Store
  Store
  Store
  Store
  Store
  Store

வாஸ்து தோஷம் வலியை தரும்




   குருஜி சுவாமி அவர்களுக்கு பட்டுக்கோட்டையிலிருந்து சொர்ணம்மாள் எழுதுவது. உங்களைப்பற்றி எனது பேரன் இன்டர்நெட்டில் படித்துவிட்டு சொன்னான் அதை கேட்ட முதல் எனக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. பத்துவருடமாக நான் அனுபவித்து வரும் கஷ்டத்திற்கு உங்கள் மூலமாக தீர்வு கிடைக்குமென்று உறுதியாக நம்பி இந்த கடிதம் எழுதுகிறேன். ஐயா நான் பத்து வருடமாக தீராத வயிற்று வலியில் தவிக்கிறேன். என் மருமகள் என்னை சென்னை வரையிலும் உள்ள டாக்டரிடம் அழைத்து போய் பரிசோதனை செய்துவிட்டாள். எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்கிறார்கள். ஒருவேளை மனவியாதியால் இப்படி இல்லாத வலி இருப்பதாக கூறுகிறேனோ என்று பைத்தியக்கார டாக்டரிடமும் காண்பித்து விட்டாள். அவரும் நான் நன்றாக இருப்பதாக சொல்லிவிட்டார். கோவில், குளம் என்று போகாத இடமில்லை. மந்திரவாதி, சாமியார், ஜோதிடர் என்று எல்லோரையும் பார்த்தாகிவிட்டது என் வலிதான் இன்னும் தீரவில்லை. மாலையில் வருகிற வலி இரவு வரையிலும் என்னை உருட்டி எடுத்து விடுகிறது என்ன செய்வது என்றே தெரியவில்லை. என் மகன் காலமாகிவிட்டான். மருமகள்தான் என்னை கவனிக்கிறாள் அவளுக்கு என்னால் ஏற்படும் தொல்லை சொல்ல முடியாது. இந்த நோய் தீருமா? அல்லது உடனடியாக சாவேனா என்பதை தயவு செய்து ஐயா சொல்லுங்கள். உங்கள் பதிலுக்காக காத்திருப்பேன். 


இப்படிக்கு, 
சொர்ணம்மாள், 
பட்டுக்கோட்டை



  ன்றாக நடமாடுகிற மாமியாரையே தூக்கி மூலையில் சாற்றிவிடும் மருமகள்கள் அதிகம் இருக்கும் நாட்டில் மாமியாரை தாயன்போடு பராமரிக்கும் மருமகளை பெற்ற நீங்கள் பாக்கியசாலி. அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நீங்கள் நோயால் அனுபவிக்கும் வேதனை எனக்கு புரிகிறது. உங்களுக்கு ஜாதகம் இல்லை என்பதனால் உங்கள் பேரன் ஜாதகத்தை இணைத்து அனுப்பியிருக்கிறீர்கள். அதை வைத்து உங்களது உடல்நலத்தை கணிக்க முடியாது இருந்தாலும் அவனது ஜாதகப்படி அவன் வாழுகிற வீடு வாஸ்து கோளாறுடையதாக இருக்க வேண்டுமென்று தெரிகிறது. 

மிக குறிப்பாக சொல்ல வேண்டுமானால் உங்கள் வீட்டின் வடகிழக்கு மூலை, அதாவது சனிமூலை, ஈசான்யமூலை என்று அழைப்பார்களே அந்த பகுதி முற்றிலுமாக அடைபட்டு காற்று உள்ளே வரமுயாதவாறு இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். அப்படி இருந்தால் தான் பெண்களுக்கு தீராத வயிற்று வலி தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு செல்வார்கள் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. எனவே உங்கள் வீடு அப்படி இருந்தால் அதை உடனடியாக மாற்றி அமையுங்கள். அமைக்க வசதி இல்லாவிட்டால் வேறு வீட்டை வாடகைக்கு அமர்த்தி கொள்ளுங்கள். 

உங்களுக்கு இருக்கும் பிரச்சனை இந்த ஒரே காரணத்தினால் தான் வந்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். ஒருவேளை நீங்கள் இதை மாற்றாமல் மருந்து மாத்திரைகளால் குணமாகி விட்டால் இதே போன்ற நோய் உங்கள் மருமகளை பீடிக்கும் எனவே நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து நல்லபடியாக வாழ முயற்சி செய்யுங்கள் நாராயணன் கைகொடுப்பான்.



Contact Form

Name

Email *

Message *