்டே இரண்டு வழிகள் தான். உன் தாத்தா காலம் முதல் இன்று வரையிலும் இருக்கிறது. ஒன்று நாமாக கஷ்டப்பட்டு முன்னேற வேண்டும் அல்லது மற்றவர்களை கஷ்டப்படுத்தி முன்னேற வேண்டும். இதில் எதுவும் இல்லாமல் முன்னேறுகிறேன் என்றால் அது குதிரை கொம்பை பிடிப்பதற்கு சமமாகும்.